மமக தமீம் அன்சாரி அலுவலகம் மற்றும் 5 லட்சம் சூறை

தமிமூன் அன்சாரி அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில், மனிதநேய மக்கள் கட்சியினர் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமீம் அன்சாரி ஆதரவு மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம், திருவல்லிக்கேணியில் பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றாப்பட்டதாக கூறபடுகிறது.
இதை தொடர்ந்து, நேற்று மதியம் புதுப்பேட்டையில் உள்ள தமிமூன் அன்சாரி கட்சி அலுவலகத்தில் 15 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள், சேர், மின் விசிறிகள், எல்.சி.டி. டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்ட 15 பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும், அலுவலகத்தில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் மர்ம கும்பல் எடுத்து சென்றதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.


புகாரை பெற்றுக் கொண்ட எழும்பூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த மண்ணடி மீரான்,. சகீர், முகம்மது அப்துல், அலி பாரூக், அலாவுதீன், அக்பர் அலி, ஷேக் முகம்மது, பாட்ஷா கான், மற்றும்.முகம்மது ரகமத்துல்லா ஆகிய 9 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களை போலீசார் எழும்பூர் நீதிமன்ற 13வது மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 9 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி கூறும்போது, ''மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. ஆகியோரை நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது ஆதரவாளர்கள், புதுப்பேட்டையில் உள்ள எங்களது அலுவலகத்தை சூறையாடி உள்ளனர். எங்கள் அலுவலகத்தில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சூறையாடி உள்ளனர். எங்கள் பணி ஜனநாயக வழியில் தொடர்ந்து நடைபெறும். கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு எந்த ஒரு ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு முழு பொறுப்பை ஜவாஹிருல்லா தான் ஏற்க வேண்டும்" என்று கூறினார்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---.
Share:

1 comment:

  1. இந்த சமுதாயம் ஒன்றுபட வாய்ப்பில்லை.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது