வாழ்க்கையின் ஒரு பக்கத்தில் இப்படியும் நடக்கலாம்! மறுபக்கத்தில் அப்படியும் நடக்கலாம்!! இன்னொரு பக்கத்தில் எதுவும் நடக்கலாம்!!!.

வாழ்க்கை என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு கட்டமைக்கு அதாவது வரம்பு உள்ளது. அதன் அடிப்படையில்தான் ஆறறிவு படைத்த மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.

ஒரு வார்த்தையில் “வாழ்க்கை என்று சுலபமாக சொல்லும் மனிதனுக்கு, அதன் அர்த்தம் விளங்குவது இல்லை, விளங்கிக் கொள்ளவும் முடியாது, காரணம் வாழ்க்கை என்பது ஒரு வார்த்தைதான், இருந்தாலும் அதன் அர்த்தங்கள் பல கோடியை கடந்து சென்றாலும் நிறைவும் பெறாது, முடிவும்  பெறாது.

அப்படியாகப்பட்ட வாழ்க்கையின் ஒரு பக்கத்தில் இப்படியும் நடக்கலாம், மறுபக்கத்தில் அப்படியும் நடக்கலாம், இன்னொரு பக்கத்தில் எதுவும் நடக்கலாம், ஆனால், "எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என்று யாராவது சொல்லமுடியுமா? எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பிரச்சனை ஒரு வார்த்தை, அந்த பிரச்சனையின் தன்மைகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரேமாதிரியாக இருப்பது இல்லை. என்றாலும் கூட, பிரச்சனை இல்லாமல் மனிதனால் வாழமுடியவில்லை.

நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துயரமில்லை, ஏன் இப்படி நடக்குது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிம்மதி இல்லை.

நிம்மதியை இழந்த சிலர், கொஞ்சங்கூட, அதாவது ஒரு நொடிப்போழுதேனும் சிந்திக்காமல், தற்கொலைக்கு முயலுகின்றனர், இறுதியில் தற்கொலையில் மாய்ந்து விடுகின்றனர். இதனால் என்ன இலாபம் அவர்களுக்கு?

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு துணிச்சல் இருக்கும்போது, வாழ்ந்து காட்ட துணிச்சல் இல்லையா? வாழ்க்கை வாழ்வதற்கே அன்றி, தற்கொலை செய்து கொள்வதற்கு அல்ல.

துயரமா! அல்லது நிம்மதியா!! தேர்வு செய்து அதற்க்கு ஏற்றாற்போல் வாழ்வது அவரவர் கடமை. ஆனால், எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து காட்டனும் என்கிற மனநிலையே இறுதில் வெற்றி பெறும், இதுதான் உண்மை, உறுதி.


வாழ்க்கையையும், பிரச்சனையையும் பின்னிப்பின்னி எழுதினால் எழுக்கொண்டே போகலாம், அதற்க்கு எல்லையே கிடையாது, ஆனால் ஒருவருடைய வாழ்க்கைக்கு எல்லை உண்டு அதாவது முடிவு உண்டு, அப்படிஎன்றால் பிரச்சனைக்கு எல்லை இல்லையா? முடிவு இல்லையா?

இன்ஷா அல்லாஹ், தீர சிந்திப்போம், சரியாக செயல்படுவோம், பிரச்சனை இன்றி முறையாக வாழ முயற்சிப்போம்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது