இமாம் ஷாபி பள்ளியில் 42 வது ஆண்டு விழா (புகைப்படங்கள் இணைப்பு)அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் உயர்நிலை பள்ளியின் 42வது ஆண்டு விழா இன்று மாலை பள்ளியின் வளாகத்தில் ஆலிம் ஷேக் உமர் கிராஅத்துடன் துவங்கியது. பள்ளியின் பொருளாளர் அஹமது இப்ராகிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக டாக்டர் எஸ் ஹாஜா முஹைதீன் MBBS,DCH.,FPC,அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் ஆப்தா பேகம் , காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலை பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஹாஜி ஹாஜா முகைதீன், பரக்கத் சார், கோட்டை அமீர் விருது பெற்ற MB அபூபக்கர், தமிழ்துறை பேராசிரியர் அப்துல் காதர் ,காதர் முகைதீன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்சிக்கு பின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு  பரிசுகள் வழங்கி கவுரவிக்கபட்டது. பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நமதூர் ஹைதர் அலி ஆலிமின் மகன் அமீர் அம்ஷா மற்றும் பாலாஜி ஆகியோர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கி கவுரவிக்கபட்டதுடன் அதிக சிரத்தையுடன் பணி  செய்து பள்ளியின் 100% வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பரிசும் பண முடிப்பும் வழங்கி சிறப்பு செய்யபட்டது.

 இவ்விழாவில் பெற்றோர்கள் மாணாக்கர்கள் என ஆயிர கணக்காணோர் கலந்து கொண்டனர்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது