அதிரையில் புத்தக வெளியீட்டு விழா!

அதிரையில் நாளை புத்தக வெளியீட்டு விழா நடைப்பெறவுள்ளது.

அதிரையின் பன்னூலாசிரியர் அதிரை அஹமது காக்கா அவர்கள் இஸ்லாமிய மற்றும் இலக்கிய நூல்கள் பலவற்றை அழகிய தமிழில் படைத்துள்ளார்கள். அவற்றை அதிரை பதிப்பகம், IFT மற்றும் இலக்கியச் சோலை உள்ளிட்ட தமிழகத்தின் பிரபலமான பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். 

அறிஞர் அதிரை அஹமது காக்கா அவர்கள் எழுதியுள்ள "நல்ல தமிழ் எழுதுவோம்" எனும் நூல் இலக்கிச் சோலை பதிப்பகம் சார்பாக வெளியிடப்படவுள்ளது. CMP லேனில் உள்ள ALM பள்ளியில் நாளை மாலை சரியாக 4 மணியளவில் நடைப்பெறவுள்ளது.

அதிரையரின் படைப்பாக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது இலக்கியச்சோலை பதிப்பகம்.

  

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது