இன்றைய திருமணமும் இஸ்லாமிய திருமணமும் !

இன்றைய திருமணம் என்பது கோடிகளை கொட்டி கும்மாளமிடும் விழாவாக ஆகிவிட்டது.

இன்றைய அரசியல் வாதிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து பண முதலைகளும் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காசை கரியாக்கி கட்அவுட் அமைத்து  வெகு விமரிசையாக(?) திருமணத்தை நடத்துவதை சமிப காலமாக நமதூரில் அதிகளவில்  காணமுடிகிறது .

ஒரு காலத்தில் எளிமையான திருமணத்தை நடத்திய  மக்களில் நாங்களும் சமமானவர்கள் என்று கூறும் அளவுக்கு உள்ள அரசியல்வாதிகளும் உண்டு

ஆனால் இன்றைய பணம் படைத்த செல்வந்தவர்கள் தங்கள் செல்வாக்கினை நிலை நிறுத்த திருமணம் என்ற போர்வையில் வீண் வீரயங்கள் நடத்துவதை நம்மால் பார்க்க முடிந்தது . இதே போல் இன்றைய இளைஞர்கள்/நண்பர்கள்  மாற்று மத கலாச்சாரத்திற்கு ஒப்பாக மணமகனை அழைத்து செல்வது முதல் முதலிரவு அறை  வரையிலும் பட்டாசுகளை வெடித்து நண்பனின் திருமணத்தை ஜாலியாக (?) நடத்துகின்றனர் . இது இஸ்லாத்திற்கு மிகவும் முரணானது என்பதை கவனிக்க மறந்து விடுகின்றனர் .
யார் மாற்று மத கலாச்சாரத்துக்கு  ஒப்பாக நடகின்றரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே...முஹம்மது நபி - அபூதாவூத்

திருமண விருந்து என்ற பெயரில் ஒரே நாளில்,4 ,5 வலிமா  விருந்துக்களை வைத்து உணவை வீணாக்குகின்றனர்  அப்படி செல்வந்தர்களால் வைக்கப்படும் விருந்துகளில் எத்தனை ஆடம்பரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

இதோ நபிகளார் காட்டி தந்த அழகிய வலிமா முறை !

நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ளசத்துஸ் ஸஹ்பாஎனுமிடத்தில்ஸஃபிய்யா பின்த் ஹுயைஅவர்களை மணமுடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின்வலீமா’ -(மணவிருந்துக்கு) முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.நபி (ஸல்) அவர்கள் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டு (அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டபோது) அதில் பேரிச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை இட்டார்கள். (‘ஹைஸ்எனும் எளிய உணவு துரிதமாகத் தயாரானது.) இதுவே நபி (ஸல்) அவர்களின் வலீமா மணவிருந்தாக அமைந்தது

அறிவிப்பளர்.அனஸ்(ரலி
SOURCE: IDC

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது