முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றம் !!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் சென்னை தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸிலில் இன்று (20-01-2016) புதன் காலை நடை பெற்றது. இதில் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு.

1. அதிமுக தலைமையிலான மாநில அரசு ஜனநாயக விரோத, மக்கள் விரோத அரசாக தொடர்வதை நாடறியும். ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் தமிழக சட்டப் பேரவை வெறும் 190 நாட்கள் மட்டுமே கூட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையே அதற்கு சான்றாகும். குறைந்த நாட்களே கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டங்களும் கூட ஆளுங்கட்சி தலைவரின் புகழ்பாட மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மக்கள் பிரச்சினைகளைப் பற்றிய எந்த விதமான திட்டங் களோ, விவாதங்களோ இல்லாத துடன் அது குறித்து எதிர் கட்சியினர் பேச முற்படும் போதெல்லாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் உச்சமாக எதிர் கட்சி தலைவரே அவை நீக்கம் செய்யப்பட்ட ஜனநாயகப் படுகொலைகள் அரங்கேறின. 

இந்த ஜனநாயக விரோத அதிமுக ஆட்சியை அகற்றி ஒரு நல்லாட்சியை அமைத்திட எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை யாகும். எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்ட ணியில் அணி திரளுமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக் கும் இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.

2. சென்னை உயர்நீதி மன்றத் தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 75ஆக உயர்த்தப்பட்டிருப்பதை மகிழ்வுடன் வரவேற்கும் அதே வேளையில், இன்று அதில் ஒருவர் கூட முஸ்லிம் சமூகம் சார்ந்தவராக இல்லை என்ற கசப்பான உண் மையையும் உணர்ந் திருக்கிறோம். 40 நீதிபதிகள் இருந்த சமயத்திலே கூட 4 நீதிபதிகள் முஸ்லிம் சமூகம் சார்ந்தவராக இருந்த நிலையில் இன்று நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் குறைந்த பட்சம் 5 நீதிபதிகள் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவராக நியமனம் செய் யப்பட வேண்டுமென இச் செயற்குழு மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் கேட்டுக் கொள்கிறது.

3. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நாளி லிருந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் கூர்மைப் படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் அடையாளங்களையும், தனித்தன் மைகளையும் அழிப்பதில் பெரு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரலாற்று சிறப்பு மிக்க ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்’ பெயரிலி ருந்து ‘முஸ்லிம்’ என்ற வார்த் தையை நீக்கவும், அதற்கு வழங்கப் பட்டுள்ள சிறுபான்மை நிறுவ னம் என்ற அந்தஸ்தை நீக்கவு மான நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இந்த மதவாத நடவடிக்கைக்கு எதிராக ஒரு நாடு தழுவிய போராட்டத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது. 

அதன் தொடர்பாக டெல்லி யில் வருகிற 2016 ஜனவரி 28-ந் தேதி கூட இருக்கிற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய ஆலோசனைக் கூட்டம் வெற்றிய டைய இச்செயற்குழு வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறது.

4. எதிர்வரும் 30.01.2016 அன்று கோவையில் நடைபெற இருக்கும் முஸ்லிம் லீகின் தொழிலாளரணியான சுதந்திர தொழிலாளர் யூனியன் தேசிய மாநாட்டை சிறப்பாக நடத்துவதென்றும், இதன் பத்தாயிரம் பிரதிநிதிகளை பங்கேற்க ஏற்பாடு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 69வது நிறுவன நாளான 2016 மார்ச் 10 தேதி மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டை விழுப்புரத்தில் விமர்சயைhக நடத்துவதென்றும், இம்மாநாட்டின் தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது எம்.பி., கேரள அமைச்சர்கள் அழைப்பதென்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது. 

இம்மாநாட்டில் தமிழகத்தின் பள்ளிவாசல்களை மையமாக கொண்ட பதினோராயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், சர்வ சமய சான்றோரை அழைப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது