அதிரை பேருந்துநிலையத்தில் வாகனம் நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும்! மாவட்ட ஆட்சியர் அதிரடி!சுமார் 38 இலட்சம் செலவில் அதிராம்பட்டினம் பேருந்துநிலையம் புனரமைக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து பலநாட்கள் ஆகியும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. 

இதற்கு ஏற்கனவே அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட் இடத்தை ஆக்கிரமித்து அவர்களின் வாகனங்களை நிறுத்திவைத்தது முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அரசு அதிகாரிகள் குழு அதிரடியாக பேருந்துநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் வாகனங்களை அகற்றினர். மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் சார்பில் எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பேருந்துகள் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது