உண்மைக்கு கிடைத்த வெற்றி-அதிரை சேர்மன் பேட்டி (வீடியோ)

அதிரை பேரூராட்சி தலைவராக இருந்து வரும் அஸ்லம்.மீது கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  அதிரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பன்னீர் என்பவர் தன்னை சாதியின் பெயரால் தகாத வார்த்தைகளால் பேருராட்சி தலைவர் திட்டியதாக சொல்லி அவர்  மீது வன் கொடுமை வழக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டார்.இந்நிலையில் சுமார் இரண்டு வருடங்களாக தஞ்சை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று கொண்டு இருந்தது.


இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை நிறைவு பெற்றுஇந்த வழக்கில் உண்மை தன்மை இல்லையென்றும் பொய்யாக போடப்பட்ட வழக்கு என்று நிரூபிக்கப்பட்டு அதிரை  பேரூர் மன்ற தலைவர்   அஸ்லம் அவர்கள் குற்றமற்ற நிரபராதி என்று இவ்வழக்கில் இருந்து விடுவிக்கபட்டார்.

மேலும் இந்த தீர்ப்பு   தொடர்பாக அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் கூறியதாவது:இந்த தீர்ப்பு அல்லாஹ் எனக்கு தந்த வெற்றி.நீதிக்கு கிடைத்த வெற்றி என்னுடைய வளர்ச்சி பிடிக்காத சிலர் என்மீது போடப்பட்ட பொய்யான வழக்கு என்று உண்மை நிலை அறிந்து நீதிமன்றம் என்னை நிரபராதி என்று தீர்பளித்தது.அல்லாஹ்வுக்கு எல்லாம் புகழும்.மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.என் மீது அக்கறை கொண்டு என்னுடன் உறுதுணையாக இருந்த  அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் ஸலாத்தினையும் தெருவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.         ---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது