SI செல்வமணி புகார்: பா.ஜ.க. கல்யாண் ராமன் கைது!



ஃபேஸ்புக்கில் சிறுபான்மை சமுதாயத்தினர் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வந்த சங்பரிவார் அமைப்பை சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சிறு வயது முதலே தான் ஆர்.எஸ்.எஸ். ஊழியன் என்றும் அகில பாரத வித்யார்தி பரிஷத்தின் முன்னாள் முழு நேர ஊழியன் என்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஊடகங்களில் பங்கு பெறுபவர் என்றும் தன்னை குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கல்யாண் ராமன் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் குறித்தும் அவர்களின் மத நம்பிக்கைகள் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் தொடர்ந்து பல அவதூறு செய்திகளை தனது சமூக வலைதள பக்கங்களில் இவர் தொடர்ந்து பரப்பி வந்துள்ளார். அத்துடன் சிறுபான்மை இயக்க மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் சமூக ஆர்வலர்கள் குறித்தும் இவர் மோசமான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

டிசம்பர் 26 அன்று இவரது ஃபேஸ்புக் பக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து பதிவிட்ட அவதூறு செய்தியை மையமாக வைத்து SI செல்வமணி  அளித்த புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் காவல்துறையினர் கல்யாண் ராமன் மீது வழக்கு பதிவு செய்து இன்று காலை அவரை கைது செய்தனர். கல்யாண் ராமன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Share:

3 comments:

  1. கிரேட் காவல்துறை ... இவனுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கிட PP தரப்பு வாதாட வேண்டும் .

    ReplyDelete
  2. யாப்பா கொஞ்சம்மாவது லாஜிக்கா ஓரளவாவது இநத பிரச்சினையில் உண்மைய எழுதுங்கப்பா. புதுசா இருக்கு si செல்வமணி. பரவாயில்லை உண்மையை சேத்துங்கோ.

    ReplyDelete
    Replies
    1. சிட்லபாக்கம் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு அவர்களிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் தான் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புடைய காவல்நிலையத்தை தொடர்புகொண்டு விசாரித்திக்கொள்ளுங்கள்.

      குற்றபதிவு எண். 98:2016
      சிட்லபாக்கம் காவல்நிலையம்,
      புகார்தாரர் பெயர்: செல்வமணி

      Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது