வீடுதிரும்பினார்!


இரண்டு தினங்களுக்குமுன் காணாமல் போன அதிரை மாணவன் அன்சர்கான் இன்று பட்டுக்கோட்டையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் மீண்டும் கிடைக்க அனைத்துவகையிலும் உதவிகள் செய்த நல்லுங்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகும் கூறினார்.

Share:

4 comments:

 1. "அன்சர் கான், என்ற சிறுவனை கடந்த 15.01.2015 முதல் காணவில்லை"

  என்னங்க இது, 15.01.2015 முதலாகவா காணோம்?

  ReplyDelete
 2. நான் சிறுவனாக இருந்த சமயம் நடுத்தெருவில் என் நண்பன் அப்துல் கபூரின் மைத்துனன் (மர்ஹூம்) ரிஃபாயி என்ற சக வயதுடையவனை அன்று ஊரே சல்லடை போட்டு தேடியது எங்கெங்கெல்லாம் தேடி அவன் கிடைக்கவில்லை. அவன் வீடு மட்டுமல்ல பல தெருக்களே அவனை காணாது சோகத்தில் ஆழ்ந்திருந்தது. பலரும் பலவிதமாக பேசிக்கொண்டிருக்கையில் இரண்டு நாட்களில் அவனுடைய உடல் அருகிலேயே உள்ள செக்கடிக்குள தென் கிழக்கு கரையோரம் ஒதுங்கியது. அன்று நடந்த‌ அந்த சோகத்தை இன்று நினைக்கையிலும் உள்ளம் ஆழாத்துயரடைகிறது. அல்லாஹ் அவனுடைய ஆஹிர வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பானாக.

  இதை இங்கு எதற்கு நினைவு படுத்துகிறேன் என்றால், தற்கால நவீன யுகத்தில் நாம் பிள்ளைகளை மிகுந்த கண்காணிப்புடன் வளர்க்க வேண்டியுள்ளது. பல கோணத்தில் காணாமல் போன அச்சிறுவனை சிந்தித்து துரிதமாக தேட வேண்டிய சூழ்நிலை எல்லோருக்கும் உண்டு. காரணம், அன்றைய காலத்தில் மத துவேசங்களும், மருத்துவ கொடூரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் களை போல் காட்சி தந்தன. ஆனால் அதுவே இன்று நன்கு வேருட்டு விழுதுகள் படந்த ஒரு பெரும் ஆல மர விருச்சம் போல் வளர்ந்துள்ளது.

  அல்லாஹ் தான் காணாமல் போன இந்த சிறுவனை உடனே அவன் பெற்றோர்களிடம் கொண்டு வந்து சேர்க்க‌
  போதுமானவன்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது