திருச்சியில் நடந்த மாணவர் இந்தியா ஆலோசனைக்கூட்டம்மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் ஜவாஹிருல்லா அவர்கள்பங்கேற்பு !

தமுமுகவின் ஒரு அங்கமாகிய மாணவர்
இந்தியா அமைப்பின் சார்பில் ஆலோசனைக்
கூட்டம் திருச்சியில் நடந்தது.
கூட்டத்திற்கு தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ்
ரிபாயி தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக
கலந்துகொண்ட  மமக மாநில பொதுச்செயலாளர்
ப. அப்துல் சமது 'சங்பரிவார சூழ்ச்சிகளும்,
சதிகளும்' என்ற தலைப்பிலும், தமுமுக மாநில
தலைவர் ஜே.எஸ் ரிபாயி 'மாணவர்களும் மார்க்க
மாண்புகள்' என்ற தலைப்பிலும், தமுமுக
மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி '
ஊடகங்களில் மாணவர்கள்' என்ற தலைப்பிலும், மமக
மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.
ஹுசைன் கனி 'இணையப்பயன்பாட்டின் இன்றைய
நிலை' என்ற தலைப்பிலும், மமக மாநில
அமைப்பு செயலாளர் தஞ்சை ஐஎம் பாதுஷா
'கல்வியின் அவசியம்' என்ற தலைப்பிலும்,
தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் அபுல்
ஃபசல் வரலாறு பற்றிய விழிப்புணர்வு என்ற
தலைப்பிலும் மமக மாநில அமைப்பு செயலாளர்
மாயவரம் அமீன் சுல்தான் மாணவரணியின்
கூட்டமைப்பு என்ற தலைப்பிலும் உரை
நிகழ்த்தினார்கள்.
நிறைவாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில
தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற
உறுப்பினருமாகிய பேராசிரியர்
ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்புரை
வழங்கினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாணவர் இந்தியா
அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேக்
அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட
அதிராம்பட்டினம் பேரூர் மாணவர் அணி
செயலார் நூர் முஹம்மது கிராத் ஓதினார்.
திருச்சி வடக்கு - மாவட்ட மாணவர் அணி
செயலளார் சாதிக் அலி வரவேற்புரை
ஆற்றினார் கூட்ட முடிவில் துறையூர் நகர
மாணவர் அணி செயலாளர் ஜே. முஹம்மது
ரியாஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில்
மாணவர் இந்தியா அமைப்பின் பல்வேறு
பகுதியிலிருந்து வருகை தந்த மாவட்ட
பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில்
அதிரையிலிருந்து மாணவர் அணியின்
பொறுப்பாளர்கள் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, நூர்
முஹம்மது, ராசிக் அஹமது ஆகியோரும்,
மதுக்கூரிலிருந்து மதுக்கூர் பஃவாஸ்
ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு
கருத்துரை வழங்கினார்கள்.

Share:

2 comments:

 1. ஹல்லோ,
  பதிவுக்கு நன்றி.

  மேடையில் ஒளி உண்டு, ஒலியை கேட்க முடியவில்லை.

  ஆனால்.

  இறைவன்

  ஒளியையும்

  ஒலியையும்

  ஒரு சேர
  படைத்துள்ளான்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது