இனி அதிரை மக்கள் யாரும் வெயில் மழையில் ரோட்டில் நிக்க வேண்டாம்!!!

அதிரையில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு  மக்கள் பயன்பாற்றிக்கு இல்லாமல் டேக்சி வாகனங்கள் ஆக்கிரமிப்பால் பல வருடங்களாக இருந்த பேருந்து நிலையம் தற்போது மக்கள் பயன்படுத்தும் விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டேக்சி வாகனங்களை இன்று காலை  காவல் துறை உதவியுடன் அதிரை பேரூர் நிர்வாகம் அப்புறபடுத்தி உள்ளது.
வாகனங்கள் அப்புறபடுத்தப்பட்டு பேருந்து உள்ளே சென்று பயணிகளை ஏற்றும் காட்சி  
தற்போது டேக்சி வாகனங்கள் நிறுத்த அதிரை பேரூர் மன்றம் சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக இன்று  வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து அதிரைக்கு வரும் அணைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி வருகின்றனர்.மேலும் இதனால் பயணிகள் யாரும் வெயில் மழையில் நிற்பது தவிர்க்கப்பட்டு உள்ளது.
அதிரை பேரூர் மன்றம் சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் டேக்சி வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் காட்சி 

பேருந்து நிலையத்தில் டேக்சி வாகனங்களை அப்புறபடுத்தி பொதுமக்களுக்கு பேருந்து நிலையத்தை பயன்படுத்த வழிவகுத்த அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம்,து தலைவர் பிச்சை,காவல்துறை ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றிதனை தெருவித்து கொண்டனர்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது