அதிரை அஹமத் அவர்களின் "நல்ல தமிழ் எழுதுவோம்" நூல் வெளியிட்டு விழா!


எழுத்தாளர் அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய "நல்ல தமிழ் எழுதுவோம்" நூல் வெளியீட்டு விழா இலக்கியச்சோலை சார்பில் இன்று மாலை புதிய விடியல் துணையாசிரியர் ரியாஸ் அவர்கள் தலைமையில் AL பள்ளிஅரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியினை வழக்கறிஞர் முகம்மது தம்பி அவர்கள் தொகுத்து வழங்கினார். இதனையடுத்து அதிரை அஹ்மத் அவர்கள் முதல் நூலை வெளியிட அதனை காதிர் முகைதீன் பள்ளியின் முன்னால் தலைமையாசிரியர் SKM.ஹாஜாமுகைதீன் அவர்கள் பெற்றுக்கொண்டார். 

இரண்டாம் பிரதியை புதிய விடியல் நூலாசிரியர் ரியாஸ் அகமது வெளியிட 
க மு மேல் நிலை பள்ளியின் தமிழ்த்துறை ஆசிரியர் முனைவர்  அஜீமுதீன் பெற்றுகொண்டார். நூலை பெற்றுக்கொண்ட அவர்  இந்த  நூலை பற்றிய அணிந்துரையை வழங்கினார். 

பின்னர் அதிரை அஹமது காக்காவின் ஏற்புரைக்கு பின் . அதிரை ஊடக நண்பர்களை மேடைக்கு அழைத்து நல்ல தமிழ் எழுதுவோம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.  

இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊடக பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக முஸ்லீம் மலர் ஹசனின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது