12 சீட்டுக்கள் கேட்ப்போம் கலைஞரை சந்தித்த பின் காதர் முகைதீன் பேட்டி!!


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று  காலை திமுக தலைவர் கலைஞரை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது .

தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை நானும், நிர்வாகிகளும் சந்தித்தோம். இன்று, நேற்றல்ல. 1961-ம் ஆண்டு முதல் நட்புடன் இருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாதந்தோறும் சந்தித்து  அளவளாவுவோம் மற்றும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். கடந்த மூன்று மாதங்களாக சந்திக்க முடியாமல் போய்விட்டது.  

இப்போது சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு,உடல் நலமாக இருக்க வாழ்த்தினேன் என்றார் மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம்களுக்கு  12 சீட்டுக்கள் கேட்க உள்ளதாக கூறிய அவர் , புதுவை உட்பட 4சீட்டுக்களை முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் என்றார் .இந்த சந்திப்பின்பொழுது அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.ஏஎம். முஹம்மதுஅபூபக்கர், மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ ஆகியோரும் உடனிருந்தனர்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது