உனக்காக நான் இறந்துபோக முடியாது! எனக்காக நீ இறந்துபோக முடியாது!! யாருக்காகவும் யாரும் இறந்துபோக முடியாது!!!. அப்போ இவனுக்காக யார் இறந்துபோவது?

உனக்காக நான் இறந்துபோக முடியாது! எனக்காக நீ இறந்துபோக முடியாது!! யாருக்காகவும் யாரும் இறந்துபோக முடியாது!!!. அப்போ இவனுக்காக யார் இறந்துபோவது?

பிறப்பும் இறப்பும் இறைவன் வகுத்த விதியிலிருந்து தப்ப முடியாதது, இறைவன் வகுத்த நேரத்தில் அது நடந்து விடும், இதை இந்த உலகம் நன்றாக அறியும்.

ஆனால் பிறப்பதற்கு மனிதன் பல முயற்சிகளை மேற்கொள்ளுகிறான், அதே மனிதன் இறப்பதற்கு முயற்சி ஏதும் செய்வது இல்லை. காரணம் என்ன? காரணம் உலக ஆசை, துனியா ஆசை, நபுசு, பேராசை.

யாருக்காக யார் சாவது ?
ஒரு ஆண் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, மற்றும் 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் மையித்தின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்தக் குடுமபத்துக்கே முக்கியஸ்தராக விளங்கும் பல புலமைகள் பெற்ற ஒருபெரியவர் அப்போது அங்கு வந்தார்.

அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.
இறந்தவரின் மனைவி சொன்னாள் பெரியவரே! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே?  நான் என்ன செய்வேன்?

அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன் என்று இறந்தவரின் மனைவி சொன்னாள்.

அந்தப் பெரியவர் அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார், ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.

கடைசியில் அந்தப் பெரியவர் கேட்டார்
அதாவது, ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை அந்த மையித்தின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் அந்த பெரியவர் சொன்னார்
இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர் மட்டும், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.

இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்திவர் மரணமடைவார்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.

அந்தப் பெரியவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார், நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு? அவளுக்காக நான் வாழ வேண்டும்.

தாயைக் கேட்க, அவள் சொன்னாள், அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?

மனைவி சொன்னாள், நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்.

அந்தப் பெரியவர் பையனைப் பார்த்துக்கேட்டார், குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?

உடனே, அவன் தாய், அந்தக் குழந்தையை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள், பெரியவரே, உங்களுக்கென்ன பைத்தியமா? அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”

பெரியவர் சொன்னார் உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இறந்தவனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிவிட்டது.

எனவே தான், எல்லாம் வல்ல இறைவன் அவனை எடுத்துக் கொண்டான். இப்போது மையித்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்
என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் இறைவன்.
எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.

நாம் யார் அதைக் குறை சொல்ல? மேலும் கேள்வி கேட்க?

நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம், அதில் பச்சை இலைகள் இருக்கும் வரைதான் நாம் கவனிப்போம், இலைகள் வாடிப்போய், அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை. அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.

உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம், பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே.


K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது