Saturday, October 31, 2015

அதிரையில் சுடுகாட்டிற்கு 22 இலட்சம்? ( வீடியோ )
அதிரை மதுக்கூர் சாலையில் உள்ள சுடுகாட்டிற்கு சுற்றுசுவர், போர் மற்றும் சாலை அமைக்க சுமார் 22 இலட்ச ரூபாய் பேரூராட்சி சார்பில் பொதுநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அன்சர்கான் அவர்கள் பொதுமக்களுக்கு தேவையான பல வேலைபாடுகள் இருக்கும் நிலையில் சுடுகாட்டிற்கு 22 இலட்சம் ஒதுக்கீடு செய்ததில் முறைக்கேடுகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அன்சர்கான் அவர்கள் அளித்துள்ள பேட்டி..---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---ADT மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேரலை....


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---அதிரையில் தரமான முறையில் வீடு கட்டிட! KASWA Civil Interior!

தென்தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரமாக திகழும் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நவீனமான முறையில் காலத்திற்கு ஏற்ப தங்களின் கனவு இல்லத்தை கட்டிட எங்களை அணுகவும். 

Head office:
97/6, Radheshyam Apartments,
No:15 Marshall road, Egmore, Chennai 600 008

Branch office: 

KASWA Civil Interior
5- சேர்மன் வாடி, அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு: 99521 39442உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....


1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
-------------------------
இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!
► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!
>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை

மார்க்கத்தை போதிக்கும் ஆலிமாக்கள்

லிமா என்பவர் யார்? குர் ஆன் வசனங்கள், ஹதீதுகள், இஸ்லாமிய சட்டங்கள், வழிமுறைகள், நபிமார்களின் வரலாறுகள், பற்றி முறையாகப் படித்து அறிந்தவர். இஸ்லாமியச் சமுதாயத்திற்கு இஸ்லாம் குறித்த வழிகாட்டியாக இருப்பவர். சுருக்கமாகச் சொன்னால், நபி(ஸல்) அவர்கள் எப்படி இறைவனிடமிருந்து தாம் பெற்ற செய்தியை, தன் உம்மத்துகளுக்கு எத்தி வைத்தார்களோ, அதே பணியை இன்றைய காலத்தில் அதன் வரைமுறைக்குட்பட்டு, தொடர்பவர்கள்தான் ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள்.

ஆளிமாக்களில் பொறுப்புகள் : 

ஒரு மதரஸாவில் சிற்சில மாணவிகளுக்கு குர் ஆன் ஓதக் கற்பித்தல் என்பது மட்டுமே என்பதாகத்தான் மக்களின் புரிதல் இருக்கிறது. இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவித்ததற்கு ஆலிமாக்களின் செயல்பாடுகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. 

ஆலிமாக்களும் ஆசிரியர்களே. பணம் சம்பாதிக்க மட்டுமே உதவுகிற ஏட்டுக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களே ‘குரு’வாக மதிக்கப்படும் இந்நாளில், ‘வாழ்வியல் நெறி’யைப் போதித்து வாழ்க்கையைச் செம்மைப்படுத்தக்கூடிய திறனுடைய ஆலிமாக்கள் அதனினும் மேலானவர்கள். சுருங்கச் சொன்னால், ‘தன் பலமறியா யானை’ போன்ற சூழலில் இருப்பவர்கள் அவர்கள்.

ஆலிமா என்ற சொல், ‘இல்ம்’ – அறிவு என்ற சொல்லை வேர்ச்சொல்லாக உடையது. அறிவை உடையவர்கள் ஆலிமாக்கள். அந்த அறிவைப் பரப்ப வேண்டிய கடமைப்பட்டவர்கள். ”ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன் தரும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பம் முழுதும் கற்றமைக்குச் சமம்” என்பது இந்த வாழ்வியல் நெறி போதிக்கும் கல்விக்குத்தான் சிறப்பாகப் பொருந்தும். 

சமூகத்தின் பெண்கள் 

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அறிவு தேடலில் ஈடுபட்டார்கள். சமூகத் தளங்களில் பணியாற்றியுள்ளார்கள். பொருளீட்டலில் ஈடுபட்டுள்ளார்கள். நபியவர்களின் மனைவியரான கதீஜா(ரலி) மற்றும் ஜைனப்(ரலி) அவர்களும் வியாபாரம் செய்து பொருளீட்டியுள்ளனர். ஆயிஷா(ரலி) அவர்கள் ஹதீதுகள் சேகரித்துக் கொடுத்து, அறிவுப் பணி செய்துள்ளார்கள். அக்காலத்து நபித்தோழியர்கள் எனப்படும் ஸஹாபியப் பெண்கள் பலரும் வீட்டோடு தம் கடமைகளைச் சுருக்கிக் கொள்ளாமல், போர்க்களம் வரை தன் கடமைகளைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட வீரமும், அறிவுச் செறிவும் நிறைந்த வரலாற்றுப் பெருமை கொண்ட சமுதாயத்தில்தான் இன்று பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டியவர்கள்; பிள்ளைகளைச் சிறப்புற வளர்த்துவிடுவது மட்டுமே அவர்கள் கடமை என்று “மாயக்கோடு” வரைய முற்படுகிறார்கள் சிலர்.

இதன் பலன், பெண்களுக்கான துறைகளில்கூட பெண்களே இல்லாமல் போய்விட்டார்கள்!! பெண்களுக்கான துறைகள் என்றதும் அனைவருக்கும் உடன் நினைவுக்கு வருவது, ஆசிரியர் பணி மட்டுமே!! ஆசிரியப் பணி மட்டுமா பெண்கள் பங்கேற்க வேண்டிய துறை? எல்லாருமே ஆசிரியர்கள் ஆகிவிட்டால். சமூகத்தின் மற்ற பணிகளை யார் ஏற்றெடுப்பது?

ஆசிரியர்கள் மட்டுமே சமுதாயத்திற்குத் தேவையானவர்கள் அல்ல. தந்தை - தாய் – குழந்தைகள் – தாத்தா-பாட்டி-சித்தப்பா-சின்னம்மா-அத்தை-மாமா என்று அனைவரும் இணைந்ததுதான் ஒரு கூட்டுக் குடும்பம் ஆகும். அதுபோல எல்லா துறைகளிலும் பெண்கள் பங்களிப்பு இருந்தால்தான் அந்தச் சமூகம் முழுமை பெறும்

ஆலிமாக்கலின் கடமை 

ஒரு சமூகத்திற்குத் தேவையான அத்தனை துறை வல்லுநர்களையும் பெண்களிலிருந்து உருவாக்கித் தரவேண்டியது ஒரு ஆசிரியரின் – ஆலிமாவின் கடமை. ஆலிமாவின் பணி மாணவிகளின் ஆர்வம், திறமை அறிந்து, முறையாகப் பயிற்சியளித்து ஊக்குவிப்பதே.

அதற்கான முதற்படியாக, மாணவிகளிடம் நம் ஸஹாபியப் பெண்களின் வீர வரலாறுகளைக் கூறுங்கள். உம்மு உமாரா என்ற நுஸைபா(ரலி) அவர்கள் போர்க்களத்தில் வாளோடு சுழன்று சுழன்று எதிரிகளை வீழ்த்திய கதைகளைச் சொல்லுங்கள். கவ்லா பின்த் அல் அஸ்வர் , எதிரிக் கூட்டத்தினுள் நுழைந்து போரிட்டதையும், எதிரியால் பிடிக்கப்பட்டதையும், எதிரிப் படைத் தளபதி, தன்னை மணந்து கொள்ளக் கேட்டபோது, “உன்னை என் ஒட்டகங்களின் மேய்ப்பனாகக் கூட வைத்திருக்க இலாயக்கில்லாதவன்” என, துளியும் அச்சமின்றி அவன் முகத்திலடித்தாற்போல் பதிலுரைத்த துணிவை மாணவிகளுக்கு ஊட்டுங்கள். 

உம்முல் மூமின்களின் பொருள் தேடல் முயற்சிகளை விளக்குங்கள். வீட்டுக் கடமைகளோடு, சுய தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டியதை எடுத்துரைத்து தொழிலதிபர்களை உருவாக்குங்கள். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் வெளிநாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி –இறக்குமதி செய்து பெரும் பிஸினஸ் புள்ளியாக இருந்ததைச் சொல்லுங்கள். தொழிலதிபர்களாகி, பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, பீடி சுற்றுதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தொழிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கச் செய்யுங்கள்.

கலீஃபா உமர்(ரலி அவர்கள் மஹர் தொகையைக் குறைக்க முற்பட்டபோது, ”இறைவன் பெண்களுக்குக் கொடுத்த உரிமையைப் பறிக்க நீங்கள் யார்?” என்று கலீஃபாவிடமே எதிர்க்கேள்வி எழுப்பினாரே ஒரு சாதாரணப் பெண் பிரஜை – அத்தைரியம் எப்படி வந்தது அவருக்கு? சட்டங்கள் தெரிந்திருந்ததால் வந்தது!! அதுபோல நாட்டின் சட்டங்களைப் படித்து, அநீதிகளைத் தட்டி கேட்கும் வக்கீல்களை உருவாக்குங்கள்!!

குர் ஆனின் வசனங்கள் அனைத்தும் ஆண்களை நோக்கியே சொல்லப்படுகிறதே, பெண்களை ஏன் குறிப்பிடுவதில்லை என்று உம்மு உமாரா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்பியதும், இறைவன் உடனே பெண்களின் நற்செயல்களும் வீணாவதில்லை என்று குறிப்பிடும் சூரா அஹ்ஸாப் 35 வசனத்தை (33:35) இறக்கித் தந்ததை எடுத்துரைத்து, பெண் தன் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதில் எந்தத் தடையுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்!!

உமர் (ரலி அவர்களின் ஆட்சிக் காலத்தில், மதீனாவில் நகரச்சந்தையை நிர்வாகிப்பவராக “உம் அல் ஷிஃபா” என்ற பெண்மணியை நியமித்திருந்தார். ஆண்களே அதிகம் புழங்கும் வியாபார ஸ்தலத்துக்கு ஒரு பெண்ணைப் பொறுப்பாளராக நியமித்ததன் மூலம், நமக்கு உமர்(ரலி) அவர்கள் சொல்லும் சேதியை மாணவிகளுக்கு எத்தி வையுங்கள். அரசு அதிகாரங்களில் பெண்கள் பங்கெடுக்கக் கூடாது என்று கூவுபவர்களுக்கு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியிலேயே, ஒரு துறைக்குத் தலைவியாக ஒரு பெண் இருந்தார் என்று அழுத்தமான பதிலடி கொடுங்கள்.

இதே உம் அல் ஷிஃபா ஒரு சிறு மருத்துவரும்கூட. இவர்கள் தம்மை நபி(ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட போது, அவரது மருத்துவ அறிவை தன் மனைவியான ஸைனப் (ரலி) அவர்களுக்கு பயிற்றுவிக்குமாறு அறிவுறுத்தினார்கள். பெண் மருத்துவர்களின் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்த அளவு நாம் அறிந்திருந்தால், நம் சமூகம் இன்று எந்தவொரு பிணிக்கும் ஆண் மருத்துவர்களையே நாட வேண்டிய அவலம் நேர்ந்திருக்காதென்பதை மனதில் பதிய வையுங்கள்.

ஏன் ஆலிமாக்கள் 

இதை ஏன் ஆலிமாக்கள் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும். ஒருகணம் சிந்தியுங்கள்: மேற்கூறப்பட்ட உதாரணங்களில், எல்லாமே நபிகளார் காலத்துப் பெண்களாகவே இருக்கின்றனரே, ஏன் சமகாலத்தில் யாருமே இந்நிலைக்கு உயரவில்லையா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா உங்கள் மனதில்? ஆம், பெண்குழந்தைகளைக் கொல்லும் காலமெனினும், இஸ்லாம் தரப்பட்டபோது, இருதரப்பும் அதை முறையாகப் பேணியதால் பெண்ணடிமைத்தனம் இல்லாமலிருந்தது. ஆனால், பெண் சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் இந்நவீன யுகத்தில்தான் பெண்கள் கடமைகளிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். அதுவும் எந்தமார்க்கத்தின் பெயரால் பெண்களின் நிலையை நபிகளார் மேம்படுத்தினார்களோ, அதே மார்க்கத்தின் பெயரால்தான் என்பது எத்தனை இழுக்கானது?

மார்க்கத்தின் பெயராலேயே பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, கடமைகள் உதிர்க்கப்படும்போது, மார்க்கத்தில் இதற்கெல்லாம் எந்தத் தடையுமில்லை என்று உறுதியாக எடுத்துச் சொல்ல மார்க்கம் படித்த ஆலிமாக்களே அதிகம் கடமைப்பட்டவர்கள்!! 

ஆனால், ஆலிமாக்கள் எனும் அந்த சக்தி வாய்ந்த ஒரு தரப்பு, இதே சமூகம் தன்மீதும் கட்டியுள்ள ”இதெல்லாம் பெண்களுக்கு அனுமதிக்கப்படவில்லை” என்கிற மாயக்கயிற்றுக்குக் கட்டுப்பட்டு, இழுத்தால் அறுபடக்கூடிய சிறு கயிற்றால் கட்டப்பட்ட யானை போல ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விழித்தெழுந்து தம் பாதையைச் செப்பனிட்டால் போதும். பின்தொடரும் முஸ்லிம் சமுதாயம் சரியான பாதையில் செல்லத் துவங்கும். 

எந்த வாய்ப்புமே தராமல், வழிவகையுமே செய்துகொடுக்காமல் சமைத்து, உண்டு உறங்கி வீட்டோடு இரு போதும் என்று எல்லாப் பெண்களிடமும் சொல்வது நம் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஒவ்வொருவருக்கும் தன் மனதைக் கொண்டுச் செய்ய வேண்டிய குடும்பக் கடமைகளோடு, தன் அறிவை – திறமையைக் கொண்டு தன் இனத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு என்பதை நபிகளின் இன்றைய வாரிசுகளான ஆலிமாக்கள்தாம் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்க வேண்டும்.

எவ்வாறு 

இல்ம் என்றால் அறிவு என்றறிவோம். இச்சொல், அடிப்படை அறிவு கோல்களான குர் ஆனையும், ஹதீஸையும் மட்டும் குறிப்பதல்ல. அதனோடு, பரந்த உலகறிவு, வரலாற்று ஞானமும் வேண்டும். எல்லாம் சேர்ந்ததே ‘இல்ம்’. எல்லாம் ஒருசேரப் பெற்றவரே ‘ஆலிமா’ ஆவார். ஆகையால், அவர்களது முதற்பணி தம் அறிவை விரிவுபடுத்திக் கொள்வதே.


ஒரு குருவி தன் அலகில் தண்ணீரை அள்ளியதைக் கண்ட கிள்று (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம், “என் அறிவும், உங்கள் அறிவும், இன்னும் படைக்கப்பட்டவைகளின் மொத்த அறிவும் சேர்ந்தாலும், இக்குருவியின் வாயிலுள்ள தண்ணீரைவிட அதிகமானதல்ல” என்று கூறினார்கள். . (Sahih Al-Bukhari, Volume 6, Book 60, Number 251) எனில், நம் அறிவு எத்துணை அற்பமானது என்றுணர வேண்டும்.


இல்ம் என்பது முடிவில்லாதது. படித்துப் பெறுகின்ற பட்டம் தரும் அறிவு சொற்பமானதே. அதனைத் தேடி நம்மை மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அறிவு விரிவடைந்தால்தான், ஆலிமாக்களின் நிலை சமூகத்தில் மெச்சத்தக்க வகையில் அமையும். அவர்களின் அறிவுரைகளும் செவிமடுத்துக் கேட்கப்படும். வழிகாட்டுதல்கள் மதிக்கப்படும். இன் ஷா அல்லாஹ்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
இளைஞிகளை சுற்றும் இளைஞர்கள் - தடம் மாறிய சமூகம்

முன்பெல்லாம் இளம் பெண்கள் வெளியில் நடமாடும் காட்சிகளை காண்பதே அரிதாகும்.  முன் இல்லாத அளவிற்கு இளம் பெண்கள் சகஜமாக  வெளியில் நடமாடும் சூலல் இருப்பதை நாம் நன்கறிவோம். இளைஞர்கள் மத்தியில் மொபெட்டும் மொபைலும் சர்வ சாதரணமாக வளம் வரும் இன்றைய சமூகத்தில் அதை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்தால் நெஞ்சை படபடக்க வைக்கிறது.

அதிரையை பொறுத்த வகையில் கலாசார  சீரழிவு இல்லை என்று மார்தட்டி கொள்ளும் அளவிற்கு இருந்த சமுகம் காலபோக்கில் அதையெல்லாம் தவிடுபொடியாக்கும் அளவிற்கு இன்றைய காலகட்டம் அமைந்துள்ளது.இளைஞர்களில் ஒரு கூட்டம் இளம் பெண்களை குறிவைத்து சுற்றும் அவல நிலை கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுக்குமோ என்று ஐய படவேண்டயுள்ளது  குறிப்பாக பாட சாலைகளுக்கு  செல்லும் இளைஞிகள் அவர்கள்  வரும் வழிகளில் மொபெட்டுகளில் அவர்களை உரசுவது போலும்  அவர்களை சீண்டுவது போலும் அங்கும் இங்கும் உலாவும் இளைஞர்கள். 

இளைஞிகளும் அவர்களின் அசைவுகளுக்கு இசைவது போன்று சிரித்து கொண்டும் அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து செல்வதும் கலாசார சீர்கேட்டை தொட்டு விட்டோமோ என்று என்ன வைக்கிறது.இதில் மற்றுமொரு அம்சம் என்னவெனில் காலபோக்கில் இளைஞிகளும் அந்த இளைஞர்களின் சீண்டலில் மாட்டி காதலில் விழும் அவலநிலை வேறு. 

இது யாரின் தவறு? இளைஞிகளை சுற்றும் இளைஞர்களின் மீதா?... இளைஞர்களின் சீண்டலில் மாட்டும் இளம் பெண்களா??.. அது தான் இல்லை. தங்களின் பிள்ளைகளுக்கு மொபட்டும் மொபைலும் குடுத்து பாட சாலையிலிருந்து வரும் தங்களின் பிள்ளைகளின் ன் நிலை குறித்து கவலை இல்லாத பெற்றோர்கள் செய்த தவறே இது.தங்கள் பிள்ளைகள் ஆசையோடு கேட்டதும் அல்லிகொடுத்து விட்டு அவர்கள் சீரழிந்த பின் அவர்களை குறைகூறும் பெற்றோர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மொபட்டும் மொபைலும் இல்லாமல் இருப்பது இருகைகளும் இரு கண்களும்  இல்லாமல் இருப்பதற்கு சமம்.  அவர்களுக்கு அள்ளிகொடுத்த அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அதை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து அவர்கள் செய்யும் தவறுகளை அழகிய முறையில் எடுத்துரைத்து  அவர்கள் தடம் மாறாமல் செல்வதற்கு சிறந்த வழிகாட்டியாக இருந்திருந்தால் காலத்தை வென்று இருக்கலாம். 

குறிப்பாக பெண்பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவர்கள் ஏதேனும் சீண்டல்களுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்களா என்று அறிவது பெற்றோர்களின் கடமையாகும்.இன்றைய மருத்துவ உலகம் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கென  தனிப்பட்ட முறையில் பல்வேறு அணுகுமுறைகளை வழிகாட்டுகிறார்கள். அவர்கள்  மனரீதியான பிரச்சைனைகள் மற்றும் பாலியல் ரீதியான சீண்டல்களில் சிக்கி தவிப்பதை அறிந்து அதற்க்கு தக்க நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் இன்றியமையாத கடமையாகும்.

குறிப்பாக பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு அருகாமையில் என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு அதற்க்கு எந்த வகையில்  முடியுமோ சட்ட நடவடிக்கையோ அல்லது வேறு விதமான நடவடிக்கை  எடுத்து தங்கள் பள்ளிகளில் படிக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சாணியாய் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு இது போன்ற சீர்கேட்டின் அவல நிலை குறித்து தகுந்த அறிவுரைகளை வழங்கி தங்கள் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சச்சனைகளுக்கு தகுந்த தீர்வு அடையும் வகையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அது தொடர்பான ஈடுபாடுகளில் திசை திருப்ப முயல வேண்டும்.
இதில் நாம் தவறினால் கலாசார சீர்கேட்டை சந்திக்க அதிரை வெகு தூரத்தில் இல்லை என்பது காலத்தின் கட்டாயம்... 


--

அதிரை பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்! இரண்டு கோரிக்கைகள் ஏற்பு! (காணொளி )அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியின் மன்ற கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 17வது வார்டு உறுப்பினர் ரபிக்கா மற்றும் 19வது வார்டு உறுப்பினர் செளதா  ஆகியோர் தங்களின் வார்டு தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாக கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களும் பேரூராட்சி அலுவலகம் முந்திரண்டதால் பதற்றம் ஏற்ப்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட செயல் அலுவலர் முனுசாமி அவர்கள் தங்கள் வார்டின் தற்சமயம் இரண்டு கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதன் காரணமாக முற்றுகை போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது
.


அதிரையில் இன்று மார்க்க விளக்க பொது கூட்டம்.

அதிரையில் இன்று மாலை தகவா பள்ளி அருகில்  அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் மார்க்க விளக்க பொது கூட்டம்.
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
---

Friday, October 30, 2015

அதிரை சுகாதார முன்னேற்றக் கழகத்தினருக்கு வேண்டுகோள்

அதிரை எக்ஸ்பிரஸ் அக்டோபர் மாத இதழின் முதல் பக்கத்தில்  பசுமைபுரட்சி பற்றியும் அதிரை சுகாதார முன்னேற்றக் கழகம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வருவது பற்றியும் செய்தி வெளியானது, மகிழ்ச்சி அளிக்கிறது.

முதலில் அதிரை பகுதியிலுள்ள சீமைக் கருவேல முள் மரங்களை வெட்டினால் மிகுந்த நன்மை தரும்.காரணம், கருவேல மரங்களால் எந்த நன்மையும் கிடையாது.மாறாக, நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி மற்ற மரங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு மழைப்பொழிவை பாதிக்கிறது. மற்ற மரங்கள், மனிதனுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது. கருவேல மரங்களோ ஆக்ஸிஜனை உள்வாங்கிக் கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகிறது. இம்மரங்கள் மற்ற மரங்களால் ஏற்படும் நன்மையை எடுத்துக் கொண்டு தீமையைத் தருகின்றன.

இவ்வூர் பகுதியிலுள்ள குளங்களின் கரையோரங்களில் இம்மரங்கள் ஏராளமாக உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும்.இன்னும் 10 ஆண்டுகளில் கடல் நீர் அதிரை ஊருக்குள் நிலத்தடி நீரோடு கலந்து குடிநீருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

எனவே அதிரை சுகாதார முன்னேற்றக் கழகத்தினர் முதலில் கருவேல மரங்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் சேவையை செய்ய வேண்டும்.அப்படி செய்தாலே அதிரை பகுதி பசுமையாக மாறும் என்பதில் ஐயமில்லை....

                       பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்......நன்றி , வஸ்ஸலாம்.
இப்படிக்கு 
அனீஸ் 
அதிரை சுகாதார முன்னேற்றக் கழகத்தின் விளக்கம் 

மேலும்  இது தொடர்பாக அதிரை சுகாதார முன்னேற்றக் கழக  நிர்வாகியிடம் தொடர்பு கொண்டு பேசிய வகையில்:முதலில் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அனீஸ் என்ற சகோதரர் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்ததற்கு மிக்க நன்றி.இன்ஷா அல்லாஹ் எங்களுடைய சுகாதார முன்னேற்ற கழகத்தின் முக்கிய நோக்கமாக மரம் வளர்ப்பது,கருவேல் மரங்களை அளிப்பது முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.அதற்கான பணிகளை விரைவில் துவங்க உள்ளோம்.நம்முடைய அதிரை இளைஞர்களின் துணையும்   எங்களுக்கு தொடர்ந்து வேண்டும்.    இன்ஷா அல்லாஹ் நம்முடைய அதிரை பசுமையாக உருவாக அனைவரும் ஒன்று நின்று உழைப்போம்  உயர்வோம் இன்ஷா அல்லாஹ்.

அதிரை கடைத்தெரு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற பேருராட்சி காலக்கெடு!

அதிரை பேருந்துநிலையம் முதல் பெரிய ஜும்மா பள்ளிவாசல் வரை உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை சம்மந்தப்பட்டவர்கள் உடனே தானாக முன்வந்து வரும் வியாழக்கிழமைக்குள் அகற்றிகொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி மூலம் காவல்துறை உதவி கொண்டு அகற்றுவார்கள் எனவும் மேலும் இதற்க்கு ஆகும் செலவுகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்தே பேரூராட்சி நிர்வாகம் வசூல் செய்துகொள்ளும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பேருந்துநிலையம் முதல் மகிழங்கோட்டை சாலை பெரிய ஜும்மா பள்ளிவாசல் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தலித் குழந்தைகளை எரித்த சம்பவம்-அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹரியாணா மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த அப்பாவி குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்ற சமூக விரோதிகளை  கண்டித்து அதிராம் பட்டிணம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்  திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர்.ரியாஸ் தொடக்க கண்டன உரை நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து தோழமை கட்சிகளானவிடுதலை சிறுத்தை கட்சியின் அதிரை நகர செயலாளர் .புருசோத்தமன் மற்றும் ஆதி திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிரை நகர தலைவர் தோழர்.சதாசிவம்மற்றும் சமூக ஆர்வளர்,இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர்.ஜியாவுதீன் ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.இறுதியாகஇஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர்.மதுக்கூர் மைதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.பாட்டு கூட பாட கூடாதாமா??என்னமா போங்க மா!!

மது ஒழிப்பிற்காக மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்களே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவரும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான "மக்கள் அதிகாரம்" அமைப்பினர் பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தினர். மக்கள் அதிகாரம் அமைப்பினர் 

"மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகனும் எத்தனை தாலிகள் அறுக்கனும் மூடு டாஸ்மாக்கை மூட்டு" 

எனும் பாடலை வெளியிட்டு அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்தார்கள். இது மட்டுமல்லாது.... " ஊருக்கொரு சாரயம் தள்ளாடுது தமிழகம்... ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸ்ல உல்லாசம்" என்ற பாடல் சில தினங்களாக வாட்ஸ் அப்பில் வெளியானது. இந்நிலையில், இந்தப் பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் திடீர் கைது செய்து செய்தனர்.மல வருது ஊருவா பாட்டுல எடுங்கப்பா

தமிழக பகுதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் அதிரையில் கடந்த சில நாட்களாக மேக முட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அசர் தொழுகைக்கு பின்னர்  பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.  இதனால் அதிரை குளிர்ந்து காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
'நாயகன்' கதைக்கு கருவாகஇருந்த ஹாஜி மஸ்தான் வரதாபாய்

வேலுநாயக்கராக வந்த கமல்ஹாசனை எல்லோருக்கும் தெரியும். 'நாயகன்' கதைக்கு கருவாகஇருந்தவர்தான்  மும்பையின் பிரபல டான் வரதாபாய் என்ற வரதராஜ முனுசாமி முதலியார்.  இப்போதைய மும்பை நிழலுக தாதாக்கள் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா சகீல் போன்றவர்களுக்கெல்லாம் இவரும், ஹாஜி மஸ்தான் என்ற மற்றொரு தமிழரும்தான் முன்னோடிகள்.

              நடிகர் திலீப்குமார்,  அவரது மனைவி சாயீரா பானுவுடன் மஸ்தான் 
மஸ்தான் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர். ஆனால் இவர்களது 'தாதா வாழ்க்கை' தாங்கள் சார்ந்த தமிழ் சமுதாயத்தை காக்கவே பெரும்பாலும் உதவியதாக சொல்லப்படுவதுண்டு.


தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் பிறந்த வரதராஜ முதலியார், 1960-ம் ஆண்டுவாக்கில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதேவேளையில் ஹாஜி மஸ்தான் மும்பை கிராஃபோர்ட் மார்க்கெட்டில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். பின்னர் மும்பை துறைமுகத்தில் போர்ட்டராக வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது ராஜன் மகாதேவ் நாயர் என்பவரும் மும்பையில் தாதாவாக இருந்தார். படாராஜன் என்று அழைக்கப்பட்ட இவரது கும்பலில்தான் முதலில் சோட்டா ராஜன் இருந்து வந்தான். அந்த காலக்கட்டத்தில் மும்பையை பொறுத்த வரை இவர்கள் மூன்று பேரும் வைப்பதுதான் சட்டமாக இருந்துள்ளது. 


ஹாஜி மஸ்தானும், வரதாபாயும் தமிழர்கள் என்ற வகையில் நெருங்கிய நண்பர்கள். தாராவி, சயான், மாதுங்கா பகுதியில் உள்ள தமிழ் மக்களிடம் வரதாபாய் ஹீரோவாகவே வலம் வந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து மும்பை துறைமுகத்தையே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இதனால் கடத்தல் தொழில் மூலம் பணம் கோடி கோடியாக கொட்டத் தொடங்கியது. ஒரு காலக்கட்டத்தில் சிவசேனாவிடம் இருந்து தமிழர்களை காக்கவும் வரதாபாயின் தாதா அடையாளம் உதவியது.

                                                                      வரதராஜ முனுசாமி முதலியார்
ஹாஜி மஸ்தான் பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், மும்பையின் பெரும் தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். தங்கம், வெள்ளி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தலிலும் மோடி மஸ்தானுக்கு பணம் கொட்டியது .வெள்ளை நிற பேண்ட், சட்டை அணிவது ஹாஜி மஸ்தானுக்கு பிடித்தமானது. 'மெர்சிடஸ் பென்ஸ்' காரில்தான் பயணிப்பார். வெளிநாட்டு சிகரெட்டுகளைதான் புகைப்பார். 


கடந்த 2010-ம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான  ஒன்ஸ் அபான் அ டைம்ஹிந்திப் படம்,    மஸ்தான் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான். அமிதாப்பச்சன் நடித்த தீவார்  படமும் ஹாஜி  மஸ்தானை மையமாகக் கொண்டு வெளிவந்ததுதான். இவர்கள் இருவரது தாதா வாழ்க்கையை, 1980-ம் ஆண்டு மும்பை போலீஸ் முடிவுக்கு கொண்டு வந்தது. வரதாபாயின் கும்பலில் இருந்த பலருக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. அதோடு வரதாபாயை என்கவுண்டர் செய்யவும் மும்பை போலீஸ் முடிவு செய்தது. இதனையடுத்து மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த வரதாபாய், அமைதியாக வாழத் தொடங்கினார். ஆனால் ஹாஜி  மஸ்தான் தொடர்ந்து மும்பையில்தான் இருந்தார். கடந்த  1988-ம் ஆண்டு சென்னையிலேயே மரணமடைந்த வரதாபாயின் உடலை ஹாஜி மஸ்தான் தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு சென்றார். ஏனென்றால் மும்பையில்தான் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்பது வரதாபாயின் ஆசை. ஒரு நண்பனாக தனது நண்பரின் கடைசி ஆசையை பூர்த்தி செய்த ஹாஜி  மஸ்தான், 1994-ம் ஆண்டு மரணமடைந்தார்.  

அத்துடன் மும்பையில் தமிழ் தாதா உலகமும் முடிவுக்கு வந்தது! 

கூடுதல் தகவல் 

ஹாஜி மஸ்தான் செய்த உதவி இன்று வரை பேசப்படுகிறது :

தமிழக முஸ்லிம் மக்களுக்கு ஹாஜி மஸ்தான் ஒரு மகத்தான உதவியை செய்தார் .இன்றும் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது . ஹாஜி மஸ்தான்  இருந்த காலத்தில் புனித பயணம் மேற்கொள்ள வேண்டி தமிழக முஸ்லிம்கள் மும்பை நகரத்திற்கு வந்து போதிய இருப்பிட வசதி இல்லாமல் தவித்த நேரத்தில் ஹாஜி மஸ்தான் தமிழக முஸ்லிகளுக்கு பெரிய கட்டிடத்தை கட்டி ஹஜ் யாத்திரை செல்லும் மக்களை அங்கு தங்க வைத்து உணவு உபசரிப்பார் .மும்பையில் வாழ்த்த தமிழ் முக்களுக்காக போராடும் குணம் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையில் பெரும் பங்காக அமைந்தது .


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Thursday, October 29, 2015

மரண அறிவிப்பு (லெ.மு.செ.அகமது கபீர் மரைக்காயர்)நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் லெ.மு.செ. ஹாஜி உமர் தம்பி மரைக்காயர், மர்ஹூம் லெ.மு.செ. ஹாஜி அப்துல் கபூர், மர்ஹூம்  லெ.மு.செ. ஹாஜி. செய்யது அப்துல்காதர், லெ.மு.செ. ஹாஜி கமால் பாட்சா ஆகியோரின் சகோதரரும், அபூபக்கர், சுஹைப், சிராஜ், ஜுபைர் ஆகியோரின் தகப்பனாரும்,  இல்முதீன் அவர்களின் மாமனாரும் அப்துல் ஹாலிக் அவர்களின் தாய்மாமாவுமாகிய லெ.மு.செ. ஹாஜி. அஹமது கபீர் மரைக்காயர் அவர்கள் இன்று இரவு 7.30மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8மணியளவில் மரைக்காபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஷிப்பிங் துறையில் விருதுகள் பெற்ற அதிரையர் நிறுவனம்

சென்னை கார்கோ ஸ்கோப் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு  வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் ஷிப்பிங் துறையல் சிறந்து விளங்கும் சீபோல் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கபட்டது.  
மேலும் இந்த நிறுவனம் அதிரையை சேர்ந்த ஜனாப் ஹாஜி எம்.எஸ்.டி தாஜுத்தீன் மற்றும் அவரது சகோதரர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு பல இளைஞர்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுத்து கொண்டு  இருப்பது குறிப்பிடத்தக்கது. 

புகைப்பட செய்தி:இந்த விருதினை ஹாஜி ஜனாப் MST.சைபுதீன்,ஹாஜி A K. இப்ராஹீம் ஆகியோர் பெற்று கொள்கின்றனர். 
பட்டா பெறுவது எதற்காக...?

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது.

பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.

பட்டா பெயர் மாற்றம்;
............................................
ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நாம் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும்.
அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.
முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா பெறாமல் இருந்தால், அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம். அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம்.
அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது! என்று சொல்லலாம்.

உட்பிரிவு பட்டா:
..............................
அதன் மூலம் உங்களிடம் சொத்து விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை மறைக்கலாம். அல்லது நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தின் பகுதியையும் சேர்த்து மற்றவருக்கு விற்றுவிட முயற்சிக்கலாம். அப்படி விற்பனை நடந்துவிட்டால் சொத்தை வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும்.
நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பது அவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும். அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த சொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு விடும்.
உதாரணமாக சர்வே எண் 50/1–ல் அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சர்வே எண் 50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு செய்து இரண்டு பட்டாவாக மாற்றப்படும்.
அதாவது சர்வே எண் 50/1 என்பது 50/1ஏ அடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 50/1பி அடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும், நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனி தனியாக பட்டா கொடுக்கப்படும்.
கவனமாக இருக்க வேண்டும்:
.....................................................
இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் போன்றவை மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள் எல்லைப்பகுதிகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும்.
அதனால் உங்கள் சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம் வந்துவிடும். அதனால் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த உரிமையாளர் முழு சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது தவிர்க்கப்படும்.
அதே நேரத்தில் பாகப்பிரிவினை வாயிலாக வந்த சொத்தை வாங்குவதாக இருந்தால் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
அவர் பெயரில்தான் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள் எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும்.
காலம் தாழ்த்தக்கூடாது:
.............................................
அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு அவர் பட்டா வாங்காமல் இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் பழைய பட்டா இருக்கும்.
அதில் இருந்து அவர் தனியாக தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில் இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய சுலபமாக இருக்கும்.
அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை அடிப்படையில் பட்டா வாங்காமல் இருந்தால் அத்தகைய சொத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் பட்டாவை பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி விடும்.
அவர்களுடைய வாரிசுகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே அமையும். எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும் உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.

அதிரை பி.எஸ்.என்.எல் அதிரடி ஆஃபர்! இலவச இன்டர்நெட் இணைப்புகள்!நாடுமுழுவதும் இந்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும்விதமாக பல அதிரடி சலுகைகளை அளித்துவருகின்றது. அதில் ஒன்றாக புதிய தொலைபேசி மற்றும் இன்டர்நெட் பெறுவதற்காக செலுத்தப்படும் கட்டணம் இல்லாமல் புதிய இணைப்பினை பெறலாம் எனவும் மேலும் நாடுமுழுவதும் ரோமிங் கட்டணம் இல்லாத புதிய 2ஜி/3ஜி சிம்கார்டுகளை வெறும் 15 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுகொள்ளலாம் என்றும்  வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல சலுகைகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இதற்கான சிறப்பு முகாம் அதிரை பேருந்துநிலையம் அருகே இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு புதிய இணைப்புகளைப் பெற்று செல்கின்றனர்.


Wednesday, October 28, 2015

பேராவூரணியில் அக்டோபர் 31 சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம்!தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் வரும் அக்டோபர்-31 சனிக்கிழமை அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.          இதுகுறித்து பேராவூரணி வட்டாட்சியர் கோ.இரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  " பேராவூரணி வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் அக்டோபர்-31 சனிக்கிழமை காலை 10 மணியளவில் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.         இம்முகாமில் தமிழக அரசின் வீட்டுவசதி -நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன் மற்றும் பல்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.             இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். மேலும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை அளித்தல், சுகாதார துறை மூலமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது மருத்துவ முகாம், கால்நடைத்துறை சார்பில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்,  பொதுமக்களுக்கான ஆதார் அடையாள அட்டை முகாம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.          பொதுமக்கள் இம்முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு  வட்டாட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதிரையில் பரபரப்பான விநியோகத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் இதழ்

அதிரை எக்ஸ்பிரஸ் குழுமத்தின் புதிய முயற்சியான அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இறைவன் துணையுடன் மூன்று பதிவுகளை கடந்து தற்போது நான்காவது இதழை வெளியிட்டு உள்ளது.தற்போது அதிரையில் விநியோகம் நடைபெற்று வருகிறது.  


நடு இரவை பார்க்காமல் ஓடி வந்து உதவி செய்த அதிரையர்களுக்கு நன்றி

நேற்றைய தினம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாளியகாட்டை சேர்ந்த ப்ரியா என்ற பெண்மணியை பிரசவத்திற்காக இரவு 11.30 மணிக்கு அனுமதிக்க சென்றனர்.அபோது அந்த பெண்மணிக்கு இரத்தம் தேவைப்பட்டது. இதையெடுத்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நானும் CBD அதிரை பொறுப்பாளர் சாலிஹ் ஆகியோர் இரத்தம் வேண்டி பல பேரிடம் கேட்டோம்.இரவு என்பதால் சில பேரால் வர முடியவில்லை.உடனே நாங்கள் தாமதிக்காமல் அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் நாங்கள் நாளை இரத்ததான கொடையாளரை அழைத்து வருகிறோம்.நீங்கள் அங்கு உள்ள இரத்த வங்கியில் கேட்டு பாருங்கள் என்றோம் .அடுத்து அவர்கள் கூறிய வார்த்தை எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இரத்தம் இருந்தால் தான் அனுமதிப்போம் இல்லையென்றால் நீங்கள் தஞ்சாவூர் சென்று விடுங்கள் என்று அரசு மருத்துவமனையில் பணி ஆற்றுவோர் கூறிவிட்டனர் என்றும் மேலும் இன்னும் ADMIT பண்ணவே இல்லை என்றும் கூறினார்கள்.இதனையடுத்து CBD மாவட்ட தலைவர் பேராசிரயர்.செய்யது அஹ்மத் கபீர் சார் மற்றும் CBD அதிரை பொறுப்பாளர் சாலிஹ் ஆகியோர் இரவு 12.30 மணியளவில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று நீங்கள் அந்த பெண்ணுக்கு ஒரு யூனிட் இரத்தம் தான் கேக்குறிங்க நாங்கள் நாளை இரண்டு யூனிட் தருகிறோம் 

இந்த பெண்ணை அனுமதியுங்கள் என்று நம் சகோதர்கள் பேசி அந்த பெண் அனுமதிக்கப்பட்டு தற்போது அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இரவு என்று கூட பார்க்காமல் ஓடோடி சென்று உதவி புரிந்த சகோதர்களுக்கு நன்றிகள் பல........மேலும் உங்கள் சமூக பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்களுடன் 
காலித் அஹ்மத்,
CBD மாவட்ட செயலாளர்,

-

சர்க்கரை நோயைஇனி கட்டுக்குள் வைக்கலாம் 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்

சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்கலாம்: 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்

சத்தமே இல்லாமல் உயிருக்கு ‘உலைவைக்கும்’ சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய மலிவுவிலை ஆயுர்வேத மாத்திரை நேற்று அறிமுகம் செய்விக்கப்பட்டது.

'BGR-34' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை நான்குவகை அரியமூலிகைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டைப் டூ’ என்றழைக்கப்படும் அதிதீவிரத்தன்மை கொண்ட நீரிழிவால் பாதிக்கப்பட்ட உயிரினங்களிடம் ஆரம்பகட்டத்தில் இந்த மாத்திரையைகொண்டு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் 67 சதவீதம் வெற்றிகரமான விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமன்படுத்தியும், அதிகமாக சுரக்கும் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தியும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பின்விளைவுகளை இந்த 'BGR-34' மாத்திரை பெருமளவில் தடுப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியால் அறிமுகம் செய்விக்கப்பட்ட இந்த மாத்திரை நேற்று வர்த்தகரீதியாக விற்பனைக்காக வெளியிடப்பட்டது.

100 மாத்திரைகளின் விலை 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள, பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இந்த 'BGR-34' இன்னும் 15 நாட்களில் நாட்டிலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

இந்த செயல்கள் எல்லாம் தற்செயலா?

இந்த செயல்கள் எல்லாம் தற்செயலா?Is it a Coincidence???

North America earthquake 26 Jan 1700

Krakatau volcanic eruption 26 Aug 1883 (36,000 dead)

The Rhodes earthquake 26 June 1926

Kansu, China earthquake 26 Dec 1932 (70,000 dead)

Turkey earthquake 26 Dec 1939 (41,000 dead)

Portugal earthquake 26 Jan 1951 (30,000 dead)

Yugoslavia earthquake 26 July 1963

China Earthquake 26 July 1976

Sabah Tidal waves 26 Dec 1996 (1,000 dead)

Gujarat Earthquake 26 January 2001.

Iran earthquake 26 Dec 2003 (60,000 dead)

Aceh Tsunami 26 Dec 2004

Tsunami in Indian Ocean 26 Dec 2004

Mumbai floods 26 July 2005

Mumbai attack 26/11 26th November 2008

Taiwan earthquake 26 July 2010

Taiwan earthquake 26 July 2010

Japan Earthquake 26 February 2010

Tasik earthquake 26 June 2010

Merapi volcanic eruption 26 Oct 2010

Mentawai Tsunami 26 October 2010

Nepal earthquake 26 April 2015

Now Pakistan and Afghanistan 26 October 2015.

Why is it Always "26" ?

நன்றி: இணையம்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---