இந்திய சுதந்திரத்திற்க்கு பாடுபட்ட அதிரை சகோதரர்கள்

நமது ஊரை  சேர்ந்த சகோதரர்கள் "பெரிய மின்னார்" மர்ஹூம் ஜனாப் மு. முகம்மது ஷரிப்மற்றும் மர்ஹூம் ஜனாப் செய்யது முகம்மது ஆகியோர்கள் இந்த அமைப்பில் பணி புரிந்து நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்வை தியாகம் செய்தவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமதூரை  சேர்ந்த தியாகிகள் சகோ. மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் சகோ. அப்துல் ஹமீத்ஆகியோர்களும் நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்வை தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நமதூரைச் சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவரும் வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

இந்தியா குடியரசுப் பெற்று  70 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த நாளில் நமதூரை சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம்.

மறைக்கப்படுவது, மறந்துவிடுவது அல்லது மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

1 comment:

  1. இவர்கள் புகழப்பட வேண்டும் நமது தாயபுள்ளைகளான இவர்களின் குடும்பத்திற்கு முறையாக அரசின் சலுகைகள் கிடைக்கின்றனவா ????

    விபரம் தெரியபடுத்தவும் இல்லையேல் அவைகளை ஒழுங்கு படுத்துவது நம்மின் கடமை ....

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது