Thursday, December 31, 2015

அருமை அதிரையர்களே!


காட்டுக் குளத்தின் மூன்று நிலைகள் பாருங்கள்.

01 06 2014 அன்று எடுத்த படம்.01 06 2015 அன்று எடுத்த படம்.30 12 2015 அன்று எடுத்த படம்.இதை எல்லோருக்கும் பரப்புங்கள்

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

நியூ இந்தியன் பர்னிச்சேர் திறப்பு விழா அழைப்பு

நியூ இந்தியன் பர்னிச்சேர் ஜனவரி 1-2016 அன்று திறப்பு விழா அழைப்பு 
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலான மக்கள் நம்பிக்கை பெற்று இந்தியன் பர்னிச்சர்  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01.01.2016 வெள்ளிக்கிழமை அன்று (மாலை-4 மணியளவில்) சேது ரோடு, கமால் ரைஸ்மில் எதிர்புறம் அமைந்துள்ள காலித் பில்டிங்கில் விரிவு படுத்தப்படும் நியூ இந்தியன் பர்னிச்சேர் என்ற பெயரில் புதிய பர்னிச்சேர் ஷோரூம் திறக்க இருப்பதால் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினருடன் தராமல் கலந்து கொண்டு நல் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜனவரி முதல் மார்ச் வரை ஒவ்வொரு மாதமும் குழுக்கள் முறையில் மதிப்புமிக்க பரிசுகளும் ஆறுதல் பரிசிகளும் வழங்கப்படும்.


சிறப்பாக நடைபெற்ற அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்களின் திருமணம்!அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்களான முபீன் மற்றும் முஜீப் ஆகியோரின் திருமணம் இன்று மாலை செக்கடி பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சிறப்பு அழைப்பாளராக டி.ஆர்.பாலு நேரில் கலந்துகொண்டார். மேலும் மணமக்களின் இல்லற வாழ்வு சிறக்க நாம் அனைவரும் துவா செய்வோமாக.

"பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்" 

டி ஆர் பாலு அதிரை வந்தடைந்தார் !


அதிரை பேரூர் மன்ற தலைவர் SH அஸ்லம் அவர்களின் மகன் திருமணம் இன்னும் சற்று நேரத்தில் செக்கடி பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.    சிறப்பு அழைப்பாளராக திமுகவின் டி ஆர் பாலு கலந்து கொள்வார் என நகரெங்கும் பேனர்கள் போஸ்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன இந்நிலையில் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக  சற்று  முன் அதிரை வந்தடைந்தார் அவரை வண்டிபேட்டையிலிருந்து கட்சி தொண்டர்கள், மற்றும்  மணமக்கள் வீட்டார் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பெருந்திரளாக நின்று பட்டாசு வெடித்து வரவேற்றனர் . 

முன்னதாக இவர் வருகையை ஒட்டி செக்கடி மேடு, நடுத்தெரு காழியார் தெரு நெசவுகார தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர் . 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

பேரன்புமிக்க அதிரை பேரூர் நிர்வாகமே!
நீங்கள் பார்க்கும் இந்தப் புகைப்படங்கள், அதிரை ஆஸ்பத்திரி தெரு, அரசு மருத்துவமனை, புதுப்பள்ளி குளம், இவைகளுக்கு அருகில் இருக்கும் மின் கம்பமாகும்.

இந்த மின் கம்பத்தில் ஆபத்தான நிலையில் ஒரு டியூப் லைட் உடைந்த நிலையில் தொங்கிக் கொண்டு கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வாழ் மக்களும், கடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.

நிர்வாகம் உடனே முயன்றால், விபத்தை தடுக்கலாம்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

குடும்ப அட்டை பெற இனி குழப்பம் வேண்டாம் (முழு விபரம்)

குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ…
1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான
சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.
2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.
3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.
4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.
5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.
6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், http://www/consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.
7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.
8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்… ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.
9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.
10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.
11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.
12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்.

Wednesday, December 30, 2015

சில நேரம் சாப்பாடு சரியில்லை என்று “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்......!சில நேரம் சாப்பாடு சரியில்லை என்று “சட் என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்......!

விருந்து முடிந்து வெளியில் வரும்போது பலர் உட்கொண்ட விருந்தை விமர்சிக்காமல் இருக்க மாட்டார்கள், ஏதாவது ஒரு குறையை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். பொதுவாக இது பழகிப் போன குறைதான், என்றாலும் கூட சிந்திக்க வேண்டும்.

100%-சதவிகிதம் யாரும் உணவை முழுமையாக சுவைத்தது கிடையாது, அதுபோல் 100%-சதவிகிதம் யாரும் உணவை முழுமையான சுவையுடன் சமைத்தது கிடையாது.

அது யாராக இருக்கட்டும், சாதாரண மனிதர்களாக இருக்கட்டும், முடியவே முடியாது. ஏனெனில் அது அப்படித்தான், சமையலில் ஏதாவது சிற்சில குறைகள் இருக்கத்தான் செய்யும், சகஜமும் அதுதான்.

அரபு நாடுகளிலும் சரி, தொலை தூர அயல் தேசங்களில் வசிப்பவர்களும் சரி, அவர்களில் 90%-சதவிகிதத்தினர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சமைத்துதான் சாப்பிடுகின்றனர், ஒரே மாதிரியான மசாலா, ஒரே தன்மையான தண்ணீர், ஒரே வகையான உணவுப் பொருள்கள், ஒரே நெருப்பு, சமைப்பது நீங்கதான், சுவை எப்படி? ஒரே மாதியாக இருக்குதா? அல்லது சற்று வித்தியாசப்படுதா? என்ன ? நாக்கு மரத்து போச்சா!

ஹோட்டல்களில் சாப்பிடும்போது நன்கு உணர்ந்து சாப்பிட்டு பார்த்தல் தெரியும் அது எல்லா நாளும் ஒரே சுவையில் இல்லாதது.

நான் சின்னஞ் சிறுவனாக இருக்கும்போதெல்லாம் விருந்துக்கு ஆறுபேர்கள் வீதம் உட்கார்வார்கள். பிறகு ஐந்து பேர்கள், அதன் பிறகு நாலு பேர்கள், தற்போது நாலு பேரா அல்லது மூன்று பேரா என்று இழுத்துக்கொண்டு இருக்கின்றது. ஏன் இதை சொல்லுகின்றேன் என்றால், விருந்தை விமர்சிப்பார்கள் அன்றிலிருந்து இருந்து வருகின்றனர்.

தற்போது நிறைய புது மனத் தம்பதிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வளவு காலம் தாய் வீட்டு சாப்பாட்டில் இருந்த அதிரை மாப்பிள்ளைமார்கள், மாமியா வீட்டு சாப்பாட்டுக்கு மாறி விட்டனர்/மாற தாயாராகிக் கொண்டு இருக்கின்றனர்/ மாறப் போகின்றனர்.

அதிரை மாப்பிள்ளைகளே, எல்லாம் வித்தியாசமாக இருக்கும், புது வீட்டில் புகுந்து உள்ளீர்கள், எல்லாமே புதுசு புதுசாக இருக்கும், அதாவது வித்தியாசமான சூழலில் உங்கள் மனம் அலைபாயும் போது சாப்பாடும் எல்லா உணவுகளும் புதுமாதிரியான சுவையிலும் புதுமாதிரியான தோற்றத்திலும் இருக்கும், சட்டென்று டாப் கியருக்கு போகக் கூடாது, அது எடுக்கவும் செய்யாது, மெதுவாக தொட்டு பார்த்து மிகவும் மெதுவாக சாப்பிடுங்கள். சுடுநீர் குடித்தால் நல்லது. “குளிர்ந்த நீர், சோடா வகையறாக்கள் போன்றவற்றை அருந்தாதீர்கள், சாப்பாட்டைப் பற்றி குறைய ஏதும் சொல்லாதீர்கள்.

அதிரை புது மணப்பெண்களே, உங்களுடைய கணவருக்கு பொருத்தமான உணவை, உங்கள் மாமியாரிடம் கேட்டு  தெரிந்து கொள்ளுங்கள். இது வீணான மருத்துவ செலவை தவிர்க்கும். மேலும் இது மார்கழிப் பனிக்காலம், இலகுவான உணவுகளை பரிமாறி வாருங்கள்.

பொதுவாக, நானும், சாப்பாடு விஷயத்தில் சில நேரங்களில் என்னை அறியாமல் கோபம் வந்து விடுகிறது, பூவாளி மீன் இருக்கே, அதை எப்படி சமைத்தாலும் நல்ல சுவையாக இருக்கும், அப்படி சுவையான மீனுதான் அந்த பூவாளி மீன்., ஆனால் அதனுள் இருக்கும் முள்ளை எடுப்பதற்குள் பொறுமை இருக்காது, இருந்தாலும் என் மனைவிதான் எனக்கு உறுதுணையாக இருந்து அந்த மீனுள் உள்ள முள்ளை நைசாக எடுத்து மீதம் உள்ள சதையை தருவாள். ஆண்கள் கைக்கு வராத அந்த முள், பெண்கள் கைக்கு எப்படித்தான் வருதோ!  

சில நேரம் சாப்பாடு சரியில்லை என்று “சட் என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...

ஆனால்...
நம்முடைய முன்னாள் குடியரசுத்தலைவர் (மர்ஹூம்) அப்துல் கலாம் அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கு பதிய விரும்புகின்றேன். 

அவரது இளமைக்கால வாழ்க்கை:
"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம்... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன், என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய்.....

ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனதுஎன்று என் தந்தை என்னிடம் கேட்டார்.

நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை..

இதற்கு இடையில் என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...

ஆனால் அதற்கு என் தந்தையோ.."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும்" என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு “Goodnight சொல்லிவிட்டு, அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன்:

"வாப்பா... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை, என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....

"மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கும் பணிவிடை செய்கிறார்..
களைத்துப் போய் இருப்பார்... 

ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே....

#(மர்ஹூம்) அப்துல் கலாம் அவர்களின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது வாப்பா மீது, அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்றுவரை என்னைத் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றது....

ஆம்..
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....

#இந்த தத்துவத்தை எண்ணியபடியே நான், எனக்கு பரிமாறப்படுகின்ற உணவு எப்படி இருந்தாலும் சரி, அல்லது கொஞ்சம் ஆறிபோய் இருந்தாலும் சரி,...... மனைவியோ அல்லது வேறு யாரும் சமைத்த உணவாக இருக்கட்டும், இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு இருந்து வருகின்றேன்...

#எதிர்காலத்தில் நம் குழந்தைகள் (மர்ஹூம்) அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..

இப்போது நாம் கொஞ்சம் அவரது வாப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

#நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல... 
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...!!!

முயற்ச்சிப்பது தப்பில்லை...,
முயற்சிக்காமல் இருப்பதுதான் தப்பு...,
முயற்சித்த பின் அதன்படி நடக்காதது,
அது, அதைவிட தப்பு.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

அதிரைத் திருமணங்களில்............................என்ன?திருமணம் என்றால், அதில் பொதுவாக முக்கியமான மூன்று அம்சங்கள் இருக்கும்.

அம்சம் 01: திருமண ஏற்பாடு.
அம்சம் 02: திருமண கூப்பாடு.
அம்சம் 03: திருமண சாப்பாடு.

இதையும் தாண்டி, சில அம்சங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் எல்லா அம்சங்களும் 100% சதமானம் முறையாக இருக்கின்றதா? அல்லது இல்லையா? அல்லது நிறைவேறுதா? அல்லது நிறைவேற வில்லையா?

இதற்க்கு எல்லாம் என்ன காரணம் என்று சற்று அலசிப் பார்க்கலாமா?

இந்த சீசனின் எல்லாக் கல்யாணங்களும் நல்ல படியாக முடியும்வரை காத்திருங்கள்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

ஏர்வாடி முஸ்லிம் இளைஞர் படுகொலை: ஏழு குற்றவாளிகள் கைது

ஏர்வாடியில் முஸ்லிம் இளைஞர் காஜா முகைதீன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் டிசம்பர் 21 இரவில் முஸ்லிம் இளைஞரான காஜா முகைதீன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து ஏர்வாடி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனிடையே இக்கொலையில் சம்பந்தப்பட்ட ஏழு நபர்களை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். கதிர்வேல் சாமி, மகேஷ், தினேஷ், முத்துராமன், மணிகண்டன், ராஜபாண்டி மற்றும் சுதாகர் என்கிற மணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கதிர்வேல் சாமி பாரதிய ஜனதா கட்சியின் களக்காடு ஒன்றிய செயலாளர் என்பதும் முத்துராமன் களக்காடு ஒன்றிய பொது செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
” ஐ லவ் யூ அப்பா”.
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?

Tuesday, December 29, 2015

முத்துப்பேட்டையின் பேரூராட்சி நீர்வாக சீர்க்கேட்டை கண்டித்து SDPI கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் உள்ள  பேட்டை சாலை, மெயின்ரோட்டின் சாலை ஆகியவையை  உடனே சரி செய்ய வலியுறுத்தியும்,தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்பறபடுத்த கோரியும், மழை காலத்தில் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்களை அப்புறபடுத்த கோரியும், சுகாதார சீர்க்கேட்டை கண்டித்தும் SDPI கட்சி சார்பாக நகர தலைவர்.சேக்முகைதீன் தலைமையில் மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.

இதில் SDPI  கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக்.மற்றும் SDPI  கட்சி திருவாரூர் மாவட்ட பொதுச்செயளார் நெய்னா முகம்மது  ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்

இறுதியில் நகர துணை தலைவர் நன்றியுரையாற்றினார்.இதில் ஆட்டோ.கார் ஓட்டுனர்கள் கட்சியின் செயல்வீரர்கள் பொதுமக்கள்  என நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

மச்சான் அங்கே என்னா கூட்டம்?


மச்சான் அங்கே என்னா கூட்டம்?

என்ன மச்சான்......! என்னத்தே கேட்கிறா.....?

மச்சான்.. அங்கே பாரேன், ஒரு எறும்பு கூட போகமுடியாத அளவுக்கு ரோடே ப்ளாக் ஆகி கிடக்குது, ஜே ஜேன்னு கூட்டமாக இருக்குது. போதா குறைக்கு, ஆட்டோக்களும், ஓம்னிகளும், பைக், என்ன அது?

ஓ... அதுவா மச்சான்! உனக்கு தெரியாதா... சங்கதி?

சொன்னாத்தானே.... மச்சான் எனக்கு தெரியும்.

இப்போ, அதிரையிலே திருமண சீசனாம், 75 திருமண ஜோடிகளுக்கு திருமணம் நடக்குதாம், அதுவும் சராசரியாக தினம் இரண்டு மூன்று இப்படி நடக்கின்றதாம்..... நாற்சா ஒருபக்கம், மறுபக்கம் விருந்து வகைகள் ஏக தடபுடலாம், அதாவது காலை சாப்பாடு, பகலைக்கு சாப்பாடு, இரவுக்கு சாப்பாடு. இது போதாதுன்னு எடுப்பு சாப்பாடாம்! அப்புறம் தோழன் சாப்பாடு, முகம் துடைக்க சாப்பாடு, பொண்ணு வந்து போனா சாப்பாடு, இப்படீன்னு பல வகை சாப்பாடுகள், அதனாலே, கூப்பிட்டவங்கள் எல்லோரும் வந்திருக்காங்க, அதுதான் அந்த கூட்டம்...... இப்போ புரியுதா மச்சான்?

இப்படி பத்து பதினைந்து நாட்களுக்கு தினமும் மூன்று வேலையும் இடைவிடாமல் விருந்து “அசைவ சாப்பாடு சாப்பிட்டால் அவங்க உடம்புக்கு கெடுதல் வராதா?

என்ன மச்சான் நீ....முட்டாள் மாதிரி பேசுறா!!??

சரி மச்சான்.... நா தெரியாம கேட்டுட்டேன், நீயே சொல்லு.....

அப்படி வா மச்சான்...,
அவங்க உடம்புக்கு கெடுதல் வரக்கூடாதுன்னுதான் மூளைக்கு மூளை ஆஸ்பத்திரிகள் இருக்கு, மருந்து கடைகள் இருக்கு, இரத்தம், நீர், மலம், இவைகளை டெஸ்ட் பண்ண நிறைய லேப் இருக்கு, போன் பண்ணுனா போதும், வீட்டுக்கு வந்து இரத்தத்தை எடுத்துக்கொண்டு போக வசதிகள் இருக்கு.

அதனாலே மச்சான்... நான் என்ன சொல்லவர்றேன் என்றால், வைத்தியர் மருந்துகள் இல்லாமல் உடம்பை நல்லபடியாக வைத்துக்கொள்ள... நடை பயிற்ச்சி, உடற் பயிற்சி, வாயை கட்டுப்படுத்தும் பயிற்சி போன்ற பயிற்சிகள் எல்லாம் இருக்குது.

ஆமா..! மச்சான்... நீ சொல்றதிலையும் நியாயம் இருக்குது.

வசதிகள் இருந்தும், நியாயங்கள் இருந்தும் என்ன பயன்...?

அவங்களைப் பத்தி அவங்களே கவலைப்படலேயே, அப்போ நாம கவலைப்பட்டு என்ன நடக்கப்போவுது....?

சரி.... மச்சான் இப்போ என்ன செய்யலாம்..?

வா மச்சான், நாம போவலாம்.

ஆமா மச்சான்..... அதுதான் நல்லது.

மச்சான் இங்கே பாரு...........நாம போறதுக்கு கூட வழியே இல்லே, பாத்தியா கூட்டத்தை!

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---