Sunday, January 31, 2016

தக்காளி ஊறுகாய் !

செய்முறையுடன் விளக்குகிறார் உங்கள் முஷ் கிச்சன் நெய்னா அவர்கள்!! 

அன்னை ஊட்டாத சோற்றை ஊறுகாய் ஊட்டும் என்பார்கள். இன்று ஊறுகாய் ஒரு சைட் டிஷ்சாகவே மாறியுள்ளது எனலாம். பெருமளவில் ஊறுகாய்களை மாங்கா அல்லது எலுமிச்சை பழங்களில் மட்டுமே உண்டு மகிழ்ந்த நமக்கு நமதூர் செஃப் முஷ் கிச்சன் நெய்னா அவர்கள் தக்காளியில் ஊறுகாய் செய்வது எப்படி?என்பதை காணொளியுடன் விளக்குகிறார். 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.

எங்கே செல்லும் இந்த பாதை ? யாரோ யாரோ அறிவாரோ ?


வடக்கு அயர்லாந்துப் பகுதியில் உள்ள Along Bregagh எனும் வீதியின் இரு புறங்களிலும் காணப்படும் மரங்கள் அவ்வீதியில் பயணம் செய்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக காணப்படுகின்றது.

இம்மரங்கள் யாவும் 1750ம் ஆண்டு காலப்பகுதியில் கிரிகோரியன் மாளிகையை அலங்கரிப்பதற்காக ஜேம்ஸ் ஸ்டுவார்ட் குடும்பத்தவர்களால் நடப்பட்டது எனக் கூறப்படுகின்றது.


K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Saturday, January 30, 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு பணிகள் தீவிரம் !! இறுதி பிரசாரத்தில் ததஜவினர் !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நாளையதினம் திருச்சியில் நடைபெற உள்ளது . இதற்க்கான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கடந்த சில மாதங்களாக தீவிர களப்பணியாற்றி வந்தனர். இந்நிலையில் மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது . இதனிடையே அதிராம்பட்டினத்தில் உள்ள ததஜவினர் நாளை நடைபெற உள்ள மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கும் பணியில் இன்று தீவிரமாக ஈடுபட்டனர் . நாளையதினம் தவ்ஹீத் பள்ளியருகே வாகனங்கள் புறப்பட உள்ளதாகவும் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டியும் அழைப்பு விடுத்துள்ளனர்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---பொதுமக்கள் கவனத்திற்கு

உங்கள் ஏரி, குளங்கள், வாய்க்கால்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க தன்னிச்சையாக வாருங்கள்
திருச்சியில் முதல் கட்டமாக பிப்ரவரி 1ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் உங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அந்த தகவலை மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாகவோ அல்லது எங்கள் மூலமாகவோ கொடுத்து அவருக்கு உதவலாம்...
அதனால் பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு புகார் அளிக்க விரும்பும் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்... நன்றி

தங்களது புகார்களை கீழுள்ள மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம் 
thanneer.iyakkam@gmail.com

இத்தகவலை அனைவருக்கும் கொண்டு செல்ல முகநூல் (facebook), Whatsapp போன்ற சமூக வலைத்தளத்தில் பகிரவும்..
சேவிரா
தண்ணீர் இயக்கம்
9500189319

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---மீண்டும் வருகிறது ஜெ வழக்கு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கர்நாடகா விரும்புகிறது. எனவே, பிப்ரவரி 23ம் தேதி முதல் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதில் கர்நாடகா முனைப்பு காட்டும் என்று அம்மாநில சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் மனு, சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதிகட்ட விசாரணை நடைபெறும் என்று கடந்த முறை நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் இருந்து நேற்று ஒரு மனு உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டது. இதையேற்று, விசாரமஐயை, பிப்ரவரி 23ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், கர்நாடக சட்டத்துறை வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' கூறியதாவது: 

சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ச்சியாக நடத்தி முடிக்கவே கர்நாடக தரப்பு விரும்புகிறது. 23ம் தேதி மீண்டும் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டால், அதை கர்நாடக தரப்பு எதிர்க்கும். மேலும், அருணாச்சல பிரதேசத்தில், குடியரசு தலைவர் ஆட்சியை, அமல்படுத்தியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை விசாரிக்கும், நீதிபதிகளில் ஒருவர், ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதி. அருணாச்சல பிரதேச வழக்கு, பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அது அவசரம் சார்ந்த வழக்கு என்பதால், நீதிபதியால், ஜெயலலிதா வழக்கில் கவனம் செலுத்த முடியாது என்று நினைத்தோம். எனவேதான், சொத்துக்குவிப்பு வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தபோது, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---அதிரை காதிர் முகைதீன் பள்ளியின் 67ஆம் ஆண்டு விளையாட்டு விழா!அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் 67ஆம் ஆண்டு விளையாட்டு விழா நாளை காலை 8.30 மணியளவில் பள்ளியின் விளையாட்டு திடலில் நடைபெறயுள்ளது. இவ்விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் ஜலால் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைக்கவும் தஞ்சாவூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வீ.இராஜேந்திரன் ஒலிம்பிக் சுடர் ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று விளையாட்டு விழாவினை துவக்கிவைக்க உள்ளார். மேலும் அதிரை பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஹமீத்கான் அவர்கள் பரிசளிப்பு விழாவிற்கு தலைமையேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---தஞ்சையில் ஆசிரியர்கள் கைது

தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய 850 ஆசிரிய, ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர்.தஞ்சையில் மறியல்: 850 ஆசிரியர்கள் கைது
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டு முதன்மை கல்லூரி அதிகாரி அலுவலகம் சென்று மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மறியல் செய்வதற்காக கூடினார்கள். போராட்டத்திற்கு ஜாக்டோ பொதுக்குழு உறுப்பினர் எழிழரசன் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர்கள் கோஷங்கள் போட்டப்படி ஊர்வலமாக புறப்பட முயன்றனர். அவர்கள் 850 பேரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி சென்றனர். கைதானவர்களில் 500 பேர் ஆசிரியைகள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அரண்மனையில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.

சுவீடனில் வேலை நேரம் 6 மணி நேரமாகக் குறைப்பு!
சுவீடனில் தினசரி வேலை நேரம் படிப்படியாக 6 மணி நேரமாக குறைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுமே இதன் நோக்கம் ஆகும்.

ஏற்கெனவே நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலை நேர குறைப்பை அமல்படுத்தி உள்ளதாக சயன்ஸ் அலர்ட்இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களுக்குக்கூட இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

குறுகிய நேரத்தில் கூடுதல் உற்பத்தி திறனுடன் அலுவலகப் பணியை முடித்துவிட்டு, தங்களது தனிப்பட்ட வாழ்வில் கூடுதல் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட அனுமதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுவீடனின் கோதன்பர்க் நகரில் உள்ள டொயோட்டா மையங்களில் 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வேலை நேர குறைப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த தொழிலகங்களில் ஊழியர்கள் உற்சாகமாக வேலைக்கு வருவதாகவும், உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகவும், லாப விகதம் அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள பிலிமன்டஸ் நிறுவனம் (செல்போன் ஆப் கண்டுபிடிப்பாளர்) கடந்த ஆண்டே 6 மணி நேர வேலை திட்டத்தை அறிமுகம் செய்தது.

பிலிமன்டஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லைனஸ் பெல்ட் கூறும்போது, “தினசரி 8 மணி நேரம் வேலை என்பது நாம் நினைப்பதுபோல பலன் தரத்தக்கது அல்ல. 8 மணி நேரம் ஒரே வேலையில் கவனம் செலுத்துவது என்பது மிகப்பெரிய சவால்.

வேலை நேரத்தைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களை பயன்படுத்த ஊழியர்களை அனுமதிப்பதில்லை. ஆலோசனைக் கூட்டங்களை வெகுவாக குறைந்துள்ளோம். அலுவலக நேரத்தில் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற ஊக்கம் தருகிறோம்என்றார்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.

Friday, January 29, 2016

அதிரை மக்களே உஷார்

அதிரையில்  கள்ள நோட்டுக்களின்  புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் கள்ள நோட்டு கும்பல் வியாபாரிகளிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து அவர்களிடம் பொருள்களை வாங்கி செல்லும் அவலம் தொடர்ந்து அதிரையில் ஒரு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று கொண்டு இருப்பதாக கூறபடுகிறது.500ரூ மற்றும் 1000 ரூபாய்கள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது.குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.  இதில் அதிரை பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.  

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.

அதிசயம் ஆனால் அதிர வைக்கும் புகைப்படங்கள்..! (PHOTOS)

உலகமே ஒரு அதிசயம் தான். அதிலும் உலகில் சில நேரங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் புகைப்படங்கள் எங்களை பிரம்மிக்க வைக்கும். அப்படிப்பட்ட சில புகைப்படங்கள் சில இதோK.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.

அதிரை கவியன்பன் காலம் தந்தை மரணம்

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ஒ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செ.ஒ அப்துல் ரஹ்மான், செ.ஒ அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும்,  செ.ஒ. அஹ்மத் ஹூசைன், செ.ஒ. “கவியன்பன்” கலாம், செ.ஒ. ஜமால் முஹம்மது  ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் செ.ஒ. அஹ்மத் கபீர், மர்ஹூம் மு.ஹ. முஹைதீன் , நெ.மு. இப்றாஹிம், மு. அஹ்மத் பஷீர் ஆகியோரின் மாமானாருமான ஹாஜி சேக் அப்துல் காதர் ( வயது 96 ) அவர்கள் நேற்று இரவு  வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
தகவல்:பவாஸ்

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.