பழிவாங்க துடிக்கும் கழிவுநீர் பள்ளம் ! பாராமுகம் காட்டும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் !

தக்வாபள்ளி அருகே காதிர்முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இதன் சுற்றுசுவர் அருகே உள்ள சிறிய பாலத்தின் சுவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய லாரி விபத்தினால் இடிந்து விழுந்துள்ளது அதிலிருந்தே அந்த கால்வாய் சுவர் கட்டப்படவில்லை .

இந்நிலையில் கடந்த மாதம் மிலாரிகாட்டை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார் அப்பொழுது எதிரே வந்த மினி பேருந்துக்கு வழிவிடுவதற்காக சைக்கிளை ஓரம் கட்டியுள்ளார் அப்பொழுது நிலைதடுமாறிய அம்மாணவி (படத்தில் காட்டப்பட்ட) அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் விழுந்து கீழாடை கிழிந்ததால் மனமுடைந்து வீட்டிற்க்கே சென்றுள்ளார். 

இதனைக்கண்ட அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று வீட்டில் விட்ட சம்பவமும் இப்பகுதியில் நடந்தேறியுள்ளது . 

இதுகுறித்து பலமுறை அப்பகுதிவசிகளால் புகார் அளித்ததாகவும் இதனை பேரூர் நிர்வாகம் தொடர் புறக்கணிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் இப்பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வரக்கூடிய வழியாக உள்ளதால் போர்க்கால அடிப்படையில் பேரூர் நிர்வாகம் தலையிட்டு கால்வாயில் பக்க சுவர் எழுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதிவாசிகளின் கோரிக்கையாக உள்ளது .        

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது