அதிரை எக்ஸ்பிரஸ் மாத இதழாசிரியரின் விளக்கம்!

அன்பார்ந்த அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு . அதிரை எக்ஸ்பிரஸ் மாத இதழ் கடந்த ஐந்து மாதங்களாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள் . அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான இதழ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது . 

இதில் ஆறாவது பக்கத்தில் "கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்" என்ற தலைப்பில் சகோதரர் நூருல் இப்னு ஜஹபர் அலி அவர்கள் எழுதிய விழிப்புணர்வு கட்டுரை ஒன்று வெளியானது. இதில் கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை நமது வாசகர்கள் பயன்பெறும் வகையில் அவர் எழுதியிருந்தார் மேலும் அதிரை இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி வருவதையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த கட்டுரையில்  அவரது பெயருடன் புகைபடமும் இடம்பெற்று இருந்தது . 

இதனை சிலர் வேண்டும் என்றே அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தவறான  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த விளக்கத்தை நமது சார்பாக அளிக்கின்றோம். 

கட்டுரையில் இடம்பெற்றுருக்கும் புகைபடத்துடன் கூடிய பெயரை ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி என்று திருத்தி வாசிக்கவும். 

-ஆசிரியர், 
அதிரை எக்ஸ்பிரஸ் மாத இதழ். 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

1 comment:

  1. இது ஒரு அச்சுப் பிழையே அன்றி வேறு ஒன்றும் இல்லை, ஒரு வார்த்தை அதாவது ஒரே ஒரு வார்த்தை "ஆக்கம்" என்ற வார்த்தை விடுபட்டதினால் வந்தது. அதே நேரம் வாசிப்பவர்களும் சிந்திக்க வேண்டும்.

    இதை அவதூறாக விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது.

    விமர்சிக்கத் தெரிந்த மனமே! உனக்கு சிந்திக்க தெரியாதா?
    சித்திக்கத் தெரிந்த மனமே! உனக்கு வாயை அடக்க தெரியாதா?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது