வாய் பேச இயலாத, காதுகேளாதோர் சமூக அறக்கட்டளையினரின் வேண்டுகோள் !!

தஞ்சை மாவட்ட மாற்றுதிரனாளிகள் பேச இயலாத, காதுகேளாதோர் சமூக அறக்கட்டளையினர் கடந்த 6 வருட காலமாக அதிரையில் கிளை அமைத்து பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை செய்து வருகினறனர் . 

இவர்களின் அலுவலகம் கடைதெரு அலியார் மளிகைக்கடை மாடியில் செயல்பட்டு வருகிறது இதில் சுமார் 45நபர்கள் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர் . 

இவர்களுக்கு  அரசால் வழங்கப்படும் தையல் இயந்திரம் , உள்ளிட்டநலத்திட்ட உதவிகளை அரசிடம் இருந்து முறையாக பெற்று தருகின்றனர் . இந்நிலையில் இதற்கான அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் வாடகை கொடுபதற்க்கு மிகவும் சிரமப்படுவதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ஜஹபர் சாதிக் கூறுகிறார் மேலும் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் மிகவும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளதாலும் இவர்களுக்கென சொந்த இடத்தில் அலுவலகம் அமைத்துக்கொள்ள வேண்டும் என சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக  தயாளா மனம் படைத்தவர்களிடம் உதவிகரம் நீட்டுகின்றனர் . எனவே இவர்களுக்கு தாரளமாக நிதிதவியளித்து உதவிட வேண்டுகிறோம் .
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது