அதிரை பகுதியில் மூடுபனி 2000 மீனவர்கள் நடுக்கடலில் தவிப்பு


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், மறவக்காடு, ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 900 பைபர் படகுகளில் 2000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள். இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் கடலுக்கு சென்று விட்டு இரவு முழுவதும் வலைவிரித்து மீன்பிடித்து விட்டு அதிகாலை 5 மணி முதல் கரைக்கு வரத் தொடங்குவார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மூடுபனி ஏற்பட்டது. அப்போது பைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மழையில் நனைந்ததுபோல பனியில் நனைந்தனர். சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களே தெரியாதபடி கடற்பரப்பில் பனி மூடியது.

வழக்கமாக அதிகாலை 3 மணிக்கே கடலில் இருந்து புறப்படத் தொடங்குவார்கள். மூடுபனி காரணமாக 7 மணி வரை கடலில் இருந்து புறப்படவில்லை. விடிய விடிய கொட்டும் பனியில் நனைந்தவாறு இருந்தனர். 7 மணிக்கு பின்னரே புறப்பட்டு காலை 9 மணிக்குதான் மீனவர்கள் கரைக்கு வந்தனர். 


---dk


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது