அமீரகத்தில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்
அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்..,


இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று 22-01-2016 வெள்ளிக்கிழமை காலை  9:00 மணிமுதல்  11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது
முகாமில்  ஆர்வத்தோடு தமுமுக மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் மாற்றுமத நண்பர்கள்  என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் நேரம் போதாத காரணத்தினாலும் மருத்துவ மணையின் இரத்த வங்கி நிர்வாகம் குறிப்பட்ட   நேரத்தில் 50
நபர்களுக்கு மாத்திரம் இரத்ததானம் செய்ய அனுமதி என்பதாலும் பல சகோதரர்கள் இரத்தம் கொடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர் அல்லாஹ் அவர்களின் சிறந்த நோக்கத்திற்கு நன்மையை வழங்குவானாக
 அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் 61 சகோதரர்கள் இரத்தம் வழங்கினர்
சிறப்பாக நடைப்பெற்ற  முகாமில் அமீரக தமுமுக செயலாளர் அப்துல்ஹாதி  M.Com துணைச்செயலாளர் உஷைன் பாஷா MBA MPhil மமக செயலாளர் A..S.இப்ராஹீம் MBA  தொழிலதிபர் அபுதாஹீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
மண்டல தமுமுக செயலாளர் அப்துல்ஹமீது  மண்டல பொருளாளர் ஷேக் தாவூத் துணைச்செயலாளர்கள் முஸ்தாக்   பொறையார் பர்ஜிஷ்
  உள்ளிட்ட  மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்னர் 


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது