தற்கொலை தான் இறுதி தீர்வா?

மன வேதனை உடன் ஒரு கட்டுரை !!
அண்மைக் காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. உலக நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

அதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கையானது கொலைகள் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. உலகில் வாழும் 5% பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். பால், வயது, நாடுகள் பேதமின்றி தற்கொலை எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது. 

குறிப்பாக இளைய சமுதாயத்தினர் (15 – 19 அகவைக்குட்பட்டவர்கள்) இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் தற்கொலை நடைபெறுகின்றது. ஆய்வறிக்கையின்படி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்தான் தன்னைத்தானே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. 

தாமே தமது உயிரை வருத்தி சாவது என்பது எவ்வளவு துன்பமான காரியம் . ஐயோ நினைத்து பார்க்கவே முடியவில்லை . பிரச்சனைகள் பலவிதங்களில் வரலாம். அது தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி, தீராத நோய், திருமண வாழ்வில் விரக்தி அடைதல், கடன் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம். பெரும்பாலான தற்கொலைகளும் இவைகளால்தான் பெரிதும் நிகழ்கின்றன. 

தற்போது பெற்றோர்கள்,ஆசிரியர்கள் திட்டுவதால் கூட இந்த காலத்தில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதெல்லாம் தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சனை . இவற்றுக்கு எல்லாம் தற்கொலைதான் தீர்வா ? இல்லையே . சில விடயங்களை பேசி தீர்த்து கொள்ளலாம் . சில விடயங்களுக்கு காலம் பதில் சொல்லும் , சில விடயங்களுக்கு பொறுமை அவசியம் . தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம், பிரச்சினை, தோல்வி, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறான். தற்கொலைக்கு வயது, பொறுப்புகள், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்ற பேதமெல்லாம் இல்லை. மனநிலை ஒன்று மட்டுமே காரணமாகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டவனாகவே வாழ்கின்றனர். இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு முழவதும் ஏன்! உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.இதெல்லாம் மனித வாழ்வில் சகாயமான விடயம் . இவற்றுக்கு எல்லாம் தற்கொலைதான் தீர்வா ? அப்படியானால் எவ்வளவு பேர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் இந்த உலகில் ? இதெல்லாம் மடத்தனம் . தற்கொலை செய்வதால் இவர்களின் பிரச்னை தீரப் போகிறதா?. இல்லை அவர்கள் அதிலிருந்து தப்பித்து கொள்ளலாமென்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. 

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. ஒருவன் தற்கொலை செய்துகொள்வது மன்னிக்க முடியாத பாவம். பிறப்பு எவ்வாறு இறைவனின் நாட்டத்தை கொண்டு இயற்கையாக நிகழ்கிறதோ அதுபோல ஒருவருடைய இறப்பும் அது இறைவனின் நாட்டத்தை கொண்டே இயற்கையாகவே நிகழ வேண்டும். 

உயிரை நம்மிடமிருந்து பறிப்பதற்கு இறைவன் ஒருவனுக்கே அதிகாரம் இருக்கிறது. அவனுடைய அதிகாரத்தில் நாம் கைவைத்தால் அது மன்னிக்க முடியாத பாவமே. பெரும்பாலான மக்கள் அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றனர். 

ஆனால் சிலருக்கு இந்த உணர்வுகள் கடுமையானதாகவும், தற்கொலை செய்யும் அளவிற்கு அமைந்து விடுகிறது. மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான். எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். 

இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க். ஆதலால் தற்கொலை எதிர்ப்பை மக்கள் கருத்தாக மாற்றி, அதனைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்துச் செயல்பட்டால் தற்கொலை என்னும் கொடிய நோயை முற்றிலுமாக ஒழித்து விட முடியும். 

-N.காலித் அஹ்மத், 
CBD தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

2 comments:

  1. Very first education is self discipline and knowing the meaningful life style in the world, this basic education is from parents only. Thereafter individuals are become eligible to join in schools and colleges. So, here we have to understand the importance of parents duty about their children's daily activities and to follow them for right path. We should not blame either teachers or Educational organizations.

    ReplyDelete
  2. நேற்று தமிழ் இந்துவில் இதே கருத்தில் வந்த கட்டுரைக்கு நான் கருதிட்டேன், அது:
    abuhaamid
    இன்றைய கட்டாயத் தேவை என்னவெனில், பிரிவு வித்தியாசம் இல்லாமல் எல்லா கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு கட்டாய வாழ்க்கைப் பாடம் தேவை. அதில் வாழ்கையில் எதிர் நீச்சல் போட்டு உலகில் சாதனை புரிகிறோமோ இல்லையோ நல்ல மனிதனாக வாழவேண்டும் என்ற பாடம் இருக்க வேண்டும். இன்று முதல் இந்த பாடப் பிரிவை உடனே அரசு செய்ய வேண்டும். இது இன்று நாட்டுக்கு அவசர தேவையாகும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது