வாட்ஸ் ஆப் குரூப் நெறியாளர் மீது வழக்கு !

ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து ஆட்சோபகரமான முறையில் கருத்து தெரிவித்த வாட்ஸ் ஆப் குரூப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

உ.பி. மாநிலம் முசாபர் நகரில்  உள்ள கண்ட்லா நகரைச் சேர்ந்தவர் பரம்சைனி. இவர் வாட்ஸ் ஆப் குருப் ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். இவரது குழுவில் உறுப்பினராக இருப்பவர் தீபக் நேற்று முன்தினம் குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றி ஆட்சேபகரமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அஸ்லாம் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், தகவல் உண்மை என்பதை உறுதி செய்தனர். அதன் பின், பரம்சைனி மற்றும் தீபக் மீது பிரிவு 153 (இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் உண்ண்டாக்குதல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

1 comment:

  1. சமுக வலைதளத்தில் மாற்று மதத்தவர்களை பற்றி தவறான பதிவுகளை வெளியிட்டு வந்த பா.ஜ. கட்சியின் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது