அதிரை சேர்மன் அவர்களிடம் ஒரு கோரிக்கை

அன்புள்ள சகோ.அஸ்லம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.நலம், நலமறிய ஆவல்.நமதூரின் பல்வேறு நலன் சார்ந்த விசயங்களில் நீங்கள் முக்கிய பங்காற்றி வருவது குறித்து அறிகிறோம். சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்.இருப்பினும் இன்னும் பல விசயங்களில் நமதூர் மக்களிடம் ஆதரவும் அதுசம்பந்தமான விழிப்புணர்வும் குறைவாக இருப்பதையும் காணமுடிகிறது.இதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டு நன்மையான சூழ்நிலைகள் அமையும் என விரும்புகிறோம்.நம்புகிறோம்.அடுத்து சமுதாய சேவை என்று வந்துவிட்டாலே ஆதரவு நிலை என்ற ஒருபக்கத்தோடு எதிர்ப்பு நிலை அதனையும் தாண்டி அதில் எதிர்பார்ப்பு நிலையும் இன்னொரு பக்கமாக வந்துவிடும்.இது இயல்பு.இவைகள் குறித்து நீஙகள் அவ்வப்போது அல்லாஹ்வை முன்னிறுத்தி தரக்கூடிய விளக்கங்கள் அருமையானவை.இருந்தாலும் இது போன்ற நிலைப்பாடுகளில் பொறுமை மிக அவசியம் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.நல்லது. 

இந்நிலையில் நான் உங்களுக்கு நினைவூட்ட வருகிற ஊரின் ஒரு முக்கியமான ஊரை விட்டு அவசியம் அகற்றப்பட வேண்டிய முஸீபத்தான விசயம் வட்டி!வங்கிகளைக்கொண்டு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் இன்று வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு என்ற சதி திட்டங்களுடன் சைக்கிள் ,பைக் மூலமாக பரவலாக்கப்பட்டு,மிக கேவலம் நம் சகோதர சகோதரிகள் பலர் இதற்கு ஆளாகி இறுதியில் வீடு நிலம் வயல் இப்படி பலதையும் விற்று தெருவுக்கு வரும் நிலை காணப்படுகிறது.இவை யாவும் மறைமுகமாக நடக்கும் விசயமல்ல.

நம்மனைவருக்கும் முன்பாக பகிரங்கமாக அன்றாடம் நடக்க்கூடிய அவலமாகும்.இது குறித்து நமக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் இருக்கிறோமா அல்லது இது எப்போதும் போன்ற ஒன்று என்று இருக்கிறோமா இதனால் நமக்கென்ன பிரச்சினை என்று இருந்து விடுவோமா?அப்படியிருந்தால் அது சரியானதா என்பது குறித்து நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய கவலைக்குறிய விசயமாகும்.மேலும் இதனை அப்படியே விட்டு விட்டால் மேலும் மேலும் மோசமான விளைவுகளை நமக்கும் நமதூர் மக்களுக்கும் ஏற்படக்கூடும்எனவே இது சம்பந்தமான விசயத்தில் தயவு செய்து அவசியம் நீங்கள் முக்கிய கவனம் எடுத்து வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு சைக்கிள்,பைக் மூலமாக முகாமிடும் இந்த ஷைத்தான்களுக்கும் ஷைத்தானிய செயலுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

அல்லாஹ் நாடினால் முயற்சித்தால் உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.அந்த அடிப்படையில் இந்த நல்தொரு கோரிக்கையை உங்கள் முன் அன்புடன் வைக்கிறேன். அத்துடன் இது சம்பந்தமாக வட்டியில்லா கடன் திட்டத்தை செயல்படுத்தி வரும் நமதூர் பைத்துல்மால் நிர்வாகத்தின் கவனத்திற்கும் இது குறித்து குவைத் கிளை சார்பாக வலியுறுத்தியுள்ளோம்.

எனவே நீங்கள் அவர்களுடன் ஆலோசனை செய்தோ அல்லது சமுதாய நலனில் அக்கரையுள்ள வர்களுடன் கலந்து ஆலோசனை செய்தோ இது சம்பந்தமான நல்லதொரு முடிவை எட்டுங்கள்.ஜஸாக்குமுல்லாஹு ஹைரன். அன்புடன் கமருஜமான்,பைத்துல்மால் குவைத் கிளை துணைத்தலைவர்.குவைத்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

2 comments:

  1. நமதூரில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போகிறேன் என்ற. சொல்லி தாந்தோன்றித்தனமாக யாரிடமும் ஆலோசிக்காமல் வட்டிக்கு எங்கேயாவது, எவனிடமாவது கடன் வாங்கி கடைசியில் எதிலாவது மாட்டிக்கொண்டு ஒரு நாடகமாடி மனைவி வீட்டு சீதன வீட்டை (தாய் வீட்டை அல்ல) அநியாய அக்கிரமத்தில் விற்று வெளியில் ஒண்ணும் தெரியாத அப்பாவி போல் நடித்துக்கொண்டு வெள்ளையும் சொள்ளையுமாய் அலையும் அயோக்கிய கூட்டங்கள் ஊரின் மையப்பகுதியிலேயே உண்டு என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. ஊரின் மையப்பகுதியிலேயே இந்த முஸீபத்துக்கள் நடந்தேறும் பொழுது பிற பகுதிகளை பற்றி என்னவென்று சொல்வது? தற்கால உடல் ஆரோக்கிய,சொளகரிய சூழ்நிலைகள் நிரந்தர அல்லாஹ்வை மறக்கடித்து விட வேண்டாம்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது