பெண்களே! உங்களைவிடவா இந்த ஐபோன் அழகு?




தற்போதைய பெண்கள் நாகரிகமாக  இருப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது போல் முழுமை அடைகின்றதா அல்லது அடைந்து விட்டதா என்றால் அதுதான் இல்லை.

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!

மேல் படிப்பு படித்து பட்டம் வாங்கிய மகள், தான் புதியதாக வாங்கிய.. I phone-ஐ..தனது கிராமத்து தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!

அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம்
கூட வங்கி போட்டுள்ளார்..!!

தந்தை:-
யாம்மா, வாம்மா, பட்டம் எல்லாம் வாங்கினீயே, எப்படிம்மா இருக்கே...


மகள்:-
பரவாயில்லேப்பா, நான் நல்லாத்தான் இருக்கேன், அப்பா நீங்க எப்படிப்பா இருக்கீங்க, வீட்டிலே எல்லோரும் நலமாப்பா, விவசாயம் எல்லாம் எப்படிப்பா இருக்கு.......?


தந்தை:-
எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் பரவாயில்லேம்மா. அது என்னம்மா உன் கையிலே வெத்திலை பெட்டி மாதிரி ஏதோ மினுமினுக்குது...? உன் பாட்டிக்கு வெத்திலை பெட்டி வாங்கிட்டு வந்து இருக்கியாம்மா...?


மகள்:-
அப்பா.. இது வெத்திலை பெட்டி இல்லை, இது நான் புதுசா வாங்கின ஐ-போன் அப்பா..


தந்தை:-
ஐ-போனா..? அப்படீன்னா அது என்ன போனும்மா.


மகள்:-
உங்களுக்கு சொன்னா புரியாது அப்பா.. இது தான் அப்பா இப்போ பேஷன், இதுலே உலகத்தையே பார்த்துடலாம்.   


தந்தை:-
அப்படியாம்மா, இந்த போன் எவ்ளோ மா..??


மகள்-:
Rs-40,000 அப்பா..!!


தந்தை-:
அது என்னம்மா, இந்த போனோடு என்னம்மோ ஒட்டிக்கிட்டு இருக்கு, அது என்னாம்மா....?


மகள்:-
அதாப்பா....! அதுதான் இந்த போனுடைய கவசம், அது இல்லாட்டி போன் கெட்டுவிடும் அப்பா......! அதை “கவர் மற்றும் “ஸ்கிரீன் கார்டு என்று சொல்வார்கள்.


தந்தை:-
இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??


மகள்:-
Rs-4,000 தான் அப்பா..!!


தந்தை:-
என்னது நாலாயிரமா..??


மகள்:-
ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??


தந்தை:-
ஏம்மா 40,000 போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??


மகள்:-
என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான் பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க அப்பா இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்'ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!


தந்தை:-
அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க..? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?

நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற..

இந்த போனை விட நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?

நீ முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..?

அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..??
யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??

இந்த i phone-ஐ விட நீ தான் என் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!! என்று கூறினார் தந்தை..!!!

இந்த தந்தையின் அறிவுரை.. அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும்.. தேவை எனவே.. தான் இதை இங்கு பதிவு செய்கிறேன்..!!

சகோதரர்களே.. உங்கள் சகோதரிகளுக்கும் பாதுகாப்பை பற்றி சொல்லி புரிய வையுங்கள்..??

நன்றி..!!!

நாகரிகமாகத் திரிபவர்களாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை மற்றவர்களுடன் பகிரமாட்டார்கள்.... இதை வாசித்த ஏனையவர்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com




---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---



Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது