அதிரையில் அலட்டிய அதிகாரி அலறிய ஊழியர் காணொளி !!


அதிரை அருகே ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியாக அமைந்துள்ளதுபிலால் நகர் பகுதி .இந்த பகுதிக்கு அதிமுகவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் ஊராட்சி தலைவராக இருந்துவருகிறார் . இவர் இப்பகுதியை முறையாக கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இன்று காலை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அக் கிராம மக்களிடம் உறுதிமொழியேற்பு சீட்டுகளில் கையெழுத்து வாங்க ஒரு குழு சென்றுள்ளது அந்த சீட்டில் கூறப்பட்டுள்ளதாவது . 

இந்த கிராமத்தில் மலம் வெளியிடங்களில் கழிக்க  மாட்டோம்,கழிவு நீர்களை சாலைகளில் ஒட விடமாட்டோம் உள்ளிட்டவைகள் இடம் பெற்று இருந்தன . 

இதனை கண்ட அப்பகுதிவாசிகள் நாங்கள் மலத்தினை எங்கு கழிக்கவேண்டும்? கழிவுநீர்களை எவ்வாறு வெளியிட வேண்டும்? என அதிகாரிகளை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர் . 

இதற்கான கட்டமைப்புகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராமல் நாங்கள் எவ்வாறு கையெழுத்திட முடியும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 

இதனை அறிந்த PDO அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார். அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவர், ஊழியர், அப்பகுதி  அதிமுக கவுன்சிலர் ஆகியோரை அழைத்து இப்பகுதிக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என கண்டித்து சென்றார். இதனை அடுத்து அப்பகுதியில் நிலவி வந்த பரபரப்பு நீங்கியது .
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

2 comments:

  1. இதுபோல் மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் ஊருக்கு நலன் சாத்தியமே.

    உடனடி கலதொகுப்பு தந்த அதிரை எக்ஸ்பிரசுக்கு நன்றி .

    ReplyDelete
  2. இதுபோல் மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் ஊருக்கு நலன் சாத்தியமே.

    உடனடி கலதொகுப்பு தந்த அதிரை எக்ஸ்பிரசுக்கு நன்றி .

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது