அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 30 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/01/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : சகோ. இப்னு மன்சூர்
முன்னிலை        : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை      : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
சிறப்புரை              : சகோ.  சாதிக்
அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை          : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )

தீர்மானங்கள்:1) இந்த வருடம் (2016) முதல் 20 நபர்களுக்கு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக மாதம் ரூ 600 வீதம் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) அதற்கான முதல் மூன்று மாத தொகையை ரூ 36,000 தலைமையகத்துக்கு அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது

 3) இந்த வருடத்திற்கான பென்ஷன் தொகையை வழங்கியதற்காக ரியாத் வாழ் பைத்துல்மால் உறுப்பினர்களுக்கு பைத்துல்மால் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு  அவர்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுகொள்ளப்பட்டது..


4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 12-ம் தேதி FEBRUARY 2016 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது