துறைமுக பகுதி முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். பழ.கருப்பையா.

என்னுடைய எம்.எல்.ஏ வாழ்க்கை தோல்வியடைந்து விட்டது நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ பழ. கருப்பையா கூறியுள்ளார். பேச்சாளரும் எழுத்தாளருமான பழ. கருப்பையா, 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட பழ.கருப்பையா, அமைச்சர்கள் கொள்ளையடிக்கிறார்கள்; வைப்பாட்டிகள் வீட்டுக்கு போவதுகூட பொதுப்பணி என்பதாகிவிடுகிறது என அதிரடியாக தாக்கிப் பேசினார். தமிழகத்தில் இன்று அமைச்சரும், தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது. அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது; 


ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ தேவைப்படுகிறது என்று கூறினார். அப்போதே அவர் கட்சியை விட்டு நீக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பில், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்களும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டச் சேர்ந்த பழ.கருப்பையா (துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.மேலும் தன்னுடைய துறைமுக தொகுதி எம் எல் ஏ பதவியையும் அதிரடியாக இன்று மதியம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

thatstamil
vikadan

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது