கண் ஒரு அதிசயம்

அறிவியல் சக்திக்கு எட்டியவரை ஒரேயொரு கருவியில்தான் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறங்களை பிரித்து அறிய முடியும்.

இது ஒரு நுண்கருவி. விஞ்ஞானத்தின் பல்வேறு வகை நிறச் சேர்க்கைகளால் 5 லட்சம் வகை நிறங்களை உருவாக்கக் கூடும். இந்த சிறு கருவியால் மட்டுமே அத்தகைய நிற வித்தியாசங்களை உணர்ந்தறிய இயலும்.

அந்த கருவி வேறு எதுவும் இல்லை, நமது கண்கள்தான். இதனை இயக்குவதற்கு மின்சாரமோ, அணுத்திறனோ தேவையில்லை. இதன் நுட்பங்களை புரிந்து கொள்ள பெரிய பொறியியல் வல்லுணர்வு தேவையில்லை. நமது கண்ணின் கருவிழி வட்டமான விழியின் மையப்பகுதி தான் ஓரப்பகுதியை விட பொருட்களை தெளிவாக பார்த்து அறிகிறது. நல்ல பகல் வெளிச்சத்தில் கருவிழியின் மையமே, அதிக ஒளியை தெரிந்து கொள்கிறது. ஓரப் பகுதியால் மங்கிய ஒளியை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

இதுவே இரவு நேரங்கள் என்றால், கருவிழியின் மையம் குறைந்த ஒளியை காணுகிறது. மாறாக ஓரப் பகுதியில் அதிக வெளிச்சத்தை உணர முடிகிறது. இதற்கு காரணம் மிகவும் நுட்பம் வாய்ந்த பார்வைப் புலனாய்வு செல்களே ஆகும். இந்த அமைப்பின் அடிப்படையில், அவற்றுக்கு கழி செல்கள், கூம்பு செல்கள் என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. 7 மில்லியன் கூம்பு செல்கள் கருவிழியின் மையப் பகுதியில் இருப்பதாகவும், 130 மில்லியன் கழிசெல்கள் கருவிழி ஓரத்தில் அமிழ்ந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த செல்களுக்கான ஊட்டச் சத்துக்கள் வைட்டமின் மூலமே கிடைக்கிறது. இதனால் தான் வைட்டமின் குறைவு ஏற்பட்டால் கண் நோய்கள் தோன்றுகின்றன. நமது கண்கள் ஒரு வினாடியில் 40-ல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒரு முறை இமைப்பதற்கு எடுத்துக் கொள்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் தடவை கண்களை இமைக்கின்றான்.

கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக்களை கொல்லும் கிருமி நாசினி குணம் உண்டு. ஒரு மனிதனின் கண்ணீர் சுரபிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் கண்கள் வறண்டு, இறுதியில் குருடாகிவிடும்.

கண் (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை.

பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன (மனிதர்களின் பார்வை இவ்வாறானதே); அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன (பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே).

வார‌த்‌தி‌ல் குறை‌ந்தது இர‌ண்டு முறையாவது நா‌ம் உ‌‌‌ண்ணு‌ம் உணவில் கீரையைச் சேர்த்துக் கொ‌ண்டு வ‌ந்தா‌ல், முதுமையில் ஏற்படும் க‌ண் பார்வை கோளாறுகளை தடு‌க்கலா‌ம். 

ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌கிடை‌க்கு‌ம் கால‌ங்க‌ளி‌ல் அதனை அ‌வி‌த்தோ அ‌ல்லது உண‌வி‌ல் சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். இ‌தி‌ல் உ‌ள்ள வைட்டமின் ஏ கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்து கொள்வதனால், க‌ண் பா‌ர்வையை ‌சீராக வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். 

பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அ‌திகமாக உ‌ள்ளது. எனவே இவ‌ற்றை உ‌ண்டு வ‌ந்தா‌ல் க‌ண் பா‌ர்வை குறைபாடு உ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌க் கூட பா‌ர்வை‌த் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம். குளுகோமா நோயைத் தவிர்க்கலாம். 

கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்க‌ள், ‌கீரைகளை அ‌திக‌ம் உண‌வி‌ல் உ‌ட்கொ‌ள்வது க‌ண்ணு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.


K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

1 comment:

  1. உங்கள் கண்கள் நன்றாக இருந்தால் தான், இந்த கட்டுரையை படிக்க முடியும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது