Friday, July 31, 2015

அதிரை SSM அணி தோல்வி


அதிரை SSM குல்  முஹம்மது கால்பந்து அணி நடத்தும் 15 ம் ஆண்டு மற்றும் இளைஞர் எழுவர் கால்பந்து கழகம் நடத்தும் 21 ஆண்டு கால்பந்து தொடர் போட்டி அதிரை ITI மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கரம்பயம்  மற்றும்  SSM குல் முஹம்மது அணியும் விளையாடி  தலா ஒரு கோல் அடித்தன இதனால் ஆட்டம்  சமநிலையில் முடிந்தது. பின்னர் டிரை பிரேக்கர் முறையில் கரம்பயம் அணி வெற்றி பெற்றது. 

அதிரையில் அப்துல் கலாமுக்கு காயிஃப் தொழுகை

மறைந்த முன்னாள் ஜனாதிபதி மர்ஹும் அப்துல் கலாம் அவர்களுக்கு  இன்று அதிரை மொய்தீன் ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்கு பின்னர்  காயிஃப் ஜனாஸா தொழுகை நடைபெற்றது,இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
மறைந்த யாக்கூப் மேமன், அப்துல் கலாமுக்கு காயிஃப் ஜனாஸா!!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்பாவியாக கைது செய்யப்பட்ட யாக்கூப் மேமனுக்கு நேற்று இந்திய அரசாங்கம் தூக்கு தண்டனை விதித்தது.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்க்கும் இவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத அப்பாவி முஸ்லிம் யாக்கூப் மேமன் தான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என புரியவைப்பதற்காக இந்திய அரசாங்கத்தையும், நீத்துறையையும் நம்பி சரணடைந்தார்.

அவர் சொன்ன உண்மை கருத்துக்கு மதிப்பிலாமல் நேற்று காலை 7 மணியளவில் தூக்கிலிடப்பட்டார்.

இதனையடுத்து இன்று சென்னை மக்கா பள்ளியில் ஜும் ஆ தொழுகைக்கு பிறகு அவருக்காகவும், மறைந்த முன்னாள் ஜானாதிபதி APJ அப்துல் கலாம்
ஆகியோருக்காக காயிஃப் ஜனாஸா தொழுகையும் அவர்களது மறுமை வாழ்விற்காக து ஆவும் செய்யப்பட்டது.

இதில் 1600 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

கலாம் இறுதி சடங்கில் உதவிய அதிரையர்கள்

மறைந்த  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில்நேற்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

மரியாதை செலுத்துவதற்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸாவில் கலந்துகொள்வதற்காக அதிரையிலிருந்து புறப்பட்டு சென்ற காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, ரெட் கிராஸ் அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், முஹம்மது மற்றும் அதிரை நியூஸ் நிறுவனர் நிஜாம் ஆகியோர் இந்தியா முழுவதும் வந்திருந்த பொதுமக்களுக்கு தானாக முன்வந்து உதவினார்கள். 

குறிப்பாக கூட்டத்தில் ஏற்படும் தள்ளு முள்ளுவை தவிர்க்க உதவினர். ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தின் முகவரியை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் ஜனாஸா தொழுகையின் போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை கட்டுப்படுத்தினர். இரவு முழுவதும் கண் விழித்து இந்த பணிகளை மேற்கொண்டனர்.


ஒவ்வொரு மாணவச் செல்வங்களும் மக்கள் ஜனாதிபதி Dr.அப்துல் கலாமைப் போல் மாறுவார்களா?


மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் நேற்று (30/07/2015) பகல் 11 மணிக்கு மேல் அவரின் சொந்த ஊராகிய இராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது, லட்சக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு இறுதி மாரியாதை செலுத்தினர். இஸ்லாமியர்கள் பலர் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர். இதை உலகமே பல ஊடகத்தின் வாயிலாக பார்த்தது.

அவரால், சாதிக்கப்பட்ட சாதனைகள், செய்து முடிக்கப்பட்ட வேலைகள், எழுதப்பட்ட தத்துவ வரிகள், வழங்கப்பட்ட  அறிவு நெறி முறைகள், இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். அவர் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மாணவச் செல்வங்களுக்காகவும் தம் வாழ்நாளெல்லாம் பாடுபட்டதை இந்த நாடு மறக்காது. அவரைப்போல் இனியொருவர் பிறந்து வருவாரா?

அண்மைக்காலமாக நமதூரில் படிப்பில் பல மாணவச் செல்வங்கள் நன்கு படித்து, நன் மதிப்பெண்களையும் பெற்று, அதோடு நல்விருதுகளையும் பெற்றதை இந்த ஊர் மட்டும் இல்லை இந்த உலகத்தில் வாழும் தமிழ் கூறும் நல்லுள்ளங்களும் மறக்காது.

அதிரை மாணவச் செல்வங்களே, நீங்கள்தான் அதிரையின் தூண்கள். நீங்கள் படித்து பட்டம் பெற்று பல விருதுகளை பெற்றால் மட்டும் போதாது, நீங்கள் படணும். அதாவது இந்த நாட்டுக்காக பாடுபடாவிட்டாலும், இந்த ஊருக்காக பாடுபடணும்.

உங்களில் எத்தனைபேர் மக்கள் ஜனாதிபதி Dr.அப்துல் கலாமைப் போல் மாற தயாராக இருக்கின்றீர்கள்?

உங்களை, நீங்களே நன்கு தன்னைத்தானே ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்குள் பிறக்கும் அந்த உந்து சக்தி. (இன்ஷா அல்லாஹ்)

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Thursday, July 30, 2015

நபிகள் நாயகத்துடன் இணைத்து அப்துல் கலாமை சித்தரித்து பேனர் விளம்பரம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்ததையொட்டி இந்திய முழுவதும் கண்ணீர் அஞ்சலி ,பிராத்தனைகள் ,அஞ்சலி போஸ்டுகள் என நாடுமுழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது .அதனை தொடர்ந்து இராமேஸ்வரத்தில் நபிகள் நாயகத்துடன் இணைத்து அப்துல் கலாமை சித்தரித்து வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து காவல் துறையினர் பேனரை அகற்றினர் . ---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
யாகூப் மேமனின் உடல் அடக்கம் (படங்கள் இணைப்பு )

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் உடல் சந்தன்வாடியில் உள்ள படா கபர்ஸ்தானை அடைந்துள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் மத்திய சிறையில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை அவரின் உறவினர்கள் 7 பேர் பெற்றுக் கொண்டனர்.

மேமனின் உடல் விமானம் மூலம் நாக்பூரில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டது. அவரது உடல் மும்பை மாஹிம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மேமனின் வீட்டுக்கு வெளியே ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். மேமனின் உடல் அவரது வீட்டில் இருந்து சந்தன்வாடியில் உள்ள படா கபர்ஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது .அதன் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது .இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 
அப்துல் கலாம் மறைவுக்கு அதிரையில் அமைதி பேரணி

முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாம் மறைவையொட்டி அதிரையில் இன்று காலை அமைதி ஊர்வலம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கியது .இந்நிகழ்வில் பள்ளி மாணவ/மாணவிகள் ,மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் . 
மீண்டும் இயங்குமா நலக்கூடம் - செக்கடி பள்ளி நிர்வாகத்திற்கு கோரிக்கை

அதிரை செக்கடி மேட்டில் இருக்கும் ரேஷன் கடை அருகே கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு .ரங்கராஜன் அவர்களால் தொகுதி நிதியில்  சமுதாய நல கூடம் ஒன்று கட்டப்பட்டு அப்பகுதி இளைஞர்கள்   உடற்பயிற்சி  சாதனங்கள் அமைத்து  உடற்பயிற்சி செய்து வந்தனர் அதனை தொடர்ந்து காலபோக்கில் சமுதாய நலக்கூடம் சரிவர இயங்கததால்  நீண்ட நாட்களாக  பூட்டியே கிடந்தது .இந்த இடம் செக்கடி பள்ளி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது .அதன் பின்னர்  இந்த இடம் சமிப காலமாக அதிரை வணிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததே நிதர்சனமான உண்மை .

சமிபத்தில் பூட்டி கிடந்த இவ்விடத்தில் டிரவேல்ஸ் நிறுவனம் அமைப்பதற்காக பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நல கூடத்தின் தோற்றத்தை மாற்றி டிரவேல்ஸ் நிறுவனம்  அமைப்பதற்கு ஆயத்த பணியில் இறங்கினார் டிரவேல்ஸ் நிறுவனர் .அதன் பிறகு  இந்த செய்தி அதிரையில் இருக்கும் சகோதர ஊடகத்தில்  செய்தியை வெளிவந்தது .அதனை தொடர்ந்து அதிரையில் இருக்கும் அரசியல் பிரமுகர் ஒருவர் இச் செய்தியை திரு .ரங்கராஜன்  MLA அவர்களிடம் எடுத்துரைத்த பிறகு நல கூடத்தில் டிரவல்ஸ் நிறுவனம் அமைப்பதற்க்கான பணி முற்றிலும் கைவிடப்பட்டது .இருப்பினும் பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் தனியார் நிறுவனங்களுக்கு வாடைகைக்கு விட ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது .அதன் அடிபடியில் தொடர்ந்து மீண்டும் நலக்கூடத்தில் வர்ணம் பூசும் பணியில் இறங்கினார்கள் தனியார் நிறுவனத்தினர் .

அதனை தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு மக்களுக்காக கட்டப்பட்ட இடத்தை தனியாருக்கு கொடுக்க கூடாது என கூறியதை தொடர்ந்து மீண்டும் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது .மக்களுக்கு கட்டப்பட்ட இடம் எந்த பயனும் இல்லாமல் இருப்பதால் செக்கடி பள்ளி நிர்வாகம் மக்கள் பயன்பெறும்  விதத்தில் சமுதாய நலக்கூடத்தை அமைத்து கொடுக்க வேண்டும் ,அல்லது பள்ளி மாணவர் பயன்பெறும் விதத்தில் டியூஷன் சென்டர்  போன்றவையாவது அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கருத்தாக இருக்கிறது .
                                      
                                      தோற்றம் மாறிய நலக்கூடம் 

யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டார்

இந்த வழக்கில் முக்கிய நபர்களின்  ஒருவரான யாகூப் மேமன், பாகிஸ்தானில் இருந்து வந்து நேபாளத்தில் இந்திய அதிகாரிகளிடம் சரணடைந்தவர். தம் மீது எந்த குற்றமும் இல்லை என்பதற்காக யாகூப் மேமன் சரணடைந்திருந்தார். அத்துடன் மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக பல்வேறு தகவல்களையும் வழங்கியிருந்தார்.  இருப்பினும் மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் ஜனாதிபதியிடம் யாகூப் மேமன் கருணை மனுவைத் தாக்கல் செய்தார். இக்கருணை மனுவும் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி நிராகரிக்கப்பட்டது. 


 இதனைத் தொடர்ந்து அவரை வரும் யாகூப் மேமன் இன்று தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டது. ஆனால் யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்று 300க்கும் மேற்பட்ட பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மரண தண்டனையை எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாகூப் மேமனுக்கு கருணை காட்ட வேண்டும் என்று மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த நிலையில் கடைசி நேர சட்ட வாய்ப்புகளை, கருணை மனுக்களை யாகூப் மேமன் மேற்கொண்டார். உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமனின் நிவராண மனு மீதான விசாரணையில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான கூடுதல் பெஞ்ச் முன்பு யாகூப் மேமன் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டது. அந்த 3 நீதிபதிகள் பெஞ்சும் யாகூப் மேமனின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசகர் ராவும் யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரித்தார். அப்போது ஜனாதிபதியும் தம் முன் உள்ள யாகூப் மேமனின் கருணை மனு மீது முடிவெடுக்க நேற்று இரவு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் மிக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தமது கருணை மனு மீது இரவோடு இரவாக ஜனாதிபதி முடிவெடுக்கக் கூடாது எனக் கூறி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் ஜனாதிபதியும் மேமனின் கருணை மனுவை நிராகரித்தார். இந்நிலையில் மேமன் தாக்கல் செய்த மனு மீது இன்று அதிகாலை 2.30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் விசாரணை நடைபெற்றது. 

உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுபோன்ற அதிகாலையில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது இதுவே முதல் முறை. அப்போது, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தூக்கு தண்டனையை 14 நாட்களுக்கு நிறைவேற்றக் கூடாது என்று மேமன் தரப்பில் வாதிடப்பட்டது.      மேமன் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் வாதாடினார். விடிய விடிய நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் அதிகாலை 4.58 மணிக்கு யாகூப் மேமனின் கடைசி சட்ட முயற்சியையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. யாகூப் மேமனின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் யாகூப் மேமனுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து இன்று காலை யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 6.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்னராக அவரை உறவினர்கள் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு புத்தாடைகள் கொடுக்கப்பட்டன. 

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நாக்பூர் சிறையை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்றுதான் பிறந்த நாள் (53 வயது) என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் உறுதி.. யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு 30 நிமிடங்கள் கழித்து மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்தனர். பின்னர் காலை 7.01 மணிக்கு யாகூப் மேமன் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்து மருத்துவர்கள் அறிவித்தனர். முதல்வர் அறிக்கை தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 11 மணியளவில் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வரின் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது. 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
அப்துல் கலாம் மறைவையொட்டி!?


முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மறைவு உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராமேஸ்வரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உலகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அப்துல் கலாம் இறுதிச்சடங்கு இன்று (30-07-2015) வியாழக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு,  என்னுடைய ஆக்கத்துக்கு இன்று விடுமுறை.

வழக்கம் போல் இன்ஷா அல்லாஹ் நாளை முதல் தொடர்ந்து வெளிவரும்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Wednesday, July 29, 2015

அதிரையை கடந்து செல்லும் அரசு அதிகாரிகள் படை!நாளையதினம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தவதற்காக வேண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ராமேஸ்வரத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அதிரை ஈசிஆர் சாலையில் உயர் அதிகாரிகளின் கார்கள் கடந்து செல்லுகின்றன. இதனால் அதிரை பகுதி எந்நேரமும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டி அதிரையர்கள் பேருந்துகளில் படையெடுத்து வருகின்றன.

பேராவூரணியில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமுமுக சார்பில் யாக்கூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி இன்று மாலை 4.30 மணியளவில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டதிற்க்கு I.M.பாதுஷா MBA.,
(மாவட்ட செயலர், தஞ்சை தெற்கு) அவர்கள் தலைமை வகிக்க , (தமுமுகவின் மூத்த தலைவர்) S.ஹைதர் அலி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

இவ்வார்பாட்டத்தில் பட்டுக்கோட்டை,
அதிராம்பட்டினம், மதுக்கூர் போன்ற ஊர்களில் இருந்து 250 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.