அதிரை புதுமண தம்பதிகளுக்கு முக்கிய நினைவூட்டல்

அதிரை சம்சுல் இஸ்லாம் உட்பட்ட பகுதியில் கடந்த 24  தேதி முதல் தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.இந்த திருமண நிகழ்வுகளுக்கு முன்னர் கடந்த 22 ஆம் தேதி திருமண செய்ய இருந்த மணமக்களுக்கு இஸ்லாம் கூறும் திருமணம் தொடர்பாக கவுன்சிலிங் நிகழ்ச்சி கடந்த சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக மணமக்கள் திருமணம் முடித்து இஸ்லாத்தின் வழிமுறையோடு வாழவும்,ஒருவரே ஒருவர் புரிந்து நடந்து கொள்ளுதல், விட்டுகொடுத்தல்,குடும்பத்தினருடன் எவ்வாறு நடந்து கொள்ளுதல் போன்ற பல விஷயங்கள் மணமக்களுக்கு தெளிவுரை வழங்கபட்டது.பெண்களுக்கு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலும் ஆண்களுக்கு செக்கடி பள்ளியிலும்  நடைபெற்றது. 

மேலும்  மெளலவி முஃப்தி அப்துல் ஹாதி அவர்கள் மணமகளுக்கு சிறந்த சொற் பொழிவு, மற்றும்  ஆலோசனைகள்  வழங்கினார்கள். கடற்கரைதெரு ஜும்மா பள்ளி இமாம் மெளலவி சபியுல்லாஹ் அன்வாரி,இத்ரிஸ் மௌலானா ஆகியோர் மணமகன்களுக்கு ஆலோசனை மற்றும் தெளிவுரை வழங்கினார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை சம்சுல் இஸ்லாம் சங்க ஏற்பாட்டில் சமீபத்தில் திருமண முடித்த அணைத்து தம்பதிகளுக்கும் கவுன்சிலிங் நிகழ்ச்சி நாளை ஞாயிற்று கிழமை  காலை 10 மணிக்கு சங்க வளாகத்தில் நடைபெற இருக்கிறது.அது சமயம் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளபடுகிறது.  Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது