அதிரையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவர் தாக்கப்பட்டார்.


அதிரை மேலதெருவை சேர்ந்தவர் சலீம் இவர் பழைய செல்போன்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்து வந்தார்.  இவர் அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி விற்று விட்டதாகவும் பணம் கொடுக்களில் காலதாமதம் ஏற்பட்டதாகவும்  கூறப்படுகிறது . 

இந்நிலையில் இவரிடம் இன்று காலை பணத்தை வசூல் செய்வதற்காக  சலீமின் வீட்டிற்கு சதாம், பஃஹது, இர்ஃபான். ஆகிய மூவரும் சென்றுள்ளனர். 

அப்பொழுது பணத்தை எடுப்பதற்காக ATM கார்டை சலீம் கொடுத்துள்ளார் ஆனால் ATM ரகசிய குறியீட்டு எண்ணை தவறாக கூறியதாக கூறப்படுகிறது . 

இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் சலீமை EBஅலுவலகம் அருகே கூட்டி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சலீம் அப்பகுதியினரால் மீட்கபட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . 

இவரை பரிசோதித்த மருத்துவர் பட்டுக்கோட்டை அரசினர் மருத்துவமனைக்கு  பரிந்துரை செய்ததன் பேரில், தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுகோட்டை கொண்டு சென்று    அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .. 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அதிரை காவல்துறையினர் தலைமறைவான மூன்று நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது