அதிரையில் கல்லூரி மாணவி தற்கொலை!


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் சங்கர். எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவரது மகள் சுலோச்சனா (18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் என்.சி.சி.யிலும் இருந்து வந்தார். குடியரசு தின விழாவை முன்னிட்டு என்.சி.சி. பயிற்சி நடைபெற்றது. 

இதனை சுலோச்சனா சரியாக செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் சீனியர் மாணவிகள் திட்டியதாக தெரிகிறது. இது அவருக்கு மன வேதனையை அளித்தது. இன்று கல்லூரி விழாவுக்கு சென்ற அவர் வகுப்பறையில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி தற்கொலை சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. உரிமைக்காக சில மாணவர்களும், சகிப்பின்மை காரணமாக சில மாணவர்களும் என தற்கொலை பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அதில் சிலர்தான் ரோஹித் வெமுலா, எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி. அந்த பட்டியலில் தற்போது சுலோச்சனாவும் இணைந்துள்ளார். ஆசிரியர் ஒருவர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், சீனியர் மாணவிகள் கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில்தான் விழுப்புரம் அருகே தனியார் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவியர் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட செயல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில் இன்னும் ஒரு தற்கொலை நடந்துள்ளது. 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

3 comments:

 1. PLEASE REMOVE THE PHOTO!
  NEVER SHOW SUCH PHOTOS.
  FAMILIES AND CHILDREN ARE SEEING YOUR BLOG.

  ReplyDelete
 2. நமது தொப்புள்கொடி உறவான சகோதரர் சங்கர் அவர்களின் புதல்வி சுலோச்சனா நாம் அனைவர்களுக்கும் புதல்வியே ...தற்கொலை என்பது ஒரு நொடி பைத்தியக்கார தனம். நமதூர் கல்வி நிலையங்கள் பாரம்பரிய மிக்க நமது பெற்றோர்கள் சங்கத்தின் நேரடி மேற்பார்வையில் கண்காணிக்க படவேண்டும் .

  Whats going on our home town...????

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது