முத்துப்பேட்டையில் புகாரி சரீப் நிறைவுநாள்

முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரபுசாஹிப் பள்ளி வாசலில் ஒவ்வொரு ஆண்டும்புகாரி சரீப் நிகழ்ச்சி 30 நாட்கள் நடைபெறுவது
வழக்கம். அதுபோல கடந்த மாதம் 13-ம் தேதி 26- வது ஆண்டு புகாரி சரீப் நிகழ்ச்சி துவங்கியது.இந்த நிலையில் நேற்று நிறைவுநாள் நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் காலை 8 மணிக்குதுவங்கி மதியம் 12 மணி வரை
இஸ்லாமியர்களின் பயான் மற்றும் துஆ நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. முடிவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்குப்பெற்றனர்.எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வந்திருந்தவர்களுக்குகுளிர்பானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது         sources.         மு.முகைதீன்பிச்சை

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது