அதிரை கல்விதந்தையின் மகன் IUMLகட்சியில் இணைந்தார் .


MKN ட்ரஸ்ட்டின் நிறுவனர் காதர்முகைதீன் அப்பாவின் உடன் பிறந்த சகோதரவீட்டு பேரரான  முன்னாள் கல்வி தந்தை SMS சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும் தொழில் அதிபருமான அபுல்ஹசன் . கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள முஸ்லீம் லீக் தலைமை அலுவலகத்தில் தலைவர் கே எம் காதர்முகைதீன் முன்னிலையில் முஸ்லீம் லீகில் இணைந்தார் . 

இவருடன் மற்றொரு சகோதரர் ஜலீல் அவர்களின் மகன் தஸ்லீம் ஆரிபும் கடந்த சில நாட்களுக்கு முன்னை முஸ்லீம்லீகில் தன்னை இணைத்துகொண்டார் . 

இந்நிலையில் இன்றுகாலை இருவரும் சொந்த ஊரான அதிராம்பட்டினம் வந்தனர். அவர்களை மரியாதை நிமித்தமாக நகர முஸ்லீம் லீக் தலைவர் கே கே ஹாஜா தலைமையில் ஒரு குழுவினர் வரவேற்று கட்சியின் சார்பில் சால்வை அணிவித்து  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததனர் . 

இதில் வழக்கறிஞர் முனாஃப்,அபூபக்கர்,சேக் அப்துல்லாஹ் , MR ஜமால் முஹம்மது , AIET கல்வி நிலைய நிறுவனர்  முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய அபுல் ஹசன் முஸ்லீம் லீகில் நான் இணைவதற்கு காரணம் முஸ்லீம் லீக் என்பது அரசியலின் ஆணிவேர் . இன்றைய அரசியல் கட்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்டது . இதன் வலிமையை உலகநாடுகளில் உள்ள பல அரசியல் கட்சிகயின் தலைவர்கள்  நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். முஸ்லீம் லீக் என்பது இளைஞர்களை மூளை சலவை செய்து வழிகெடுக்கும் இயக்கம் அல்ல . மாறாக மாற்றத்திற்கான அரசியலை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த கொள்கை பிடிப்புடன் உள்ள முஸ்லீம் லீக் கட்சியை வலுபடுத்த இன்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும் என கூறினார்.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

3 comments:

  1. Mr Abul Hasan is one year senior to me in the school. We had very good rapport by exchanging books and other study materials. Wishing him lot of success in his political career.

    ReplyDelete
  2. Indian Union Muslim League wishing him all success. Inshaa allaah.

    ReplyDelete
  3. Indian Union Muslim League wishing him all success. Inshaa allaah.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது