சென்னையில் SAVE INDIA FORUMசார்பாக நடைபெற்ற குஜராத்இனப்படுகொலைநினைவேந்தல் கூட்டம்!

சென்னையில் SAVE INDIA FORUM சார்பாக
நடைபெற்ற குஜராத் இனப்படுகொலை
நினைவேந்தல் கூட்டம்!
2002 ஆம் ஆண்டு நடந்தேறிய குஜராத்
இனப்படுகொலை நாட்டின் கூட்டு
மனசாட்சியையே உலுக்கியது. தேச
பிரிவினைக்கு பிற்பாடு, 2000 முஸ்லிம்கள்
படுகொலை செய்யப்பட்ட மிகவும் மோசமான
இனப்படுகொலை இதுவேயாகும். 250 நபர்கள்
காணாமல் போயினர். பெண்கள் கொடூரமாக
கற்பழிக்கப்பட்டனர். பெண்களையும்,
குழந்தைகளையும் குறிவைத்தே திட்டமிட்டு
நடத்தப்பட்ட இனப்படுகொலை இது. கலவரம்
தொடங்கிய ஒன்றறை மாதத்திற்குள்ளாக
ஏறத்தாழ 1,50,000 முஸ்லிம்கள் அகதிகள்
முகாம்களுக்கு தள்ளப்பட்டனர். 100 கோடி
மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
SAVE INDIA FORUM சார்பாக
ஜவஹர்
கிராண்ட் பேலஸ், டவுட்டன், புரசைவாக்கத்தில்
குஜராத் இனப்படுகொலை நினைவேந்தல்
கூட்டம் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு Save India Forum
தலைவரும், ஆவணப்பட இயக்குனருமான
கோபால் மேனன் அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆவணப்பட இயக்குனரும், சமூக ஆர்வலருமான
அமுதன் RP அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
Former IAS Officer and former Director of Action Aid India
மற்றும் எழுத்தாளர் ஸ்ரீ ஹர்ஷ் மந்தர் அவர்கள்
“குஜராத் இனப்படுகொலை நினைவேந்தல்” என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில
தலைவர் M. முஹம்மது இஸ்மாயில், விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.
திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின்
தலைவர் M.H. ஜவாஹிருல்லாஹ், NCHRO தேசிய
தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், CPI(M) மாநில
செயற்குழு உறுப்பினர் K. கனகராஜ், சமூக
ஆர்வலர் திவ்யபாரதி ஆகியோர் சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்துரை
வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில்
பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், திரைப்பட
தயாரிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக
ஆர்வலர்கள், பொது மக்கள் என ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
Share:

இறை இல்லத்தின் எஞ்சிய பணிக்கு உதவிடுவீர்-அதிரை ததஜ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக E C R ரோடு காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரே மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி (மூன்று தளம்) கட்டிமுடிக்கப்பட்டு ஐந்து நேரம் தொழுகை ஜூம்மா தொழுகை நடைபெற்றுவருகிறது பள்ளியின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த பொழுது பள்ளியின் முகப்பில் கூரை பள்ளியில் தொழுகை நடைபெற்றது பள்ளி கட்டுமான பணிகள் முடிவடைந்ததால் முகப்பில் உள்ள கூரை பிரிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒலூ செய்வதற்கும் பாத்ரூம் டாயிலேட் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது இந்த பணிகளுக்கு உங்களது பொருளாதார உதவிகளை வாரீ வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
தொடர்புக்கு : 9597128886, 9943447195, 9944020793
கனரா பேங் A/C NO.1201201001103 தழிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம் பட்டிணம்.கிளை .IFC CNRB0001201
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---  
Share:

மார்ச்.26 மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அரசியல் மாநாடு

மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அறிமுகப் பொதுக்கூட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற்றது..இதில் கட்சியின் கொடியை பொதுச் செயலாளர்  எம்_தமிமுன்_அன்சாரி அவர்களும், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத் அவர்களும் அறிமுகப்படுத்தி உரையாற்றினர்.இந்த புதிய கட்சி அறிமுக நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு மார்ச் 26 அன்று சென்னையில் நடைபெறும் என பொதுச் செயலாளர்  எம்_தமிமுன்_அன்சாரி அறிவித்தார்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

எஸ்.டி.பி.ஐ மௌலவி தெஹலன் பாக்கவி அவர்களின் மெய்சிலிர்க்கும் அறிவிப்பு!

நேற்று மக்காவில் ISF சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதற்கு சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பக்கவி அவர்கள் பங்கேற்றார்கள் நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கான கேள்விகளும் ஒதுக்கப்பட்டன....
ம.ம.க வை சார்ந்த முகைதீன் என்பவரின் கேள்வி : தற்போது தமிழகத்தில் அரசியல் பரபரப்பாக பேசப்படுகிறது.இதில் முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்சிகள் ம.ம.க,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் ஏன் ஒரே அணியில் நின்று தேர்தல் களத்தை சந்திக்க கூடாது.? அல்லது மூன்று பேரும் தமிழகத்தில் இருக்க கூடிய பெரிய கட்சிகளிடம் ஏன் கூட்டனி வைக்க கூடாது? இதில் உங்கள் நிலைப்பாடு என்ன ? ஒற்றுமையாக உங்கள் பங்கு என்ன ?
மௌலவி தெஹ்லான் பாக்கவி அவர்களின் பதில் : இந்த கேள்வி ஒரு நடுநிலையாளரிடமிருந்தும்,பொதுமக்களிடமிருந்தும் இருந்து வந்தால் அழகாக இருந்திருக்கும் ? ஆனால் நீங்கள் ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கின்றீர்கள் இந்த கேள்வியை நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சி தலைமையிடம் கேட்டதுண்டா....? சில மாதங்களுக்கு முன்பாக திருச்சி ஜமால் முஹம்மத் காலேஜில் சமூகத்தை சார்ந்த சில முக்கிய பிரமுகர்களால் சமூக ஒற்றுமைக்காகவும் அரசியலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்பதிற்காக அந்த முக்கிய பிரமுர்கள் எங்களுக்கு அழைப்பு கொடுத்தனர் அதில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன்,ம.ம.க வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் ஆகிய நானும் இருந்தோம். அந்த முக்கிய பிரமுர்கள் எங்களிடம் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன் நிறுத்தி எங்களிடம் பேசு வார்த்தை நடத்தினார்கள். நான் அங்கு கூறியது நிச்சயமாக வர வேரவேற்கின்றோம் அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயமாக எஸ்.டி.பி.ஐ ஒற்றுமைக்கான படியில் முதல் ஆளாக இருக்கும் என வாக்குறுதியும் அளித்தேன்.அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 15 நாட்களுக்கு பிறகு அதில் ஒரு கட்சி நாங்கள் தி.மு.க வின் பக்கம் கூட்டனியாகவும் இன்னொரு கட்சி அ.தி.மு.க வு க்கு ஆதரவாகவும் கூறிவிட்டனர்.ஆனால் அதில் எஸ்.டி.பி.ஐ யாருடன் கூட்டனி என கூறவில்லை.அந்த கூட்டத்தில் மட்டுமல்ல எஸ்.டி.பி.ஐ நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் நான் ஒற்றுமையை பற்றி கூறியிருக்கிறேன்.ஒற்றுமையின் முதல் படியாக SDPI இருக்கும் என வாக்குறுதியும் அளித்து வருக்கின்றோம்.இங்கும் கூறுகின்றேன் அப்படி ஒன்று ஏற்படுமானால் எஸ்.டி.பி.ஐ நிச்சயமாக முதல் படியாக இருக்கும்" என்று கூறினார்.
Share:

அவனும் பார்கிறான்!, இவர்களும் பார்கிறார்கள்!! அப்படி என்றால், அவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?


கடந்த 08/02/2016 திங்கள் கிழமை அன்று இந்த வலைதளத்தில் “அதிரையில் எது நடக்குதோ இல்லையோ! இது நடந்து கொண்டே இருக்கும் என்ற தலைப்பில் ஒரு பதிவை பதிவு செய்திருந்தேன்.

அந்தப் பதிவை மீண்டும் பார்க்க நினைப்பவர்கள், இந்த LINK-ஐ அமுக்கவும்.இன்றோடு “29/02/2016 திங்கள் கிழமை சரியாய 20 நாட்கள் ஆகியும், உடைந்து போன தெருவிளக்கை மாற்றி அமைக்க பேரூர் நிர்வாகமோ அல்லது பொது மக்களோ முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை.

[இந்த இடம் "கல்லுக்கொல்லை, மிலாரிக்காடு, சி.எம்.பி.லைன் இம்மூன்று பகுதிகளும் சங்கமிக்கும் இடமாகும்.]

எந்நேரமும் பிசியாக இருக்கும் இடம், உடைந்து தொங்கும் மின் விளக்கு எல்லோருடைய கண்களுக்கும் படும்படியாக இருக்கும் இடம்.  

உடைத்தவனும் பார்கிறான்!, உடைக்காதவர்களும் பார்கிறார்கள்!!. அப்படி என்றால், உடைத்தவனுக்கும் உடைக்காதவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

அன்று “07/02/2016-ஞாயிற்றுக் கிழமை காலை 10.00-மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இன்று “29/02/2016-திங்கள் கிழமை அதிகாலை 05.00-மணிக்கு நான்  பார்க்கும் நேரம் வரைக்கும் இப்படித்தான் தொங்கிக் கொண்டு இருக்கின்றது.

இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

புதிய பாதை...புதிய பயணம்,,,,,மனிதநேய ஜனநாயக கட்சி

மனிதநேய மக்கள் கட்சியின் கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு எங்கள் தரப்பில் தொடக்கப்பட்டது.
அந்த வழக்கு கடந்த பிப்ரவரி 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இன்று (28.02.2016) கும்பகோணத்தில் எங்கள் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் 'புதிய பாதை- புதிய பயணம்' என்ற முழக்கத்தோடு‪#‎மனிதநேய_ஜனநாயக_கட்சி‬ என்ற பெயரில். அரசியல் கட்சியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. 
இதன் தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று இரவு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் நானும், கட்சியின் பொருளாளராக ஹாரூன் ரஷீதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். புதிய தலைமை நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்
வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கோரிக்கைகள் மதிக்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொதுவாழ்வையும் செயல்படுத்த களம் புகும் எங்களுக்கு அனைவரும் அதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கி்றோம்.
இறையருளால் எமது புதிய பயணம் புதிய பாதையில் தொடங்குகின்றது
இவண்
M.தமிமுன் அன்சாரி 
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28_02_2016
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
புதிய பாதை
புதிய பயணம்Share:

அதிரை மேலத்தெரு பகுதி மக்களுக்கு நன்றி -வீடியோ

அதிரை பேரூர் மன்றத்திற்கு உட்பட்ட 16,17வார்டு மேலத்தெரு பகுதியில் சில வாரங்களாக குடிநீர் விநியோகம் சீராக வழங்கபடாமல் இருந்த நிலையில் தற்போது சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேலும் இது குறித்த கூடுதல் தகவலினை அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் வீடியோ வாயிலாக அளித்து உள்ளார்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

தமீம் அன்சாரி புதிய கட்சி துவக்கம்-ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்த தமீமுன் அன்சாரி புதிய கட்சி ஒன்றினைத் தொடங்கியுள்ளார். முன்னதாக, மனித நேய மக்கள் கட்சியிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது எனவும், தாங்கள் கூட்டவிருக்கும் பொதுக் குழுவே உண்மையான பொதுக் குழு எனவும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தமீமுன் அன்சாரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமீமுன் அன்சாரி, "மனித நேய ஜனநாயக கட்சி"யை தொடங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து சென்னையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

அதிரையில் வட்டிக்கு எதிராக விழிப்புணர்வு பேனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதிரையின் பிரதான இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கடந்த மாதம் முதல் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக இந்த மாத பேனர் லோன், வட்டி போன்ற தீமைகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத பிளக்ஸ்களுக்கான ஸ்பான்ஷர் செலவை அதிரை மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த 2 நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. வரும் மாதத்திற்கான பிளக்ஸ் செலவை ஏற்றுக்கொள்ள முன்வருவோர் தொடர்பு கொள்ளவும்.

கமாலுதீன் 9543577794
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

கூகிலின் பார்வையில்பட்ட குட்டிமாமா கடை

அதிரையை உற்று நோக்கிய (Google) கூகில்.!" என்ற பதிவில் எழுதியிருந்தேன். வலைப்பூக்கள் மற்றும் இணையத்தில் சேர்மன், அதிரை என்ற குறிச்சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் கூகிலின் தானியிங்கி தேடல் (SPY-BOT) நுட்பத்தில் இது சாத்தியமாகி இருக்கக்கூடும். தற்போது வெளியாகியுள்ள உலகவரைபடத்தின் (GOOGLE MAP-2012) மேம்பட்ட பதிப்பில் கூகிலின் கழுகுக்கண்கள் அதிரையின் சந்துபொந்துகளிலெல்லாம் நுழைந்துள்ளது வியப்பாகவும், பிரமிப்பாகவும் உள்ளது!


அதிரையில் பிறந்த எத்தனை பேருக்கு நெசவுக்காரதெருவிலுள்ள குட்டிமாமாகடை தெரியும்? கூகில் அதையும்கூட துல்லியமாக உலக வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது! சேட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட வரைபடத்தை சுமார் 50 மீட்டர் (கிட்டத்தட்ட தென்னைமர) உயரத்திலிருந்து பார்ப்பதைப்போன்று தெளிவாக பார்க்க முடிகிறது. மட்டுமின்றி, கடைத்தெருவிலுள்ள கிராணி மளிகை, நூர்லாட்ஜ், தக்வா பள்ளி மையவாடி முதற்கொண்டு துல்லியமாகக் காண முடிகிறது.

2003 இல் ஈராக்கை ஆக்கிரமிக்க நடந்த இரண்டாவது யுத்தத்தின்போது அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் "அமெரிக்க சாட்டிலைட் ஈராக்கிலுள்ள ஒவ்வொரு வீட்டின் ஜன்னலையும் ஊடுறுவி துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும்" என்று சொன்னார். தற்போதைய யுத்தங்களில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் இத்தகைய நவீன தொலைநுட்ப உதவிகள்மூலமே எதிரிகளின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி, ஆக்கிரமிப்புப் போர்களில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது!

கூகிலில் இலவசமாகக் கிடைக்கும் இந்த வசதியின்மூலம் உலகின் எந்தப்பகுதியையும் எங்கிருந்தும் பார்க்கலாம். கூகில் எர்த் இணையத்தில் வெளியான புதிதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவரும் ஆன பில்கேட்ஸ் வீட்டின் வாகன நிறுத்தம்வரை படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் உலாவந்தது. நமது முன்னாள் குடியரசு தலைவர் மேதகு.A.P.J.அப்துல் கலாம் அவர்களும் இந்த வசதியால் நம்நாட்டு பாதுகாப்பு அரண்கள்குறித்த தகவல் தீவிரவாதிகளிடமும் எதிரிநாட்டிடமும் செல்லக்கூடும் என்று அச்சம் தெரிவித்தார். இணைய தொழில்நுட்ப வளர்ச்சி,ஒருபக்கம் வியப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தனிமனித சுதந்திரத்தில் எல்லைமீறுகிறதோ என்ற கவலையும் நியாயமாகவே படுகிறது.

ஒருகாலத்தில் மாடு காணாமல்போனால் 14 ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால் எல்லா கிராமங்களையும்  பேரூந்து சுற்றிக்கொண்டு பட்டுக்கோட்டைக்குச் செல்வற்குள் வழியில் மாட்டைக் கண்டுபிடித்து விடலாம் என்று நகைச்சுவையாகச் சொல்லப்பட்டது. உலகம் போகிற போக்கைப் பார்த்தால், காணாமல்போன மாட்டையும் கூகில் வரைபட உதவியால் எதிர்காலத்தில் கண்டுபிடிக்க முடிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

நெசவுத்தெரு குட்டிமாமா கடைவரை வரையில் கூகிலும், ஈராக் வீடுகளிலுள்ள ஜன்னல்வரையில் அமெரிக்காவின் சாட்டிலைட்டும் கண்காணிப்பதற்கே கவலைப்படுபவர்கள், மனிதமனம் பேசுவதை,அவர்களின் பிடரியிலுள்ள உயிர் நரம்பைவிடச் சமீபமாக நெருங்கி கண்காணிப்பதாக ஒருவன் சொல்லும்போதும் அச்சம் ஏற்பட வேண்டும்தானே! :)

050.016 : மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் அறிவோம்;அன்றியும் (அவன்) பிடரியிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம்.

050.016 وَلَقَدْ خَلَقْنَا الإنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

050.016 It was We Who created man, and We know what dark suggestions his soul makes to him: for We are nearer to him than (his) jugular vein.
மீள்பதிவு
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

தாமரையுடன் சதக்கத்துல்லா பாய்

சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடர்ந்து நீடிக்கும் என்று அதன் தலைவர் சதக்கத்துல்லா கூறியுள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை உறுதி செய்வதற்காக பாஜக தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று சென்னை வந்துள்ளார்
Image result for தமிழக பாஜக கூட்டணியில் இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடர்கிறது: சதக்கத்துல்லா
தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அவரை, அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் சதக்கத்துல்லா சந்தித்து கூட்டணி குறித்து பேச்சவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிரகாஷ் ஜவடேகரும், சதக்கத்துல்லாவும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடர்கிறது என்று சதக்கத்துல்லா தெரிவித்தார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக . கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. தலைமை எடுக்கும் முடிவினை ஏற்பதாகவும் அவர் தெரிவித்தார். சதக்கத்துல்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

மரண அறிவிப்பு

அதிரை சேது ரோட்டை  சேர்ந்த மர்ஹூம் செ.அ.முஹம்மது அலியார் அவர்களின் மகனும் , மர்ஹூம் Y.முஹம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் செ.அ.முஹம்மது பாருக் அவர்கள் மற்றும் செ.அ.சரபுதீன் அவர்களின் சகோதரரும்,புர்ஹானுத்தீன், அஹமது சபி ஆகியோரின்  மாமனாரும்,சாதிக், சேக் முஹம்மது இவர்களின் தகப்பனாருமான செ.அ.துல்கர்னைன் அவர்கள் இன்று காலை 6 மணியளவில்  வபாத்தாகிவிட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம் குறித்த  விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி ? ஜவடேகரைசந்தித்தார் சரத்குமார் !

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகபொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ்ஜவடேகர், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர்,
சென்னையில் சரத்குமாரை சந்தித்தனர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்குமாறு, சரத்குமாருக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை சரத்குமார் ஏற்றுக் கொண்டார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இதுவரை இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகியதாக
அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனாலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. இந்த சூழலில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று சென்னை வந்துள்ளார். தேசிய
ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிகட்சி ஏ.சி.சண்முகம், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்சதக்கத்துல்லா, இந்திய மக்கள் கட்சிநிறுவனர் தேவநாதன்
ஆகியோருடன் கூட்டணி தொடர்பாக ஜவடேகர்
பேச்சுவார்த்தை நடத்தினார்.

Share:

இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரி அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன.

இதைப்போன்ற சிறப்பு இன்னும் 823 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் வரும் என்ற நிலையில் அந்த சிறப்புகள் என்னவென்று அறிந்து கொள்வோமா..?

மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன.

அடுத்து இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இதைப்போன்ற கிழமைகளின் எண்ணிக்கை அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

4-ஆல் மீதியின்றி வகுபடும் ஆண்டுகளே லீப் வருடம் என்று நாமெல்லாம் படித்திருக்கிறோம். ஆனால், லீப் வருடம் என்பது இதற்கு மேலும் பல ஆழ்ந்த கணக்குகளை உள்ளடக்கியது.

ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலத்தை பொறுத்ததே.

பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர 365.242 நாட்களாகின்றன. கணக்கிட எளிதாக இருக்கும் என்பதற்காக 365.25 நாட்கள் என கணக்கிடப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது.

எனவேதான் 4 ஆல் மீதியின்றி வகுபடும் ஆண்டுகள் லீப் ஆண்டுகள் என பெயரிடப்பட்டு பிப்ரவரி மாதம் 29 நாட்களாக கணக்கிடப்படுகிறது.

ஆனால், கணக்கு இதோடு முடிந்துவிடவில்லை. பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர 365.24 நாட்கள் என்பது இதை விட துல்லியமான கணக்கு என்பதால் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் குறைக்கப்படுகிறது.

எனவே 1700,1800,1900 போன்ற ஆண்டுகள் 4 ஆல் மீதியின்றி வகுபடும் என்றாலும் அந்த வருடங்கள் லீப் வருடங்கள் அல்ல; இந்த ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களே.

கணக்கு மேலும் தொடர்கிறது; 365.242 நாட்கள் என்பது மிக மிக துல்லிய கணக்கு என்பதால், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒருநாள் கூட்டப்படுகிறது. எனவே 1200, 1600, 2000 போன்ற ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்களே.

மொத்தத்தில் லீப் வருடத்திற்கான கணக்கு இதுதான்; 
ஒரு ஆண்டின் 4 இலக்குகளில் கடைசி 2 இலக்குகள் பூஜ்யமாக இல்லாவிடில் அந்த 2 இலக்குகளும் 4 ஆல் மீதியின்றி வகுபட்டால் அது லீப் வருடம்; பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள். எடுத்துக்காட்டு; 1972, 1976, 1980, 1984 போன்ற வருடங்கள்.
ஒரு ஆண்டின் கடைசி 2 இலக்குகள் பூஜ்யமாக இருந்து அது 400 ஆல் மீதியிறி வகுபடா பட்சத்தில் அது லீப் ஆண்டல்ல; பிப்ரவரிக்கு 28 நாட்களே.

எடுத்துக்காட்டு; 1700, 1800, 1900, 2100 போன்ற ஆண்டுகள். அதே சமயம் அது 4 ஆல் வகுபட்டால் அது லீப் ஆண்டு. எடுத்துக்காட்டு; 1600, 2000 போன்ற ஆண்டுகள்.
இதுதான் லீப் வருடக் கணக்கீட்டீன் முழுக்கதை.

ஏன் பிப்பிரவரி மாதத்துக்கு மட்டும் இருபத்தெட்டு நாட்கள் வந்தன? இது ரோமர்கள் அன்று செய்த தவறு என்கின்றார் மெலோனிஸ் மெக்கஃபீ.

ரோமர்களின் நாள்காட்டியை ரொமுலஸ் என்னும் மன்னன் வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாகத் தான் வடிவமைத்திருக்கிறார்.

மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது. ஆனால் லூனார் வருடத்துக்குத் தேவையான நாட்கள் இந்த நாள்காட்டியில் இல்லை.

பருவங்களைக் கணக்கில் கொண்டே இந்த நாள்காட்டி அமைக்கப் பட்டது. டிசம்பருக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையே எத்தனை நாட்கள் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.

ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த நாள்காட்டியை இன்னும் சரிசெய்து வருடத்துக்கு 354 நாட்கள் வரும்படி செய்தார். அவர்தான் ஜனவரி, பிப்ரவரி என்னும் இரண்டு மாதங்களையும் இணைத்தவர்.

அப்போது ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே இருபத்து எட்டு நாட்களுடன் தான் இருந்தன. ஆனால் என்ன செய்ய இரட்டை எண் என்பது அந்நாட்களில் அபசகுனமாகக் கருதப்பட்டது. எனவே ஜனவரி மாதத்துக்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளைக் கூட்டினான். அப்போது வருடத்தின் நாட்கள் 355 என்றும், ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது.

ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன் வருத்தப் பட்டது. பிப்ரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும், தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றும் மாதமாக இருந்ததால் பிப்ரவரிக்கு இருபத்து எட்டு நாட்கள் என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்ரவரி என்பதன் விளக்கமே சுத்தப் படுத்துதல்என்பது தான்.

இந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை. காரணம் அது பருவங்களைச் சரியாக காட்ட முடியவில்லை. பூமி சூரியனைச் சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அதன் காரணம்.

எனவே அவர்கள் பிப்ரவரி இருபத்து மூன்றாம் நாளுக்குப் பின், இருபத்து ஏழு நாட்கள் கொண்ட புதிய மாதம் ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் அது பரவலாக ஒத்துக் கொள்ளப்படவில்லை.

கிமு 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் (SUN) சூரியக் காலண்டரை அறிமுகப்படுத்தினார்.

அவர் தான் வருடத்துக்கு 10 நாட்களை அதிகரித்து, பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.

இப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share: