சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்லதுபத்து சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணைவிட்டு வதக்கிச் சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். உடல் பலப்படும், நரம்புகள் வலுப்பெறும், உடற்ச்சூடு தணியும், இதயம் வலுப்பெறும், வயிற்றுப் புண் ஆறும். வாரம் இருமுறை இப்படிச் சாப்பிட்டால் நல்லது. சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வரும்.
சின்ன வெங்காயத்தை தினம் சாம்பார் அல்லது, சட்னியில் சேர்த்து சாப்பிட்டால் கல்லீரல், இதயம் நலமாய் இருக்கும்.

இரவு மீதமுள்ள சோற்றில் நீர்ஊற்றி அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, விடியற்காலை சோறு, தண்ணீர், வெங்காயம் மூன்றையும் அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும். உடலுறவுத் திறனும் கூடும்.

தினம் பப்பாளி சாப்பிடுவது, முருங்கைக் காய், முருங்கைக் கீரை வாரம் மூன்றமுறை சாப்பிடுவது, அமுக்குரா கிழங்கு பொடியை தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிடுவது ஆணுக்குச் சக்தியளிக்கும், மலச்சிக்கல் வராது. கண் நலமாய் இருக்கும்.
பாக்கட் உணவு, துரித உணவு, பிராய்லர் கோழி இவற்றை அறவே தவிர்க்கவும். மீன், ஆட்டுக்கறி அளவோடு சாப்பிடுவது நல்லது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

4 comments:

 1. அதிரை எக்ஸ்பிரஸ் நெறியாளருக்கு தலைப்பை மாற்றுங்கள் இது பலர் குடும்பத்தோடு படிக்கும் பொழுது சங்கடத்தை ஏர்படுத்துகிறது

  ReplyDelete
 2. ஆரோக்யமான உணவுக்கு ஆரோக்யமான தலைப்பு வாழ்த்துக்கள் ஜமால் அண்ணன் அவர்களுக்கு

  ReplyDelete
 3. Jamal Annan avarkalukku
  anraal, evar. Annanukku solvathupol.
  jamal annanukku anral than. Evaraisarum

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது