Thursday, December 29, 2016

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் சசிகலா??


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா டிசம்பர் 5 தேதி அன்று காலமானார். நிதியமைச்சராக பணியாற்றி வந்த ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக தேர்வு செய்யபட்ட நிலையில் காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்த பொதுச்செயலாளரை நியமிக்க அதிமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆயினும் இந்த முடிவு அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் எந்தவித வரவேற்பையும் பெறவில்லை.
 ஒரு பக்கம் ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் மகள் தீபாவிற்கு மக்கள் மத்தியில் வெகுவாக ஆதரவு வலுத்து வரும் நிலையில் மறுபக்கம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் சசிகலாவை பொதுச்துசெயலாளராக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் கூடியது. இந்த பொதுக் குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளராக கொண்டு கட்சியை வழிநடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் பொதுச் செயலாளர் பதவியை அவர் ஜனவரி 2 தேதி முதல் ஏற்றுக் கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதிமுகவின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, November 1, 2016

அதிரையில் சிறு சிறு மழைத்தூரக்குப் பின்....................!!!!!??????



அதிரையில் சிறு சிறு மழைத்தூரலுக்கு பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப் பிரச்சினை முளைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று புழுதிப் படலம். சாலையை வேகமாகக் கடக்கும் வாகனங்கள் கிளப்பும் புழுதி, மக்களை மூச்சு முட்ட வைத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த கால மழை வெள்ளத்தாலும் அதிரையில் பல சாலைகள் பெயர்ந்துவிட்டன. பல சாலைகள் தரம் இல்லாததால் சிதிலமடைந்து விட்டன.

சில தார் சாலைகள் பெயர்ந்து காணாமல் போய்விட்டதால் மண் மேடுகளாகவும் குழியுமாகவும் சாலைகள் காட்சியளிக்கின்றன. இந்தச் சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கிளம்பும் புழுதியும் தூசியும் சாலையில் செல்வோரைப் பதம் பார்த்து வருகிறது. குறிப்பாக அதிரையில் எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளது. சாலைகளில் கிளம்பும் புழுதி, தூசியைக் கண்டு கொள்ளாமல்விட்டால் பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும்.

என்ன பிரச்சினை?
ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கும் குளிர்காலம் எப்போதுமே அலர்ஜியாகவே இருக்கும். இப்போது சாலையை மறைக்கும் அளவுக்குப் புறப்படும் புழுதி, சுவாசக் கோளாறு கொண்டவர்களுக்குச் சிக்கலை அதிகரித்துள்ளது.

வழக்கமாகக் குளிர்காலத்தில் வைரஸ்கள், பாக்டீரியாக்களின் வளர்ச்சி எக்குத்தப்பாகவே இருக்கும். எனவேதான் குளிர்காலத்தில் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள், சுவாசக் கோளாறு கொண்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்குப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

வழக்கமாகக் குப்பை, தூசி, புழுதியில் ரெஸ்பரேட்டரி ட்ராப்லெட் நியூசிலியா என்ற நோய்க் கிருமி இருக்கும். புழுதி, தூசியுடன் அழுக்குபோல இது கலந்திருக்கும். இது காற்றில் கலக்கும்போது, அதை சுவாசிக்கும் மனிதர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் வரலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

தாக்கும் நோய்கள்
என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்துப் பொதுநல மருத்துவர் நா. எழிலன் விளக்குகிறார்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளவர்களுக்குக்கூடத் தும்மல், இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். இது ஐந்து நாட்களுக்குள் சரியாகிவிடும். ஆஸ்துமா நோயாளிகள், சுவாசக் கோளாறு கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகளுக்குச் சுவாச உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

அது மட்டுமல்ல காசநோயாளி ஒருவர் சாலையில் எச்சிலை துப்பினால், அதிலுள்ள ஆயிரக்கணக்கான கிருமிகள் புழுதி, தூசியோடு ஒன்றாகிக் காற்றில் கலந்துவிடும். அதை சுவாசிக்கும் ஒருவருக்குக் காச நோய் வரலாம் என்கிறார் எழிலன்.

இந்தியாவில் சாலையில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. பொது இடங்களில் இதைச் செய்யும்போதும் அதிலிருந்து வெளிப்படும் கிருமிகள் தூசி, புழுதியில் கலந்து பெரும் பாதிப்புகளை மனிதர்களுக்கு ஏற்படுத்திவருவது நிதர்சனமான உண்மை. இந்தப் பிரச்சினையைப் போக்க வழியே கிடையாதா? காற்றிலுள்ள நச்சுகளை வடிகட்டும் முகமூடிகளைப் பயன்படுத்துவது, தூசியைத் தடுப்பதற்கான நல்ல வழி.

புழுதியும் தூசியும் அதிகமாக எழும் இடங்களில் முகமூடி அணியலாம். இது 100 சதவீதம் பாதுகாப்பைத் தரும் என்பதில்லை. ஆனால், காற்றிலுள்ள 80 - 85 சதவீதம் நச்சுகளை வடிகட்டிவிடும். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஏற்படும் புழுதிப் படலத்தில் இருந்து தப்பிக்க, இதுதான் சிறந்த வழி என்கிறார் எழிலன்.

புழுதியை இனிச் சாதாரணமாக நினைக்க வேண்டாம், எச்சரிக்கையாக இருந்து ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
PRESIDENT of pkt Tk
State Executive Member
National Consumer Protection Service Centre.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


Wednesday, October 19, 2016

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

     அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

  தேதி

14/10/2016                                              
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 39 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/10/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                     : சிரார். சாஜித் S/o மன்சூர் ( உறுப்பினர் ) 

முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) 

வரவேற்புரை          : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )


சிறப்புரை              : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை           : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) இந்த வருடம் ஹஜ் பெருநாளின் குர்பானி ( ஒழுகியா ) திட்டத்தை மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் நடத்தி ( ஏழை எளிய மக்களுக்கு ) உதவி வந்த அதிரை ABM H/O தலைமையகத்தை பாராட்டி ABM RIYADH கிளையின் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் ஊர் மக்கள் மேலும் ஆதரவு தந்து மேலும் செம்மையாக நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.










 2) ABM தலைமையகம் நடத்தி வரும் ஆதரவற்ற பெண்ணின் பென்ஷன் திட்டத்திற்கு மேலும் உதவிடுமாறும் அதற்காக முழு ஒத்துழைப்பும் பொருளாதாரமும் தந்து செம்மைப்பட சிறப்பாக செயல்படுத்துவது சம்மதமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

3) ABM ரியாத் சார்பாக மாதம் தோறும் சந்தாவை செலுத்த முடியாத உறுப்பினர்களும் அதிரை சகோதரர்களும் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது 6-மாதம் ஒருமுறையோ செலுத்தி அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

4) ABM தலைமையகம் சார்பாக நடந்து வரும் தையல் பயிற்சியை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கிவரும் இந்த சிறப்பான தையல் கலையை நமதூர் பெண்கள் பயன் பெற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ரியாத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் கீழத்தெருவை சேர்ந்த சகோதரர் இப்ராகிம் நிஜாம் அவர்களுக்கு கடந்த ( 09-10-2016 ) அன்று OBEID ஆஸ்பத்திரியில் இருதய ஆப்ரேஷன் முழு வெற்றிகரமாக நடந்து இப்பொழுது நலமாக உள்ளார். அவர்கள் பூரண குணமடைய துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் NOVEMBER 11-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

                … ஸாகல்லாஹ் ஹைர்...

Monday, September 12, 2016

தாய்லாந்தில் அதிரையர் சிறப்பாக பெருநாள் கொண்டாட்டம்!!

இன்று உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறதுஇன்று காலைதாய்லாந்து  நடைபெற்ற  பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.


பஹ்ரைன் அதிரையர்களின் ஹஜ்பெருநாள் சந்திப்பு ( படங்கள் இணைப்பு )

இன்று உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை பஹ்ரைன்ல் நடைபெற்ற  பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.






சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள அதிரையர்களின் ஹஜ்பெருநாள் சந்திப்பு ( படங்கள் இணைப்பு )

இன்று உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரியாத்தில் இருக்கும் அதிரையர்கள் ஒன்றாக கூடி ஹஜ் பெருநாள் தொழுகையை  நிறைவேற்றி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.






அயல்நாடு வாழ் அதிரையர்களின் அசத்தல் பெருநாள் செல்ஃபி !


உலகெங்கும் வியாபித்து இருக்கும் அதிரையர்கள் அந்தந்த நாடுகளின் பிரகாரம் இன்று தியாக திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

அவர்களில் பெரும்பாலோனோர் குழுவாக நின்று செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் சிலர் நமது அதிரை எக்ஸ்பிரஸ்சில் பதிவேற்றம் செய்ய  விரும்பி மின்னஞ்சல் வழியே அனுப்பி வருகின்றனர் அதில் சிலவற்றை இப்பொழுது பதிந்துள்ளோம். 







Sunday, September 11, 2016

முத்துப்பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி!



முத்துப்பேட்டையில் இன்று மாலை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் வீடு அருகே வந்த பொழுது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் சிலர் கற்களை வீட்டிற்குள் வீசியுள்ளனர். ஆயிரகணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலிருந்த பொழுதும் கூட இந்த விசம செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளது பொதுமக்களின் பாதுகாப்பினை கேள்வி குறியாக்கி உள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டை ஜமாத் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் முஸ்லீம் லீக் கட்சி சார்பிலும் தனியாக புகார் கொடுக்கப்பட இருக்கிறது.

இதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொழுதும்கூட இதே வீட்டிற்குள் கலககாரர்கள் கற்களை வீசி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் நாளை ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு(சர்வேதேச பிறை)

சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இன்று துல்ஹஜ் பிறை 9 அரபா தினமாகும். இன்று ஹாஜிகள் அரபா மைதானத்தில் குழுமி ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர் . நாளை ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் ஆகும் .
சர்வேதேச பிறை அடிப்படையில் நாளை ஹஜ்பெருநாள் தொழுகை அதிரையிலும்  நடைபெற உள்ளது.

ஷிஃபா எதிரே உள்ள  கிராணி மைதானத்தில் காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. 

இதில் பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  தொடர்புக்கு: ஹசன்: +91 9042 303 404 தாஜ் : +91 9944 916 614

அதிரை மாணவர்களின் முயற்சி!!!

அதிராம்பட்டினத்தில் மாணவர்கள் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் பல இடங்களில் குப்பைகள் கிடந்தன, இதனை அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தாங்களாகவே இணைந்து அந்த குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு அதிரையில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வாக அமைந்தது. மேலும் பலரது பாராட்டுகளை பெற்றனர்.






மாற்று திறனாளிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் !


பட்டுக்கோட்டையில் வருகின்ற 18ஆம் தேதி அனைத்து வகை மாற்று திராளிகளின் ஆலோசனை கூட்டம் அதிரை பஹத் தலைமையில் நடைபெற உள்ளது . இந்த ஆலோசனை கூட்டத்தில் 40% ஊனம் இருந்தும் உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கபடும் மேலும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்துகொள்ள வழிமுறைகள் அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஓதிக்கிட்டிற்காக காத்திருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் பெற்று தர போராட முனைப்புக்காட்டி வரும் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தவறாது கலந்துகொண்டு பயனடைய கேட்டுகொள்ளபடுகிறார்கள் .