அதிரை மக்களை புறக்கணிக்கிறதா அரசு??? வீடியோ

அதிரையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக இரவு நேர மருத்துவர்கள் நியமிக்க்படாமல் போதிய மருத்துவ வசதி இல்லாமல் இருந்து வந்த நிலையில் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் தலைமையில் மக்கள் ஒன்று இணைந்து சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் போராட்டதில் ஈடுபட்ட எதிரொலியாக இரவு நேர மருத்துவர் அரசால் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல மருத்துவர்கள் சரியாக மருத்துவமனைக்கு வராமல் மக்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவி வரும் நிலையில் நேற்று இரவு அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் மற்றும் சமூக ஆர்வலர்கள்  ஒன்றுகூடி ஆய்வு செய்து மருத்துவமனையின் தற்போதைய நிலையையும் மேற்படி நடவடிக்கை  எடுக்க முயற்சித்து   வருகின்றனர்.இது குறித்து முகநூல் வாயிலாக வீடியோ காணொளி ஒன்றினை பதிந்து உள்ளார் 

வீடியோ அதிரை பிறை 


Share:

1 comment:

 1. இது ஊர் மக்களின் அரசியலுக்கு அப்பாற்பட்ட அவசியமான இன்றைய தேவை.

  காரணம், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நம்மூர் உறுப்பினர்கள் யாருக்குமோ அல்லது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் நம்மூர் உறுப்பினர்களுக்கோ மட்டும் அவசர மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள‌ ஹெலிகாப்டர் வசதி ஏதும் அவர்கள் சார்ந்த அரசுகள் அவர்களுக்கு தனியே செய்து கொடுக்கவில்லை. ஆகையால் எப்படி வரக்கூடிய சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அது வெற்றி பெற்றாலும் அல்லது பெறாமல் போனாலும் அதற்கு ஆதரவான கருத்தையாவது சொல்லி விடுவோம் என்று எல்லா கட்சிகளும் "ஜல்லிக்கட்டு"க்கு தத்தமது கருத்துக்களால்
  மல்லுக்கட்டி நிற்பது போல் நம்மூர் அரசு மருத்துவமனையில் இரவு நேர நிரந்த மருத்துவர், செவிலியர் பணிகளுக்கு உரியவர்களை நியமிப்பதில் எல்லாக்கட்சிகளுக்கும் ஒத்த கருத்துடன் கடைசி வரை போராட வேண்டும்.

  உதாரணத்திற்கு, என்ன தான் நம்மிடம் விலையுயர்ந்த வாகன வசதிகள் இருந்தாலும் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் எந்நேரமும் நம் பாக்கெட்டில் இருந்து வந்தாலும் ஊரில் இருக்கும் சமயம் நடு இரவில் திடீர் என வீட்டில் யாருக்கேனும் கொடிய விஷம் கொண்ட பாம்போ அல்லது தேளோ, பூரானோ கடித்து விட்டால் அல்லது எதிர்பாராத ஏதேனும் அசம்பாவிதங்கள், சுகவீனங்கள் ஏற்பட்டு விட்டால் "செத்த நேரம் வெயிட் பண்ணுங்க தஞ்சாவூர் வர்ர வரைக்கும்" என்று விரைவில் உயிரை பறிக்க துடிக்கும் அந்த பாம்பு கடி, தேள் கடி விஷத்திடம் நாம் பாசத்தில் ரெக்குவஸ்ட் கொடுக்க முடியாது. உடனே பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளித்தாக வேண்டும். நீண்ட தூரம் பயணப்பட்டால் ஊசலாடும் உயிரும் பறந்து போய் விடும். எனவே இரவு நேர மருத்துவர் அல்லது எந்நேரம் யார் அழைத்தாலும் செவிமடுத்து ஓடோடி வந்து உதவக்கூடிய மனித நேயம் படைத்த ஒரு நல்ல மருத்துவர்,செவிலியர் நம்மூருக்கு மிக,மிக அவசியம்.

  நான் ஊரில் இருந்த அந்த ஒரு நாள் என் மூத்த மகனுக்கு நடு இரவில் சளித்தொல்லையால் மூச்சுக்குழல் அடைத்தும் கொஞ்சமும் வாய் விட்டு பேச முடியாமல் அவன் வாய் பேச இயலாதவன் போல் கை சைகையில் எங்கள் முன்னே இறைவனை பிரார்த்தித்ததும் நன்கு பகல் பொழுதில் விளையாடிக்கொண்டிருந்த அவனுக்கு இரவில் என்ன ஆயிற்று? என்று செய்வதறியாது அவனை கட்டி ஆரத்தழுவி அழுததும் இன்றும் என் கண்களில் நிழலாடுகின்றது. பிறகு பொழுது விடிவதற்கு முன்னர் சுரைக்கா கொல்லையில் இருக்கும் நமதூர் ஹாஜா முகைதீன் டாக்டரிடம் ஆட்டோவில் கொண்டு சென்றும் பிறகு அவர்கள் கிளினிக்கில் வைத்து சடைவேதும் அடையாமல் அவனுக்கு சிகிச்சை அளித்ததும் நினைவுகூறத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ் பிறகு அவன் சுகமடைந்தான்.

  கருத்து வேறுபாடுகள் பல இருக்கலாம். ஆஹா, இதில் சகோ. அஸ்லம் பெயர் வாங்கி விட்டு சென்று விடுவாரோ? என்று யாரும் ஏங்கி இந்த முயற்சிக்கு தடைகல்லாக நின்று விடாதீர்கள். பிடிக்கவில்லை எனில் ஒதுங்கி ஒரு ஓரமாக வேடிக்கை பார்க்கலாம். முயற்சிக்கு வேட்டு வைத்து விட வேண்டாம்.

  செவ்வாய் கிரகத்தில் மங்கல்யான் மூலம் அது ஒரு எலியாக இருக்குமோ? பனிக்கரடியாக இருக்குமோ? பாறைக்குள் ஒளிந்து பார்க்கும் ஏலியனாக (வேற்றுகிரகவாசி) இருக்குமோ? பிரமிடாக இருக்குமோ? பெண்ணாக இருக்குமோ? என சாத்தியப்படாததை தேடும் உலகில் இவ்வளவு பெரிய ஊரில் இரவு நேர மருத்துவர் ஒருவரை தேடுவது ரொம்ப வேதனையான விசயமேயன்றி இது வேறென்னவாக இருக்க முடியும்????

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது