கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை | உலக பொருளாதார பேரவை


உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன.

இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050-ம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.

தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் இரட்டிப்பாகும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

இந்த தகவலை உலக பொருளாதார பேரவை அமைப்பு வெளியிட்டுள்ளது.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

4 comments:

 1. This news gather from one India, its published almost 3 weeks before

  ReplyDelete
 2. This news gather from one India, its published almost 3 weeks before

  ReplyDelete
 3. உங்கள் மேலான கருத்துக்கு நன்றி, ஆனால் இப்படி பின்னால் வந்து குழப்ப வேண்டாம், உண்மையாக வரலாமே.

  ReplyDelete
 4. நானும் one India-வில் படித்தேன் தான், ஆனால் அனைவரும் one India -வை படிப்பதில்லையே. அதனால் முக்கியமான தகவல்களை மற்ற தளத்திலிருந்து இ(சு)டுவது தப்பில்லை. காக்கா ஜமால் முஹம்மது அவர்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது