வாசமில்லா வாலிபம் இது! அது, வசந்தத்தை (பதினெட்டை) தேடுது!! (இது விதியா அல்லது தியாகமா)?2016-ஜனவரி-17, அன்று ஞாயிற்றுக் கிழமை., இந்த அதிகாலையில் ஒலித்த மொபைல் போன் அழைப்பு, திடுக்கிட்டு விழித்தான் சலீம், மனதில் ஒரே நெருடல், படபடப்பு.

பல வகையான பார்ட் டைம் வேலைகள், ஓய்வு இல்லாத வேலைகள், விடுமுறை இல்லாத வேலைகள் அனைத்தும் முடித்து விட்டு, மீண்டும் காலை ஆறுமணிக்கு வேலைக்கு போக வேண்டுமே என்ற நினைவோடு மூன்றரை மணிக்கு படுத்தவனை............, நான்கேகால் மணிக்கே மொபைல் போன் அவனை எழுப்பி, குழப்பி விட்டது.............!....?

ற்று எரிச்சலுடன் போர்வையை இழுத்து எறிந்து விட்டு மொபைல் போனை நோக்கி ஓடினான் சலீம்.

ந்த அதிகாலை வேளையில் யாராக இருக்கும் என்று கண்களை நன்றாக கசக்கி விட்டு மொபைல் போனை நோக்கினான். அது வேறு யாரும் இல்லை, அவனுடைய வாப்பா.
(இந்த இடத்திலிருந்து அவன் தன் கடந்த கால நினைவலைகளில்  மனதை பின்னோக்கி செலுத்துகிறான்.)


(இந்த பாராவிலிருந்து அவனுடைய மனது பினோக்கி போகிறது)
முன்பு என்றால் ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பில் காசு கரைந்தாலும், வாப்பாவுடன் பேசுவதில் அவனிடம் உற்சாகமும் சந்தோசமும் இருக்கும். தற்போது போட்டி போட்டுக்கொண்டு பல டெலிபோன் கார்டுகள் வந்து தொலைபேசி கட்டணத்தைக் குறைத்து இருந்தாலும் அவனது உற்சாகமும் சந்தோசமும் முன்பைப் போல் இல்லாது, குறைந்து விட்டது.

ரில் உள்ளவர்கள் படும் பாடு, கஷ்டந்தான், அவன் இல்லை என்று சொல்லா விட்டாலும், மாடு போல் உழைத்து..... அப்படிச் சொல்வதையும் விட அதிகமாகத் தன்னை வருத்தி, உழைத்து உழைத்து ஊருக்குத்தான் அனுப்பினான், அனுப்பிக் கொண்டிருக்கின்றான்.

இருபது வருடங்களுக்கு முன்பு.(1995)
வனுடைய குடும்பத்தில் கடுமையான கஷ்டம், உணவு உட்கொள்ள முடியாதவாறு தொண்டையை வந்து அடைக்கும் அளவுக்கு குடும்ப பிரச்சனைகள், சிறு சிறு வேலைகளினால் கிடைக்கும் வருமானம் கிடைக்கும் பணம் வாப்பாவுடையது, வயதை எட்டியும் திருமணம் ஆகாத சகோதரிமார்கள், வயதை எட்டக்கூடிய வயதிலும் சகோதரிகள், உடன் பிறந்த உதவாத காக்காமார்கள். காக்காமார்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, ஆண் மகன்களில் சலீம்தான் இளையவன்.

லீம் சற்றே சிந்திக்க ஆரம்பித்தான், மற்றவர்களைப் போல் நாமும் பல கடல்களை கடந்து நெடுந்தூர அயல்தேசம் (அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, லண்டன்) போன்ற தேசங்களுக்கு சென்றால் என்ன? இன்ஷா அல்லாஹ், நம்ம குடும்ப கஷ்டம், நஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடுமே. அவனின் மனம் கனத்தது, காரணம் மனம் உண்டு ஆனால் கையில் ஒரு பைசாவுக்குக்கூட வழி கிடையாது, சொந்தத்தில் உதவவும் ஆட்கள் கிடையாது, குடும்பத்தில் நெருக்கம், மனதில் இறுக்கம், செய்வது அறியாது திடுக்கம், எதுவும் செய்வதறியாது குழம்பி இருந்தான் அவன்?.

தாயிடம் ஓடினான், தன் விருப்பமான, விரும்பிய விபரத்தை சொன்னான், கெஞ்சினான், மன்றாடினான், அந்த தாயினால் அவனுக்காக சிந்த முடிந்தது சில கண்ணீர்துளிகள் மட்டும்தான், அந்த கண்ணீர் துளிகள் சூடாக இருந்த அவனை ஆசுவாசப்படுத்தியது. அவன் தன் தாயை ஆறுதல் படுத்திவிட்டு வெளியில் சென்றான்.

பெற்றோர்கள் சொல்லைத் தட்டாதவன், படித்தவன், நேர்மையானவன், அன்பானவன், பண்பானவன், ஊரில் அவனுக்கு நல்ல பெயர் உண்டு. ஒரு வக்து தொழுகையை விடாதவன், ஓடினான், ஓடிக்கொண்டே இருந்தான், பள்ளியை அடைந்தான், இரண்டு ரக்அத் தொழுதான், அல்லாஹ்விடம் அழுது அழுது உதவி கேட்டான், நெடுநேரம் கேட்டான், அசந்து விட்டான், அப்படியே அயர்ந்து விட்டான்.

ந்த நேரத்தில் தினமும் குர்ஆணை ஓதுவதற்கு வரக்கூடிய இரண்டு பெரியவர்கள் பள்ளிக்குள் வந்தார்கள், பள்ளியில் அயர்ந்து கிடக்கும் சலீமை கண்டார்கள், சலீம்! சலீம்!! என்று கூப்பிட்டார்கள், அவன் மெதுவாக தன் கண்களை திறந்து பார்த்தான், இரண்டு பெரியவர்கள் அவன் முன் நிற்க, சட்டென்று எழுத்தான். அவர்கள் அவனை விசாரித்தார்கள், விஷயம் அறிந்தார்கள், யோசித்தார்கள், பிறகு! நீ கவலைப்படாதே, மற்ற வேலைகளைப் போய் பார், இன்ஷா அல்லாஹ் எல்லாம் சரியாகி விடும் என்று சொன்னார்கள்.

வன், தன் பெற்றோரிடம் ஓடி வந்து நடந்ததை சொன்னான், அவர்கள் இருகரம் ஏந்தி யா அல்லாஹ் நீ எங்களுக்கு போதுமானவன் என்று சொன்னார்கள்.

லீமுக்கு நாட்கள் ஓடவில்லை, அழகிய நினைவுகள், இனிய கனவுகளோடு லண்டன் தேசத்தை மனதில் நிலை நிருத்தியவனாக நாட்களை கடத்திக் கொண்டு இருந்தான், இன்ஷா அல்லாஹ் நான் லண்டன் தேசம் போய்விட்டால் குடும்பத்தில் நிலவும் எல்லா கஷ்டங்களையும் தொலைத்து விடுவேன் என்று மனதுக்குள் குமுறியவனாய் இருந்தான்.

வன் நினைத்ததுபோல் எல்லாம் வல்ல இறைவன், அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைத்தான். லண்டன் தேசத்தில் இறங்கி விட்டான். (அல்ஹம்து லில்லாஹ்)

(1995) அவன் லண்டன் வந்த போது, அவனுக்கு இருபது வயது நிரம்பிய அழகிய வாலிபன். வாழ்க்கையின் கனவுகள், வசந்தத்தின் தேடல்கள் எல்லாமே அவனுக்குள்ளும் நிறைந்து இருந்தது.

டுங்குளிர், அவனை வாட்டியது, சற்று தூரத்தில் ஒரு தமிழ் பலபொருள் கடையை கண்டான், போனான், ஜாக்கெட்டை வாங்கினான், அவர்களிடம் ஏதோ கேட்டான், அவர்கள் சொன்னபடி அந்த இடத்தை விட்டு அவன் கடந்து சென்றான்.

றுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் ஒரு பள்ளியைக் கண்டான், எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவித்தான், வெளியில் வந்து தனக்கு உதவிய ஊரில் உள்ள பெரியவர்களுக்கும்,  தாய் தந்தைக்கும் தொலைபேசியில், தான் நல்லபடியாக வந்து லண்டன் தேசத்தில் இறங்கினத்தை தொலைபேசி மூலம் எத்திவைத்தான், அவனுக்கு அந்த பெட்ரோல் பங்கில் இலங்கையைச் சேர்ந்த அன்சாரி, சுலைமான், இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள்.

வர்களின் உதவியால் சலீமுக்கு தங்கும் இடமும் உன்ன உணவும் இலவசமாக அமைந்து விட்டது.

ங்கு நிலவும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது உற்சாகத்தோடு உழைத்து முதல் மாதச் சம்பளத்தை வாப்பாவுக்கு அனுப்பிவைத்தான்.

மேலும் கடுமையாக உழைத்தான், இரவு பகல் என்று பாராமல் உழைத்தான், இப்படியே பல மணி நேரங்கள், பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள், பல வருடங்கள், பல கால நிலை பருவ மாற்றங்கள், உருண்டோடின பத்து வருடங்கள், ஆனால் அவனுக்கு தெரியாது பத்து வருடங்கள் கழிந்தது.(1995 to 2005).

னால், ஊரில் அவனுடைய குடும்பத்தார்கள் அனைவரும் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க, லண்டன் தேசத்தில் சலீமுடைய வாலிப பருவ மட்டும் சுருங்கியபடியே போய் கொண்டிருந்தது.

ரம்பத்தில் கருத்துப் போன கன்னங்களையும், வெடித்துப் போன விரல்களையும் பார்த்து மனம் சிறிது வெறுத்துப் போனாலும், ஊருக்கு அனுப்ப பணம் கிடைக்கும் சந்தோஷத்தில் அவன் எதையுமே வெறுக்காமல் தொடர்ந்து வேலைகளை செய்ய மறுக்கவில்லை.

ன்னடா அன்பு மகனே.... என்றபடி பாசம் பொங்க ஊரிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் நியாயமாக பாசத்தை சுமந்து வந்தாலும்! மனையின் விலை, அதற்க்கு உண்டான கட்டுமான கூலிகள், மேலும் இதர செலவுகள். நீ அனுப்புறது பத்தாதுப்பா, மேற்கொண்டு சேர்த்து அனுப்புப்பா.... என்ற தந்தையின் குரல்.

ம்பி, பக்கத்து வீடு எல்லாம் இரண்டு மாடி வீடு கட்டிடங்களாக இருக்கும்போது, நம்ம வீடும் அதைவிட மூன்று மாடி வீடு கட்டிடங்களாக இருக்கணும், திரீ பேஸ் கரண்ட் இருக்கணும், ஏசி இருக்கணும், பாத் ரூமில் ஹீட்டர் இருக்கணும், ஜெனரேட்டர் இருக்கணும், கார் இன்னும் பல வசதிகளோடு இருக்கணும், இது சகோதரிமார்களின் கோரிக்கை.

ரில் சகோதரிமார்கள் வளர வளர, சகோதரிமார்களின் பிள்ளைகள் வளர வளர, காக்காமார்களின் பிள்ளைகள் வளர வளர, இன்னும் பிற சொந்தக் காரர்களின் பிள்ளைகள் வளர வளர. இன்னும் அவர்கள் அனைவரின் பேரக் குழந்தைகள் வளர வளர.

லீமுடைய லண்டன் சம்பாதிப்பில் குடும்பமே களைகட்டி இருந்தது, அவனுடைய நண்பர்கள் வீட்டிலும் சலீமுடைய சம்பாத்தியம் களைகட்ட தொடங்கியது. ஆனால் அவனுடைய வாழ்க்கையை பற்றி யாருமே சிந்திக்கவில்லை.

ப்படியாக தொடர்ந்த ஊர் தொலைபேசி அழைப்புகள் சலீமை பணத்துக்காக துரத்தின, பஸ்சிலும், ரெயிலிலும் ஓடி ஓடி உழைத்து களைத்தவன், இன்னும் களைத்தான், உழைத்து, உழைத்து,, களைத்துக் கொண்டிருந்தான்.

பாசத்தோடு ஊருக்கு போய்க் கொண்டிருந்த அவனுடைய அயராத உழைப்பின் மூலம் பெறப்பட்ட சம்பளப் பணங்கள், இப்போது பாரத்தோடு போக ஆரம்பித்தன.

2015
ழைத்து உழைத்து அனுப்பியவன், நாற்பது வயதை நெருங்கிய பின்னும் “உனக்கு ஒரு கல்யாணம் செய்து பார்க்க எங்களுக்கு ஆசை என்று “உம்மாவோ, வாப்பாவோ, உடன் பிறப்புக்களோ, சொந்த பந்தங்களோ, நண்பர்களோ,  யாரும் கேட்காதது சலீமுக்கு கஷ்டமாக இருந்தது.

வாழ்க்கையின் ஆசைகளும், வசந்தத்தின் தேடல்களும் ஏக்கங்களாய் மாறின. அவனுடைய தலை முடிகளெல்லாம் தன் வேஷத்தை களைய ஆரம்பித்தன. சரீரமெல்லாம் உருமாறத் தொடங்கின.

டிக்கடி கண்ணாடியைப் பார்த்து ஆதங்கப்படும் சலீம், தன்னைப்போல் பல இளைஞர்களின் வரிசையில் 40-வயதை தொட்டு நிற்கும் பிரம்மச்சாரியாக அவனும் நின்றான். மனம் சலீமுக்கு சலித்து விட்டது, ஆனாலும் ஊருக்கு தவறாமல் பணத்தை அனுப்பி வந்தான்.
(இந்த பாராவோடு அவனின் மனது பின்னோக்கிய நினைவு நிறைவு பெறுகிறது.)(இந்தப் பாராவிலிருந்து சலீம் தன் சுய நினைவுக்கு திரும்பினான்)
(2016)
டிப்போனவன், தொலைபேசியை எடுத்தான். அது வாப்பாவின் அழைப்பு. ஒரு நிமிட அழைப்பில் திருப்பி கூப்பிடு என்று சொல்லிவிட்டு வாப்பா கட் பண்ணி விட்டார்.

லீம் திருப்பி தொலைபேசியில் கூப்பிட்டான். அவனின் வாப்பா ஊர் நிலைமை படு மோசம் சலீமு, மேலும் இரண்டு வீடுகள் கட்டனும், அதற்கு மனை வாங்கணும், உன் சகோதரிகளின் பிள்ளைகளின் எதிர்காலம், மற்றும் உன் காக்காமார்களின் பிள்ளைகளின் எதிர்காலம், படிப்பு செலவுகள், குடும்ப செலவுகள், இன்னும் நிறைய இருக்குதுப்பா.

லீமு, உன் சகோதரி மாப்பிள்ளை ரம்சான்கானுக்கு சுகர் பிரச்சனையால் குவைத்திலிருந்து வந்து விட்டார், அவரின் மருத்துவ சிலவு. அப்புறம் உன் காக்கா மகன் பைக்கில் அடிப்பட்டு எழும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கான்.

லீமு, நீ அனுப்புகின்ற அவ்வளவு பணமும் வீட்டுத் தேவைகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும், பள்ளிக்கூட செலவுகளுக்கும் தான் சரியாக இருக்கின்றது. ஒரு பைசாகூட சேமிக்க முடியல்லே.

லீமு, இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2016 மே மாதம், 9-ம் தேதி திங்கள் கிழமை, ஷாஃபான் பிறை 1-ல், இரண்டாவது காக்கா மகளுக்கு,  மூன்றாவது தெருவில் இருக்கும் இபுராஹீம் காதர் அவர்களின் மகனுக்கு கல்யாணம் முடிக்க எல்லாம் முடிவாகி விட்டது.

வர் மகன் அமெரிக்காவில் சிட்டிசனாம், அவர் பாகெட்டுலே எப்போதும் பச்சை கார்டு இருக்குமாம், அமெரிக்காவில் பெரிய சூப்பர் மார்கெட் கடை வைத்துள்ளாராம். அதாவது தாய் தந்தையை தவிர பாக்கி எல்லாம் அங்கு கிடைக்குமாம், அப்பேற்பட்ட மாப்பிள்ளையாம், சொத்து சுகம் எல்லாம் ஏகபோக உண்டாம். ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரம் வாக்கில் ஊருக்கு வருகின்றாராம், மூன்று மாதம் ஊரில் தங்குவாராம்.

ன்னும் ஒரு விஷயத்தையும் உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும், அதாவது தற்போது 2015-2016- டிசம்பர் ஜனவரியில் நமதூரில் ஏகப்பட்ட கல்யாண நடந்து முடிந்து இருக்கு சலீமு, உன் காக்காமார்கள் ஒரு வீடு பாக்கி இல்லாமல் எல்லா வீட்டு விருந்து தேவைகளுக்கும் போய்விட்டு வந்திருக்கார்கள். அதனாலே அவர்களும் பெருசா விருந்து கொடுத்து கல்யாணத்தை வெகு சிறப்பாக முடிக்கணும் என்று ஆசைப்படுகின்றார்கள்.

து மட்டும் இல்லே சலீமு, எல்லா வீட்டிலேர்ந்தும் நம்ம வீட்டுக்கு பைசோறு, சஹான் சோறு, காலை இரவு பசியாற என்று  வந்திருக்கு, நம் வீட்டு பொம்பளைங்களும் நல்லபடியாக போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காங்க, ஊருக்கும் நல்லபடியாக விருந்து கொடுக்கணும் என்று ஆசைபடுத்துக. மேலும் நம்ம வீட்டுக்கு வரப்போகும் மாப்பிள்ளை வீட்டுக்கும் நிரப்பமா ஒரு குறையும் இல்லாமே, பசியாற கொடுக்கணும், தோழன் சாப்பாடு கொடுக்கணும், அப்புறம் புலால் விடுவதற்கு பெரிய கொடுவா மீனுதான் வாங்கி புலால் உடனும் என்று உன்னுடைய மூன்றாவது ராத்தா சொல்லுது, உன்னுடைய கடைசி தங்கச்சி என்ன சொல்லுது தெரியுமா?  அதாவது நார்சாவை வித்தியாசமான முறையில் கொடுக்கணும் என்று ஆசைப்படுது, நம்ம பத்து வூடு சேர்ந்தாற்போல் பந்தல் போடணுமாம். அதனாலே, நிறைய பணம் தேவைப்படுது.        

தை கவனத்தில் வைத்துகொண்டு இன்னும் அதிகமாக பணம் அனுப்பு, அக்கம் பக்கம் கடன் வாங்கி அனுப்பு, அடுத்தடுத்த மாசம் நீ சம்பாத்தித்து கொடுத்து விடலாம், விலை வாசி எல்லாம், வானத்தை தொடும் அளவுக்கு போய் விட்டதுப்பா, கரண்ட் பில் அதிகமாக வருது, பார்த்து சீக்கிரம் அனுப்பு. இடைவிடாமல் பார்டைம் பாரு. என்ன நான் சொன்னது புரியுதா? ஒரு கிலோ செம்மறி ஆட்டுக்கறி ரூபாய் 480.00-க்கு விற்குதுன்னா பாரேன்.

ரி வாப்பா, புரியுது வாப்பா, நான் சீக்கிரமே பணம் அனுப்புகிறேன் வாப்பா. எல்லாத் தேவைகளுக்கும் சேர்த்து அனுப்புகிறேன் வாப்பா.

லீமு, நீ எப்படி இருக்கின்றாய், எப்போ ஊருக்கு வரப்போறாய், உனக்கு கல்யான ஆசை இல்லையா?, என்று வாப்பா ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே, என்று சலீம் நினைத்து கொண்டிருக்கும்போது, வாப்பாவின் தொலைபேசி வைக்கப்பட்டுவிட்டது.

லீமின் மனம் வேதனைப்பட்டது. மேலும் மேலும் இன்னும் எவ்வளவு காலம் நாம் இங்கேயே இருப்பது.

ணம் பணம், கணக்கு பார்க்காமல் ஒரு பைசா பாக்கி இல்லாமல் எல்லா பணத்தையும் ஊரில் இருக்கும் வாப்பாவுக்குத்தானே அனுப்பினேன்.

மீண்டும் பணம் தேவை, தேவை என்று போன் கால் வந்து கொண்டே இருக்குதே, அவர்கள் கேட்கும் பணத்தை இன்னும் கூடுதலாக சம்பாதிக்க நான் என்ன செய்வேன்? எப்படி சமாளிப்பேன்? யாரிடம் போய் கடன் கேட்பேன், என்ற யோசைனையில் அவன் மூளை குழம்பியது.

ன்னுடைய இறைவனே, இங்கு நான் படும் பாடு, என்னுடைய நிலைமையை அவர்களுக்கு புரியவைப்பது யார்? யா அல்லாஹ்.

றுதல் சொல்ல யாரும் இல்லாத சூழ்நிலை, மனம் சோர்ந்தவனாக கடிகாரத்தை பார்கிறான், அடுத்த வேலைக்கு போக இன்னும் ஒரு மணிநேரம் மட்டும்தான் பாக்கி இருக்கிறது. அதற்கு இடையில் சற்று தூங்கலாம் என்று நினைக்கின்றான், தன் இரண்டு கண்களையும் ஒரு கருப்பு நிற ரிப்பனினால் கட்டிக்கொண்டு தூங்குவதற்காக போனான் சலீம்.

ஆனால், தூக்கம் அவனை விட்டு தூர........ விலகி இருந்தது.
துக்கம் அவனை இறுக்கி அனைத்துக் கொண்டிருந்தது.
இந்த சலீமைப் போல் எத்தனைபேர் நம் மத்தியில்?
இது விதியா? அல்லது தியாகமா?K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

2 comments:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது