அதிரையில் டேக்சி ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு


டேக்சி ஸ்டாண்ட் ஆக்கிரமிக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி 

அதிரையில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு  மக்கள் பயன்பாற்றிக்கு இல்லாமல் டேக்சி வாகனங்கள் ஆக்கிரமிப்பால் பல வருடங்களாக இருந்த பேருந்து நிலையம் தற்போது மக்கள் பயன்படுத்தும் விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டேக்சி வாகனங்களுக்கு அதிரை ஈசிஆர் பகுதியில் டேக்சி ஸ்டான்ட்  அதிரை பேரூர் மன்ற செலவில்  கட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த  அணைத்து டேக்சி வாகனங்களும் முறையாக கட்டப்பட்ட  ஈசிஆர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு நாட்கள் எந்த ஒரு இடையூறுமின்றி செயல்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம்  டேக்சி ஸ்டான்ட் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டு மர கன்றுகள் நட்டப்பட்டு உள்ளது.மக்கள் நலனுக்காக பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு டேக்சி ஸ்டான்ட் ஓட்டுனர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புதிதாக டேக்சி ஸ்டான்ட் அமைக்கப்பட்டதை தடுக்கும் நோக்கில் இது போன்ற செயல் அமைந்து உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
-
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது