ஷிஃபா மருத்துவமனையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு !


அதிரையில் பிரச்சித்தி பெற்ற ஷிஃபா மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக செயல்பாடற்று இருந்துவந்துள்ளது. 

இதனை அடுத்து ARDA நிர்வாகம் ஷிஃபா மருத்துவமனையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக ARDAவின் தலைவர் MS தாஜுதீன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் நமது ஷிஃபா மருத்துவமனையை சிறப்புடன் நடத்த விருப்பம்முள்ள நிறுவனங்கள் ,மருத்துவகுழுக்கள்,, தன்னார்வஅமைப்புகள், என விருப்பம்முள்ளவர்கள்  ஏற்று செயல்படுத்தலாம் என கூறியுள்ளார் . 

இதற்க்கான வரைவு திட்டத்தை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் ARDAவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவ்வாறு வரும் விண்ணபங்களை மட்டும் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று ARDA குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது .


ஷிஃபா மருத்துவமனையை தனியாரிடம் ஒப்படைப்பது என்ற ARDAவின் முடிவு ?

வரவேற்க்கதக்கது
தேவையற்றது
கருத்தில்லை
Quiz Maker
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

13 comments:

 1. இது ஒரு நல்ல முடிவாக இந்நேரம் கருதப்பட்டாலும் இது ஒரு காலம் தாழ்ந்த முடிவே. இதையே 10 வருடங்களுக்கு முன்பே செய்திருந்தால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையால் பணங்காசுகள் கூடுதலாக வசூலிக்கப்பட்டாலும் நல்லிரவு நேர அவசர சிகிச்சைகளுக்கும், அது சரிவர கிடைக்கப்பெறாமல் ஏற்பட்ட சில உயிர் இழப்புகளுக்கும் மற்றும் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருச்சி மருத்துவமனைகளை நோக்கி பல சிரமங்கள், சிலவுகளுக்கிடையே மக்களின் பகல் நேர ஓட்டங்களுக்கும் நம்மூர் சுற்றுவட்டார மக்களுக்கு அவசியம் வந்திருக்காது.

  உள்ளூர் மக்கள் காலப்போக்கில் வரவேற்பு அளிக்காமல் போனதே இந்நிலைக்கு காரணம் என்று முடித்து விடாமல் ஏன் அளிக்காமல் போனார்கள்? என்ற மறுபக்க கேள்விக்கும் விடை காண வேண்டியுள்ளது.

  ReplyDelete
 2. நல்ல முடிவு இன்ஷா அல்லாஹ் நமதூர் இளைய தலைமுறையினர் நல்ல திட்டத்துடன் முன்வருவார்களா. குறைந்தது 20 கோடியாவது முதலீடு செய்பவர்களாக இருந்தால் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரலாம்.

  ReplyDelete

 3. "உள்ளூர் மக்கள் காலப்போக்கில் வரவேற்பு அளிக்காமல் போனதே இந்நிலைக்கு காரணம்" 100% சரியான செய்தி.

  இதை இளைய தலைமுறையினர் ஆர்வமுள்ளவர்கள், நல்லவர்கள் முன்னின்று நடத்த முன்வரவேண்டும். சிறந்த ஊக்குவிப்போர்கள், ARDA - வின் அறிவிப்பை தொடர்ந்து சிறந்த திட்டங்களுடன் அணுகி, இந்த மருத்துவமனையை குத்தகைக்கு எடுத்து ஊரில் பங்குதாரர்களை சேர்த்துக்கொண்டு அதிகப்படியான நிதியாதாரத்தை திரட்டி, தஞ்சை திருச்சி மாநகரங்களில் உள்ளது போன்ற மருத்துவ வசதிகளை ஏற்படுத்தினால், நமதூர் மக்களும், சுற்று வட்டாரங்களிலும் கிராமங்களிலும் உள்ள மக்கள் நிச்சயம் பயன்பெறுவர் ஆதரவும் அதிகரிக்கும்.

  ReplyDelete
 4. அல்ஹம்துலில்லாஹ் ARDA நல்ல முடிவுக்கு வந்துள்ளது , நமதூர் மக்கள் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருச்சி என அலைந்து, ஒருபுறம் கடுமையான பொருளாதார சீர்கேடு ஏற்பட்டாலும், நம் பெண் மக்கள் அந்நியர்களிடம் அல்லல் படும் காரணத்திற்காகவாவது ஷிபா ஆஸ்பத்திரி புத்துயிர் பெற்று சிறந்து விளங்க வேண்டும். இதன் முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்கள் நல்ல கருத்துக்களை எடுத்து வைத்து விரைவில் நம் மக்கள் பயன்பெறும் அளவில் முயற்சி எடுக்க வேண்டும்

  ReplyDelete
 5. காலம் கடந்த முடிவு என்றாலும் வரவேற்புக்கு உரியது.

  ReplyDelete
 6. யா அல்லாஹ் இந்த அதிரை மக்கள் வைத்தியத்திற்காக செய்யும் செலவுகளுக்கும், அவர்கள் வெளியூருக்கு சென்று படும் அவஸ்தைகலுக்குமாவது கருணை காட்டி இந்த ஷிபா ஆஸ்பத்திரியை நல்ல முறையில் விரிவாக்கம் செய்து நடத்த நல்லவர்களுக்கு வாய்ப்பளித்து இதை மென்மேலும் வளர உதவுவாயாக.

  ReplyDelete
 7. Shifa hospital ஏதோ பொதுத்துறை (அரசு) நிறுவனம் போன்ற பொருளைத் தருகிறது "தனியாரிடம் ஒப்படைப்பது..." என்ற இந்தப் பதிவின் தலைப்பும், பதிவில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட vote widgetம்! இப்பவும் அது தனியாரின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது. எனவே,

  "ஷிஃபா மருத்துவமனையை மருத்துவத்துறையில் தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள்(Professionals) மேற்பார்வையில் ஒப்படைக்க முடிவு!" என்று தலைப்பையும்;


  "ஷிஃபா மருத்துவமனையை மருத்துவத்துறையில் தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள்(Professionals) மேற்பார்வையில் ஒப்படைப்பது என்ற ARDAவின் முடிவு" என்று vote widget-ஐயும் திருத்தினால் பொருள் மயக்கம் கலையப்படும்.

  -Shafi MI

  ReplyDelete
 8. Vote Widget - பொது மக்களின் கருத்தை அறிய அதிரை எக்ஸ்பிரஸ் சுயமாக போட்டுக்கொண்டது என நினைக்கிறேன். எதுவானாலும் நல்லது நடக்க துணை நிற்போம், இன்ஷா அல்லா.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது