அதிரையின் சீஷன் விளையாட்டு பட்டம் !

முன்பொரு காலத்தில் காலத்திற்கு ஏற்றார் போல் ஊருக்கு ஊரு ஒரு விளையாட்டு சீஷன் இருக்கும் . அது பலிங்கி தொடங்கி பட்டத்தில் முடியும் சீஷன் விளையாட்டுக்கள் தாம் அவை .

தற்பொழுது அதிரையில் பட்டம் பறக்க விடுவதற்கான சீஷனாகும்.  இந்த பட்டம் விற்பனையில் முன்னோடி ஸ்தாபனமாக இருப்பது நூர்லாட்ஜ் ஹோட்டல் அருகே உள்ள ஜப்பார் கடையாகும்.இதில் ரூபாய் 5 முதல் 15 ரூபாய் வரையிலான பட்டங்களை விற்பனை செய்து வருகின்றனர் .

இதனை வாங்கி செல்லும் சிறுவர்கள் பட்டம் பறக்க விடுவது, எவருடைய பட்டம் மிக உயரத்தில் பறக்கும் என போட்டிகள் நிறைந்த மைதானமாக அதிரையில் உள்ள காலியிடங்கள் தற்பொழுது மாறியுள்ளன. குறிப்பாக காட்டுப்பள்ளி வளாகத்தில் தினந்தோறும் மாலை வேளைகளில் இளைஞர்கள் பட்டாளாம் பட்டமும் கையுமாக நிற்பது பழைய நினைவலைகளை ஏற்படுத்துகிறது.   

இதே  அன்றைய நாட்களில் பள்ளிகூட விடுமுறையின் பொழுது அதிகாலை தொடங்கி உச்சி வரை நீடிக்கும் இந்த வகை  விளையாட்டுப் போட்டிகள் கண் மூடிதனமாக விளையாடிய காலங்கள் ஞாபகத்திற்கு வரலாம்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

1 comment:

  1. எங்கள் வாலிப வயசிலே, நாங்களும்தான் வித விதமான பட்டம் விட்டோம். அதுவும் நாங்கள், எங்கள் கைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டத்தை விட்டோம்.

    இது என்ன பட்டமா? சரியான நோஞ்சான் பட்டம்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது