அதிரையில் நாளைய தினம் ஒருநாள் பத்திரிக்கையாளர்கள் பயிலரங்கம்!

அதிராம்பட்டினம் எக்ஸ்பிரஸ் மீடியா ட்ரஸ்ட் சார்பில் ஒருநாள் பத்திரிக்கையாளர்கள் பயிற்சி முகாம் நாளை ALM பள்ளிகூட வளாகத்தில் நடைபெற உள்ளது. 
இதில் பன்னூலாசிரியர் அதிரை அகமது காக்கா அவர்கள் வழிகாட்டுதலில் நடைபெற உள்ள இம்முகாமில் . அதிரை இளைஞர்களை முதன்மை மீடியாவிற்கு கொண்டு செல்வது என்ற நன்னோக்கிலும் அவர்களை இனம் கண்டு முறையாக பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை நாம் முன்னெடுத்து செல்ல இருக்கிறோம், அதன் ஒருபகுதியாக நாளை 17.01.2016 (ஞாயிறு) அன்று காலை 9.30 மணிக்கு பத்திரிக்கையாளர்கள் பயிலரங்கு துவங்க உள்ளது .

இதில் சிறப்பு பயிற்சியாளர்களாக இந்து குழுமத்தின்  தமிழ்இந்து நாளிதளின் முதன்மை ஆசிரியர் சாதிக்,  மற்றும் NEWS7 செய்தி தொலைகாட்சியின் துணையாசிரியர் குத்புதீன் , புதிய விடியல் இதழின் ஆசிரியர் ரியாஸ் அகமது . உள்ளிட்ட முக்கிய பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டு ஒருநாள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இதில் கலந்துகொள்ளும் பயிற்சியாளர்களுக்கு தேவையான குறிப்பேடு,பேனா,உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். 

மேலும் அங்கேயே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இறுதியாக பன்னூலாசிரியர் அதிரை அகமது காக்கா எழுதிய நல்லதமிழ் எழுதுவோம் என்ற புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதால் இந்த அறிய வாய்ப்பினை அதிரை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது