Wednesday, September 30, 2015

திமுகவின் முகவர்கள் கூட்டம்

திமுகவின் பட்டுக்கோட்டை சட்டமன்ற வாக்குசாவடியின் முகவர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டையிலுள்ள ராஜா மஹாலில் நடைபெறவுள்ளது.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
கண்டுகொள்ளாத பேரூராட்சி! களத்தில் இறங்கிய இளைஞர்கள்!!!

 நேற்று அதிரையில் பெய்த கனமழையால் முத்தம்மாள் தெருவிலிருந்து கீழத்தெரு செல்லும் சாலையில் தண்ணீர் கட்டி பெரும் இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இது குறித்து பேருராட்சி நிர்வாகத்தின் சார்பில் யாரும் பார்வையிடாமல் புறக்கணிக்க பட்டுள்ளது.

 இதையடுத்து அங்குள்ள சமூக அக்கரை கொண்ட இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து கட்டி இருந்த தண்ணீரை கால்வாய் அமைத்து வடிகட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியில் பேரூராட்சி யின் சார்பில்  வந்து சரி செய்யும் பணியை முடித்தனர். ஆனாலும் இந்த வடிகட்டும் பணிகளின் பெரும் பங்கை அங்குள்ள இளைஞர்களே செய்தனர். பேரூராட்சியின் மெத்தன போக்கிற்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

தகவல் மற்றும் புகைப்படங்கள் : சரன் அதிரை எக்ஸ்பிரஸ்

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
இஸ்லாமிய திருமணங்களும், இன்றைய முஸ்லிம் சமுதாயமும்!!அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

"இன்றைய இளைஞர்களின் சிந்தனை போக்கு" எனும் கட்டுரையை தொடர்ந்து வல்ல நாயன் எனக்கு அடுத்த கட்டுரையை எழுதும் வாய்ப்பை தந்திருப்பத்தின் விளைவே எனது இந்த அடுத்த கட்டுரை.. (எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..) இந்தக் கட்டுரை தனி நபரை குற்றம் சுமத்துவதற்கோ,  தாக்கி பேசுவதற்கோ எழுதவில்லை. சரி வாங்க கட்டுரையோட பயணிப்போம்...

   அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. 

ஆனால் இன்று எமது முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் என்ற விடயத்தை பார்க்கும் போது எல்லாம் தலைகீழாக உள்ளதை காண்கின்றோம். பெரும்பாலான முஸ்லிம்கள் அதாவது ஆலிம்கள் முதல் ஆபிதுகள் வரை, அறிஞர்கள் முதல் அறிவிலிகள் வரை, பாமரர்கள் முதல் பாவிகள் வரை அனைவரிடம் திருமணம் என்ற இந்த சுன்னத்தான அமலை பார்க்கும் போது அல்லாஹ்வினதும், ரஸுலினதும் திருப்பொருத்தத்தை பெறுவதற்கு பதிலாக இப்லீசினதும் யூத நஸாராக்களினதும் பொருத்தத்தை பெறக்கூடியதையே காணக்கூடியதாக உள்ளது.

முதலில் திருமணம் செய்யப் போகும் மணமகன், மணமகள் அல்லது மணமக்களின் பெற்றோர்கள் இவர்களின் எண்ணங்களை (நிய்யத்தை) பார்க்கும் போது, உலக ஆசையும் உலக ஆதாயமுமே முக்கிய நோக்கமாக உள்ளது.

(ஆண்) அல்லது மணமகனின் நோக்கம்:

இன்று சில ஆண்களுடைய நோக்கம் செல்வ செழிப்புள்ள, காணி, சீதனம், சொத்து, அழகுள்ள பெண்களை திருமணம் செய்யவேண்டும். அது மட்டுமல்ல பெண் வீட்டாரிடம் கடை அல்லது வாகனம், போன்றவைகளை கேட்டு பெற வேண்டும். மேலும் கடை அல்லது வீடு, காணி போன்றவைகளை தன் பெயரில் எழுதி கேட்க வேண்டும். இது போன்ற ஹுப்புத் துன்யாவின் எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்கள் எதை விரும்ப சொன்னார்களோ அதை விட்டு விட்டு இப்லீஸ் எதை விரும்புகிறானோ அதையே இவர்கள் விரும்புகிறார்கள். 
நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
  •  அவளது செல்வத்திற்காக.  
  •  அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 
  • அவளது அழகிற்காக.   ​ 
  • ​அவளது மார்க்க (நல்லொழுக்கத்திற்காக) 
​ஆகவே மார்க்க  (நல்லொழுக்க)ம்   உடையவளை  (மணந்து)  வெற்றி  அடைந்து  கொள்! (இல்லையேல்)  உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : ஸஹிஹுல் புகாரி – 5090 ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்க வேண்டியது மார்க்க பக்திதான், மார்க்க பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்வோருக்கு இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும். இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்கள் வெற்றிக்கொள் என்று கூறியுள்ளார்கள். அல்லாஹ்வையும், ரஸுலையும் நேசிக்கக் கூடிய மார்க்க பக்தியுள்ள பெண்ணிடம் நற்குணம் இருக்கும், தக்வா இருக்கும், நற்பண்புகள் இருக்கும். அதனால்தான் 
நாயகம் (ஸல்) அன்னவர்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினார்கள். 

ஆனால் இன்று அனேகமான ஆண்கள் குறிப்பாக தங்களை முஸ்லிம் என்று கூறிக்கொள்பவர்கள், முஃமின் என்று கூறிக்கொள்பவர்கள், மௌலவி அல்லது ஆலிம் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் சிலர், ஆஷிகே ரஸுல் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் சிலர், ஆபிதுகள் என்று கூறிக்கொள்ளும் சிலர், நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்களுக்காக உயிரை தியாகம் செய்வோம் என்று கூறிக்கொள்பவர்கள் கூட திருமண விஷயத்தில் இவர்களை பார்க்கும் பொழுது, இவர் ஒரு முஸ்லிமா? என்ற சந்தேகம் எழுகிறது. 

ஏனெனில் நாயகம் (ஸல்) அன்னவர்கள் ஒரு பெண்ணிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறினார்களோ, அதை பரிபூரணமாக உதாசீனம் செய்துவிட்டு, நாயகம் நாயகம் (ஸல்) அன்னவர்கள் எதை எதிர்ப்பார்க்க கூடாது என்று கூறினார்களோ, அதை இவர்கள் எதிர்ப்பார்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்)அன்னவர்களின் வார்த்தையை இவர்கள் புறக்கணித்து விட்டு, இப்லீஸின் வார்த்தைக்கு இவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். 

மேலும்அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் :
பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் கொடுத்துவிடுங்கள் என்று கூறுகின்றான். அல் குர்ஆன் (4:4) 

ஆனால் இன்று சிலர் மகிழ்ச்சியாக மஹரை கொடுப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியாக சீதனம் வாங்குவதையே காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளைக்கு மாறு செய்து விட்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் முஃமின்கள் என்றும் கூறி திரிவதை பார்க்கும் போது வேடிக்கையாகவும், கவலையாகவும் உள்ளது. 

இன்றைய காலக்கட்டத்தில் இஸ்லாமிய திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸுலினதும் கட்டளைக்கு மாற்றமாக நடைபெறுவதினால் இன்று குடும்பங்களில் பரக்கத் இல்லை, ஒற்றுமை இல்லை, புரிந்துணர்வு இல்லை அதுமட்டுமல்ல நீதிமன்றங்களில் விவாகரத்து (Divorce) வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து மலைப்போல் உள்ளது. இவைகளுக்கு காரணம் அல்லாஹ்வும், ரஸுலும் ஏவியவைகள் புறக்கணிக்கப்படுகின்றது. 

அல்லாஹ்வும், ரஸுலும் விலக்கியவைகள் எடுத்து நடத்தப்படுகின்றது. திருமணங்களை பள்ளிவாசல்களில் வைக்க வேண்டும் என்பது நபிகள் நாயகம் முஹம்மது  (ஸல்) அன்னவர்களின் கட்டளை. 

ஆனால் இன்று முஸ்லிம்கள் திருமணங்களை வைப்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், திருமணங்களில் ஆடல், பாடல், ஆண், பெண் கலத்தல் போன்றவை மார்க்கத்தில் விலக்கப்பட்டுள்ளது.ஆனால் இன்றைய திருமணங்களில் இவை அனைத்துமே உள்ளது. 


இன்று நாம் காதுகளினால் கேட்கிறோம், 7 வருடம் மத்ரஸாவில் ஓதி மௌலவி பட்டம் பெற்ற மவ்லவிமார்கள் ஒரு சிலர் வெளிநாடுகளில் தொழில் செய்துக்கொண்டு அவர்கள் மணமகள் தேடுகின்றார்கள், என்ன நிபந்தனையின் பிரகாரம் என்றால், மார்க்கப்பற்று இதுபோன்ற இஸ்லாமிய நிபந்தனையின் பிரகாரம் அல்ல மாறாக மணமகள் அபாயா அணிய கூடாது, தலையில் முக்காடு போட கூடாது இது போன்ற நிபந்தனையுடன் மணமகள் தேடுகிறார்கள். இவர்களை மௌலவி என்று சொல்வதா அல்லது வேறு பெயர்கொண்டு அழைப்பதா என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள். 

ஆலிமின் நிலைமை இப்படி இருக்கும் போது பாமரனின் நிலைமை எப்படி இருக்கும்? அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்! இப்படி ஏராளமாக கூறிக்கொண்டே போகலாம். இன்று அனேகமானவர்கள் திருமணம் என்ற ஸுன்னத்தை செய்ய போய் (ஹராத்தை) செய்வதையே காணக்கூடியதாக உள்ளது. 

இன்ஷா அல்லாஹ் இந்தக் கட்டுரையின் அடுத்த தொடர்ச்சி "பெண்  அல்லது  மணமகளின்  நோக்கம்".. சந்திப்போம்..!

ஆக்கம்,
(அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்)

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
மகிழச்சியான, காணாமல் போன நாட்கள் கண்டிப்பாக மீண்டும் கிடைக்காது.....


மகிழச்சியான,

காணாமல் போன நாட்கள்

கண்டிப்பாக மீண்டும் கிடைக்காது.....

*

எனவே, 

போகும் போதே

ஹலாலான முறையில்

வாழ்க்கையை சுவைத்து விட்டு செல்...

*

அப்படி வாழ்க்கையை சுவைக்க

தெரியா விட்டால்

யாரையும் குறை கூறாதே!?.

*

நாளைய பொழுது

நமதென்பது நிச்சயமில்லை...

*

வாழ்க்கை முழுவதும் கஷ்டம். என்றாலும்,

கிடைக்கும் சந்தோசத்தை நழுவ விட்டு விடாதே.

*
*
*
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Tuesday, September 29, 2015

தண்ணீரில் மிதப்பது கப்பல் அல்ல! பிலால் நகர்!அதிரை அருகே அமைந்துள்ள பிலால் நகர் என்னும் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம் என்றும் நம்மை கண்ணீர் சிந்தவைகின்றன. மனிதகுலமே மழைக்காக ஏங்கும் பொழுது இவர்களோ மழை வந்துவிடுமோ என அச்சம் கொள்கின்றனர். அரசு இயந்திரம் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் இப்பகுதியின் மீது அக்கறை செலுத்துவதில்லை. 

இதனை பிரதிபலிக்கும் விதமாக நேற்று இங்கு பெய்ந்த சிறுமழையில் கூட முழுநகரே நீரில் சிக்கிதவித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இங்கு சுற்றிலும் முறையான வடிகால் வசதி இல்லாததே ஆகும். ஆண்டுதோறும் நாங்கள் இதனை சரிசெய்து தருகின்றோம் என கூறிவிட்டு நாட்கள் கடந்ததும் மறந்துவிடுகின்றனர் பல அரசியல்வாதிகள். பெயருக்கு மக்களின் கோபத்தை தவிர்க வேண்டும் என்பதற்காக சின்னசிறு வேலைபாடுகளை மட்டும் பெயரளவில் செய்கின்றனர். 

இங்கு சாலைவசதி என்பது அறவே கிடையாது. அன்றும் சரி! இன்றும் சரி!! ஆட்கள் மாறினாலும் இங்கு ஏனோ காட்சிகள் மட்டும் மாறுவதில்லை!உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள்...!!! ‪


முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.
இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.
மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால்   எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.
இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன. பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒரு முறை மட்டும் காய்த்து கனியாகும். செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.
இந்த நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

அதிரையில் இடியுடன் கூடிய மழை


அதிரையில் கடந்த நாட்களாக மழை பெய்து வருகிறது, இன்று மாலை முதல் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை சில தினங்களாக குளிர்ந்து காணபடுகிறது.
மக்கள் வாழ முடியாத பகுதியாக மாறி வருகிறதா மண்ணடி ???

சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதியாக இருந்து வரும் மண்ணடி.இங்கு அரசு துறை,வணிக சம்மந்தமான அணைத்து அம்சங்களும் நிறைந்த பகுதி.இங்கு அணைத்து மக்களுக்கும் தொழில் துறையில் பலரும் வளர்ச்சி அடைய முக்கிய பகுதியாக திகழும் மண்ணடி  பகுதியில் குறிப்பாக அதிராம்பட்டினம்,கிழக்கரை,தொண்டி,காயல்பட்டினம்,அம்மாபட்டினம் போன்ற கடல் சார்ந்த மக்கள் இங்கு தொழில் ஸ்தாபனம்,பிள்ளைகளின் படிப்புகளுக்காக வாடகை வீடுகள்,சொந்த வீடுகள் ஏற்படுத்தி கொண்டு வசித்து வருகிறார்கள்.
இந்த ஊர் மக்களை பொருத்தமட்டில் வசதிகள் கூடினாலும் மன்னடி பகுதியை விட்டு அடம்பர பகுதிக்கு செல்ல சற்று தயக்கமான ஒன்று.இந்நிலையில் மண்ணடி ஒரு சில பகுதியில் உப்பு தண்ணீர் வந்த நிலையில் காலபோக்கில் சுனாமி வந்த மாற்றத்திற்கு பிறகு தண்ணீரின் சுவை மாறி  மண்ணடி சுற்று வட்டார முழுவதும் வாயில் வைக்க முடியாத அளவிற்கு உப்பின் விகிதம் அதிகரித்து மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தண்ணீர் மாற்றம் கண்டு உள்ளது.இதனால் மண்ணடியில் வாழ்வாதாரம்,தொழில்,பிள்ளைகளின் படிப்பு என்று சொல்லிக்கொண்டு இங்கு வசிக்கும் பெரும்பான்மையான குடும்பத்தினர் சொந்த ஊருக்கு செல்லும் நிலையில் தற்போது மண்ணடியில் நிலவி வருகிறது.

சொந்த ஊரை மறந்து இருக்கும் இவர்களுக்கு தாய் ஊரின் அருமை இப்போது உணருவார்கள் என்பதற்கு எந்த ஒரு மாற்று கருத்தும்  இல்லை. 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
அப்துல் கலாம் பேரன் பிஜேபியில் இணைந்தார்

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம்  பாஜகவில் இணைந்துள்ளார். 

இன்று டெல்லி சென்ற அவர் அங்கு பாஜக தலைவர் அமீத் ஷாவை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், எம்.பி. மகேஷ் கிரி ஆகியோர் உடன் இருந்தனர். ஷேக் சலீ்ம் ஏன் அரசியலில் சேரும் முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. கலாமின் மூத்த அண்ணனான 99 வயதான முகம்மது மீரா லெப்பையின் மகன் வழிப் பேரன்தான் சலீம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் நடைபெற்ற சாலைமறியல்! 29 பேர் கைது!காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்பின்படி தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வழியுறுத்தி கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை காளிதாஸ் அவர்கள் தலைமையில் அதிரை பேருந்து நிலையம் அருகே சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பொழுது கோரிக்கையை வழியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன. இதனையடுத்து பாதுபாப்பு அதிகாரிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 9 பெண்கள் உள்ளிட்ட 29 பேரினை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து மாலை 5.30 மணியளவில் விடுதலை செய்தனர். 
காமிராவுக்கு குறுக்கே வந்த பேஸ்புக் ஓனர் - டென்ஷன் ஆனா மோடி (video)

வீடியோ, போட்டோ பிரியரான பிரதமர் நரேந்திரமோடி, உலகில் பலருக்கும் பப்ளிசிட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் பேஸ்புக் தலைவர் மார்க் சகர்பர்க்கின் கையை பிடித்து இழுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த வீடியோ, வைரலாக பரவி வருகிறது. ---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

அதிரையில் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாபெரும் 7 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி வரும் 2-10-2015 அன்று காட்டுப் பள்ளி மைதானத்தில்  நடைபெற இருக்கிறது. 


பணம் கொடுத்தும் வேலை நடக்கவில்லை! 15வது வார்டு உறுப்பினரின் மெத்தனம்!அதிரை 15வது வார்டு கீழத்தெரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்குமுன் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த சிமெண்ட் குழாய் சரக்கு லாரி ஏறியதினால் முற்றிலுமாக உடைந்தது. 

இதனையடுத்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் மாற்று குழாய் வாங்கி கொடுத்தும் அதனை பொருத்தாமல் வார்டு உறுப்பினர் லத்தீப் நீண்டகாலமாக கிடப்பில் போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நாம் விசாரித்த வகையில் கீழத்தெரு மற்றும் ஜும்மா பள்ளியினை இணைக்கும் பிரதான சாலையாக இது கருதப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இவ்வழியாக கிரேனட் கல் இறக்கவந்த சரக்கு லாரியினை அப்பகுதி மக்கள் இவ்வழியாக வர வேண்டாம் என முதலில் எச்சரித்துள்ளனர். அதனையும் பொருட்படுத்தாமல் லாரி அவ்வழியாக கடந்து சென்றதால் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த சிமெண்ட் குழாய் முற்றிலுமாக சேதமடைந்தது. 

இதனையடுத்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் புதுகுழாய் மற்றும் அதனை பொறுத்துவதற்கான பணத்தினை வார்டு உறுப்பினர் லத்தீப் அவர்களிடம் கொடுத்துள்ளனர். ஆனால் இன்றுவரையிலும் பணம் கொடுத்தும் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுவது அப்பகுதி வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் மாற்று குழாய் பொறுத்தப்படாமல் இருப்பதினால் கழிவுநீர் சாலைகளில் ஆறுபோல் ஓடுகின்றன.

பணம் இல்லாமல் வேலை நடக்கவில்லை என்றால் அரசை குறைகூறலாம். ஆனால் இங்கு பணம் கொடுத்தும் வேலை நடக்கவில்லையே? இவ்வாறான பல சந்தேக கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன. இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் லத்தீப்?பொறுத்துவதற்காக வாங்கப்பட்டுள்ள புதுகுழாய். நீண்டகாலமாகியும் அப்படியே உள்ளது.

வெளிநாட்டில் அனுபவிக்கும் கஷ்டங்களையும், அவமானங்களையும், மன வேதனைகளையும்...வெளிநாட்டில்

அனுபவிக்கும்

கஷ்டங்களையும்,

அவமானங்களையும்,

மன வேதனைகளையும்.....

*
உடுத்தும் ஆடையும்,

பூசிக்கொள்ளும் நறுமணமும்

மறைத்து விடுகின்றது.....
*
*
*
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Monday, September 28, 2015

நாம் மனிதர் கட்சி நிறுவனர் அதிரை தௌபீக் சிறப்புரை

மதுக்கூர் இஸ்லாமிய பேரவை சார்பில் மார்க்க விளக்க பொது கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் அதிரையை  சேர்ந்த தௌபீக் அவர்கள்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  மேலும் இவர் நாம் மனிதர் கட்சியின் நிறுவனர் என்பது  குறிப்பிடத்தக்கது. Sent from Samsung Mobile

அதிரை மருத்துவர் மகன் கார் விபத்தில் மரணம்

பட்டுகோட்டை அருகே உள்ள தாமரங் கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லண்டனில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரபாவதி. பட்டுக்கோட்டை அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வருகிறார். அதிராம் பட்டினத்தில் உள்ள மரைக்கா பள்ளி வளாகம் அருகில்  சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மகன் ஜேஸ்வா (வயது15) மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ம் வகுப்பு படித்து வந்தார்.
காலாண்டு தேர்வு முடிந்ததை முன்னிட்டு, மதுரையில் இருந்து பட்டுக் கோட்டை நோக்கி தங்களது காரில் வந்து கொண்டிருந்தனர். காரை பிரபாவதி ஓட்டி வந்தார்.திருச்சிற்றம் பலம் அருகே உள்ள நெடுவாசல் செக் போஸ்ட் சாலையில் கார் வந்த போது, பட்டுக் கோட்டையில் இருந்து, அறந்தாங்கி நோக்கி சென்ற தனியார் பஸ்சும் காரும் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்டன. இதில், பிரபாவதி காயமடைந்தார். மகன் ஜேஸ்வா மீது காரின் கண்ணாடி குத்தி கிழித்தது. உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட ஜேஸ்வா பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர் பெரிய கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனை திருச்சிற்றம் பலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

source:maalaimalar

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---