கணவன் மனைவி உறவு மட்டும் நாம் இறக்கும் வரை நம் பின்னாலேயே தொடந்து வந்து கொண்டே இருக்கும்.

கணவன் மனைவி உறவு மட்டும் நாம் இறக்கும் வரை நம் பின்னாலேயே தொடந்து வந்து கொண்டே இருக்கும்.

ஒரு வாலிபன் குடும்பத்தார்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கருப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை, மனைவியை வெறுக்கின்றான், படுக்கையை விட்டு தள்ளிவைத்தான்.

என்னதான் தன் கணவன் தன்னை வெறுத்தாலும், தள்ளிவைத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கின்றாள் அந்த மனைவி.

வீட்டுக்குள் வரும்போது நல்லாத்தான் வருகின்றான், அறைக்குள் சென்றதும் சும்மா ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கின்றான். அவனுடைய மனைவி அறைக்குள் நுழைந்ததும் அவன் ஒன்றும் சொல்லாமல் வெளியில் சென்று விடுவான். பிறகு லேட்டாக வருவான். அவனுக்காக வைத்த சாப்பாடு சூடு மாறிபோய் நீத்து போயிருக்கும். அதை சாப்பிட்டும் சாப்பிடாமலும் இருப்பான்.

இப்படியே பல இரவுகள், பல நாட்கள் ஓடின, இவ்வளவுக்கும் அவள் கொஞ்சமும் கலங்காமல் அசைக்க முடியாத நம்பிக்கையில் இதுவும் ஒருநாள் நிச்சயமாக மாறியே தீரும் என்று நம்பி இருந்தாள்.

இப்படி ஏதோ காதுகளுக்கு எட்டாத சலசலப்போடு ஒரு சம்பவம் நடப்பதை வாப்பாவும் உம்மாவும் சாடையால் அறிந்து விட்டனர், ஒரு நாள் வாப்பா உம்மா இருவரும் சேர்ந்து மகளிடம் கணவரைப் பற்றி விசாரிக்கின்றார்கள், மகளோ கணவனை விட்டுக் கொடுக்காமல், அவொ நல்லாத்தானே இருக்காக, ஒரு பிரச்சனையும் இல்லையே வாப்பா! என்று சொல்லி சமாளித்து மழுப்பி விடுகிறாள் இந்த மனைவி.

இருந்தாலும், வாப்பாவிடமும் உம்மாவிடமும் பொய் சொல்லிவிட்டோமே என்று மனதுக்குள் அழுதால் அவள்.

ஒரு நாள் அவள் கொஞ்சமும் தயங்காமல் ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி அல்லவா. உங்களை அன்போடு பார்க்கின்றேன், அளவில்லாமல் காதலிக்கிறேன், ஆசையோடு நெருங்குகின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் கேட்க இவன் ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு அறையின் ஒரு ஒரமாக உட்கார்ந்து விடுகின்றான்.

இரவு 1மணி இருக்கும், அந்த அகால நேரத்தில் அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

வலி தாங்க முடியாமல் கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள்.

அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்ட உடனே வாப்பாவும் உம்மாவும் அறையின் கதவை தட்டுகிறார்கள், மகள் கதறிக்கொண்டே அறைக்கதவை திறக்கின்றாள், மகள் கதறுவதையும் மருமகன் துடிப்பதையும் கண்ட உடனே டாக்டருக்கு தகவல் கொடுக்கிறார்கள், உடன் மருமகன் வீட்டாருக்கும் தகவல் போகுது.

கனவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புளம்பிக்கொண்டு அறையையே சுற்றி சுற்றி வருகிறாள்.

தன் மகளின் நிலையைக் கண்ட வாப்பாவும் உம்மாவும், மருமகனை மருத்துவமனைக்கு காரில் அழைத்துக் கொண்டு போகிறார்கள், காருக்குள் தன் மனைவியைப் பார்த்த கணவன், தன்னை அறியாது அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

அவள், தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு வாப்பா இன்னும் கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறாள். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.

மருத்துவமனையை அடைந்து விட்டனர். அங்கு எமெர்ஜென்சி Icu.-வில் சேர்க்கப்பட்டது. மருமனின் வாப்பா உம்மா மற்றும் உறவினர்கள் எல்லோரும் வந்து விட்டனர். ஆனால் அந்த மனைவியின் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இவன்மீது இப்படி ஒரு அன்பா, பாசமா, காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர்.

பிறகு டாக்டர் வெளியில் வருகிறார். வந்தவர், இவர் அதிகமாக விருந்து சாப்பிட்டதினாலும், இரவு நேரங்களில் தினமும் பாஸ்ட் புட் உட்கொண்டதாலும் வந்த இந்த பாதிப்பு... இவைகளெல்லாம் தவிர்க்கணும் அதோடு உடற்பயிற்சி செய்யனும், மற்றபடி பயப்படுகிறமாதிரி இப்போதைக்கு ஒன்றும் இல்லை, ஒரு வாரத்திற்கு மாத்திரை மருந்து கொடுப்பேன், ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்கிறார், டாக்டர்.

உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல, அவன் தன் மனைவியை தேடுகிறான்.

அவள் மருத்துவமனையின் கதவு அருகில் நின்று கொண்டு இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள்.

அவன் தன் மனைவியின் பெயரை முதன் முதலாக சொல்லி சத்தமாக சமீனா பாத்திமா என்று அழைக்கிறான்.

சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்து போயிருந்தது.

அவன், அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் உன்னை வெறுக்க மாட்டேன், உன்னோடு இருப்பேன், உன்னை கலங்கடிக்க மாட்டேன், உனக்காக வாழ்வேன் என்கிறான்.

தன் கனவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள்.

என் மேல் இவ்வளவு பாசமா? என்று கணவன் தன் கண் சாடையால் மனைவியைப் பார்த்து கேட்கிறான், அதற்கு அவள், நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்த்தையில் பல கோடி அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த அளவில்லா அன்பு கொண்ட மனைவி.

அது கணவன் மீதுள்ள ஒரு மரியாதை, காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை அன்புடன் காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் எல்லா உறவு முறைகளும் ஒரு காலக் கட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும், ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் இறக்கும் வரை நம் பின்னாலேயே தொடந்து வந்து கொண்டே இருக்கும்.K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது